Friday, May 25, 2018

MADURAI MANI IYER


தியாகராஜ சங்கீதம்  J.K. SIVAN

   மனமே  சொல்வதை கொஞ்சம் கேளேன்


பூரண சந்திரிகா  ஒரு திவ்யமான சுக ராகம்.  இதில் தியாகராஜ ஸ்வாமிகள் படைத்த கீர்த்தனை ஒன்று  ''தெலிசி ராம''  இந்த கீர்த்தனையை தனது ஸ்வரப்ரஸ்தார சஞ்சார நிரவலில்  மதுரை மணி அய்யர் குரலில் கேட்கும் போது ராமநாம பாராயண சுகம் கிடைக்கும் என்பது காரண்டீ.   மணி அய்யருடன் வேம்பு அய்யர்  பாடுவார்.   வேம்பு அய்யர் மகன் தான் பிற்காலத்தில் மணி அய்யரின் பாடல்களை பாடி அசத்தும்  டீ. வி. சங்கரநாராயணன்.  மணி அய்யரின் ஸ்வரங்களை நினைவு படுத்துபவர்.  மணி அய்யர் பார்வை இழந்தவர். வெள்ளை வெளேரென்று  வேஷ்டி முழுக்கை சட்டை அணிந்தவராய் மேடைக்கு அழைத்து வரப்பட்டு உட்கார்ந்தால் அவர் உலகமே தனி. ஸ்வரங்கள்  மழையாக  பொழியும். வார்த்தைகளை வேகமாக உச்சரித்தாலும் கேட்க ஒரு தனி ருசி.

கிரிஃபித் தெருவில் (இப்போது மகாராஜபுரம் சந்தானம் சாலை)  சாரதா வித்யாலயா விளையாட்டு மைதானத்தில்  ஒரு சாயந்திரம் எண்ணற்ற தலைகளுக்கிடையே என் தலையும்  இருந்தது.எங்களுக்கு நாற்காலிகள் கிடையாது. தரையில் உட்கார்ந்து தான் பிரசங்கங்கள் கச்சேரிகள் எல்லாம் கேட்போம்.  இப்போது மாதிரி ஸ்பீக்கர் கிடையாது. குழாய் ஸ்பீக்கர் (CONE LOUD  SPEAKERS )  மூலம் கேட்கும் சங்கீதம் அருகில் இருப்பவர் காதைத்  துளைக்கும்.  மதுரை மணி அய்யர் குரல் இன்பத் தேனாக  காதில் நுழைந்தது நினைவிருக்கிறது.

இத்துடன்  அவரது இணையற்ற குரலில் இந்த கீர்த்தனையை கேட்க சொடுக்கவும்: https://youtu.be/T4nWe5p6vOo



பல்லவி

Telisi Raama Chintanato Naamamu Seyave Oh Manasaa
தெலிசி ராம சிந்தனதோ  நாமமு  சேயவே  ஓ மனசா

''சொல்வதைக் கேள்  என் மனமே, இப்பவாவது ஸ்ரீ ராமனின் நாமத்தை சொல்லேன். அதன் அர்த்தம் புரிந்து கொண்டு சொன்னால் இன்னும் ஆனந்தம்''

அனுபல்லவி:

தலபுலன்னி  நிலிபி  நிமிஷமைன  தாரக ரூபுனி நிஜ தத்வமுலனு

Talapulanni Nilipi Nimishamaina Taaraka Roopuni Nija Tatvamulanu

வெளியே  யாதாயாதமாக சுற்றும் உன் மனதை   சில நிமிஷங்களாவது  வெளியுலக யாத்திரையிலிருந்து நிறுத்துவதோடு  ராமனின் நாம மஹிமையை மனதை செலுத்து   the real meaning and significance of the holy name of Rama.

சரணம்
இராமாயண சபலாக்ஷுல பேரு
காமாதுல போருவாரூ வீரு
இராமாயண ப்ரம்மமுனகு பேரு
ஆமானவ ஜனார்த்துலு தீரு

Raamaayana Chapalaakshula Peru
Kaamaadula Boruvaaru Veeru
Raamaayana Brahmamunaku Peru
Aamaanava Jananaartulu Dheeru

தெரிந்துகொள்ளடா.   ராமா  என்றாலே  அழகே உருவான பெண்கள். இந்த அர்த்தத்தில் புரிந்துகொண்டவன் பெண்கள் நினைவில் மூழ்கிப்போகிறான். ராமா என்றால் ப்ரம்மம் என்றும் அர்த்தமடா.  பரமாத்மா. இந்த அர்த்தத்தில் புரிந்து கொள்பவன் ஜனன மரண துன்பத்திலிருந்து விடுதலை பெறுவான்.

Markata Buddhu Letu Dheeru
Arkudanuchu Bhaaskaruniki Peru
Kutarkamanedu Andhakaaramu Dheeru

மர்க்கட   பூத்து லேது திரு  அர்க்குடனுச்சு  பாஸ்கருநிக்கி பேரு
குதர்க்கமனேடு அந்தகாரமு தீரு

அர்க்க என்றால் ரெண்டு அர்த்தம்.  சிதறி ஓடும் மனது என்றும்  விஷ பூண்டு என்றும் பொருள். ஓரிடம் நில்லாமல் தாவும் குரங்கு மனது, விஷப்பூண்டு என்று அர்த்தம் பண்ணிக் கொண்டால் எப்படி மன அமைதி, சாந்தி கிடைக்கும்?    அர்க்கன்  என்று சூரியனுக்கும் பெயர்.   அந்த அர்த்தத்தில் புரிந்து கொண்டால் அஞ்ஞான இருளை விரட்டும் சூரியன், வேண்டாத  விவகாரங்கள் விவாதங்களில் இருந்து விடுபடலாமே..

Aja Manuchu Meeshamunaku Peru
Nija Korika Lela Geedeeru
Ajudani Vageeshwaruniki Peru
Vijayamu Galgunu Tyagaraajanutuni

அஜ மனுச்சு  மீஷமுனகு பேரு  நிஜ கோரிக லேல கீதீரு
அஜூதனி வாகீஸ்வரனுக்கி பேரு விஜயமு கல்குனு த்யாகராஜனுதுனி

அஜம் என்றால் ஆடு. இதை நினைத்துக் கொண்டால் எப்படியடா ஆசைக்கடலிலிருந்து வெளியேறுவாய்?  அஜன்  என்றால் பிரம்மன். அயன் என்போமே.  அவனை நினைத்து பாடினால் தேடும் வீடுபேறு கிடைக்குமே.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...