Tuesday, May 22, 2018

GNANAPPANA





ஞானப்பான


சோகம் தந்த ராகம் - J.K. SIVAN சமீபத்தில் பூந்தானத்தை நாம் சந்திக்கவில்லை. அவரது ஞானப்பான செய்யுள்களை ரசிக்கவில்லை. எனவே அவரைத்தேடிக் கண்டுபிடித்து உங்களிடம் கொண்டு வருகிறேன். குருவாயூர் உண்ணி கிருஷ்ணனுக்கே பிடித்த பாடல்கள் எனக்கும் உங்களுக்கும் பிடிக்காமல் போகுமா? உயர்ந்த வாழ்க்கை தத்துவங்களை எளிமையான மலையாள வார்த்தைகளில் பூந்தானம் சொல்வதை இன்னும் மலையாளிகள் நாள் தோறும் நினைவு கூர்கிறார்களே .

 എത്ര ജന്മം പ്രയാസപ്പെട്ടിക്കാലം അത്ര വന്നു പിറന്നു സുകൃതത്താല്‍! എത്ര ജന്മം മലത്തില്‍ കഴിഞ്ഞതും എത്ര ജന്മം ജലത്തില്‍ കഴിഞ്ഞതും എത്ര ജന്മങ്ങള്‍ മണ്ണില്‍ കഴിഞ്ഞതും എത്ര ജന്മം മരങ്ങളായ് നിന്നതും എത്ര ജന്മം മരിച്ചുനടന്നതും എത്ര ജന്മം മൃഗങ്ങള്‍ പശുക്കളായ് അതുവന്നിട്ടിവണ്ണം ലഭിച്ചൊരു മര്‍ത്യജന്മത്തിന്‍ മുന്‍പേ കഴിച്ചു നാം എത്രയും പണിപ്പെട്ടിങ്ങു മാതാവിന്‍ ഗര്‍ഭപാത്രത്തില്‍ വീണതറിഞ്ഞാലും പത്തുമാസം വയറ്റില്‍ കഴിഞ്ഞുപോയ് പത്തു പന്തീരാണ്ടുണ്ണിയായിട്ടും പോയ്

 Ethra janmam prayaasappettikkaalam Athra vannu pirannu sukruthathaal! Ethra janmam malathil kazhinjathum
Ethra janmam jalathil kazhinjathum
Ethra janmangal mannil kazhinjathum
Ethra janmam marangalai ninnathum
Ethra janmam marichhu nadannathum
Ethra janmam parannu natannathum
Ethra janmam mrugangal pashukkalai
Marthya janmathin mumbe kazhichu naam
Ethrayum panippettingu maathaavin
Garbha paathrahil veenatharinjaalum Pathu maasam vayattil kazhinju poy Pathu pantheeraandunniyaayittum poy

 அடேய், எத்தனை ஜென்மங்கள் நீ பலபிறவிகளாக பிறந்து படாத பாடு பட்டு கடைசியாக இந்த மானுட பிறவி எடுத்திருக்கிறாய். எந்த பிறவியிலோ செய்த புண்ணியமடா அது. நினைத்து பார்,

எத்தனை ஜென்மங்களில் நீ மனித மிருக மற்ற ஜீவன்களின் மல மூத்திரங்களில் புழுக்களாக உழன்று வாடினவன். தரையையே பார்க்காமல் தண்ணீரிலேயே மீன் போன்ற நீர் வாழ் ஜந்துக்களாக எத்தனை பிறவிகளோ? சேற்றிலும் சகதியில், புழுதியிலும், சாக்கடையில் எத்தனை பிறவிகள் புழுக்களாகவோ பிறந்திருப்பாயோ? கவனிப்பாரின்றி மரமாக கால் வலிக்க நின்று வெட்டப்பட்டது எத்தனை பிறவிகளோ? எள்ளும் தண்ணீரும் இன்றி காற்றில் நிற்க தங்க இடமின்றி திக்கற்ற ஆவிகளாக உலவியது எத்தனை எத்தனை பிறவிகளோ? பசுக்களாக, மிருகங்களாக சில பிறவிகளும் கூட இருந்திருக்கலாம்.இப்படியெல்லாம் திக்கி திண்டாடி, தடுமாறி கடோசியில் கிடைத்தது இந்த மனித பிறவி.

 இதைப்போய் வீணாக்கலாமா? ஒவ்வொரு கணமும் ஈடு இணையற்றது அல்லவா?.

அப்படி கிடைக்கமுடியாத ஒரு பிறவி ஒரு அம்மா வயிற்றில் குடியேறி பத்து மாத காலம் சுகமாக தங்கி பராமரிக்கப்பட்டு வெளியே விழுந்து பேர் வைக்கப்பட்டு, வளர்க்கப்பட்டு பத்து பன்னிரண்டு வருஷங்கள் குழந்தையாக செல்லத்தோடு வளர்ந்தவர்கள் நாம்.

 பிறகு??

 குழந்தையாக செல்லமாக இருந்த நாம் ''தேகம், உடம்பு'' (BODY) ஆகிறோம். அவ்வளவு தானா? எவருக்குமே உண்மையில் ''நான்'' யார் என்று அறிய கொஞ்சமும் சிந்தனை, எண்ணம் இல்லையா? சரி, எத்தனை காலம் இப்படி வாழ்வோம் என்றாவது தெரியுமா? ஹுஹும்.. எது சாஸ்வதம், சத்யம் என்றாவது ஒரு துளி யோசனை, சிந்தனை, ஆராய்ச்சி, நமக்குள்ளே ஏற்பட்டது உண்டா? நீர் மேல் குமிழியாம் இந்த யாக்கை என்று யாரோ பாடினது கேட்டோம் அதன் அர்த்தம் புரிந்ததா?அந்த குமிழி மூச்சு விடுகிறதா? ஆமாம். அந்த குமிழியில் காற்று தானே கொப்புளமாக ஜொலித்தது. அது தான் நமது நிலையம். குமிழி வெடித்து சிதறியது போல் நம் மூச்சும் டப்பென்று ஒரு நேரம் நின்று விடும். கொஞ்சம் கொஞ்சமாக சுவாசம் அடங்கிவிடும். இது தான் நம் வாழ்க்கை. இவ்வளவு சுருக்கமான, குறைந்த வாழ்நாளில் ஒரு நிமிஷமாவது, அருணகிரி நாதர் சொன்னது போல் அரை நிமிஷ நேர மட்டிலாவது கிருஷ்ணனை நினைத்தாயா? துளியாவது நன்றியோடு நினைக்க வேண்டாமா?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...