Wednesday, May 9, 2018

GITANJALI



ரபீந்திரநாத் தாகூர் 
கீதாஞ்சலி                   J.K. SIVAN 

       
      காற்றினிலே ஒரு கீதம் 

I am only waiting for love to give myself up at last into his hands. That is why it is so late and why I have been guilty of such omissions.

They come with their laws and their codes to bind me fast; but I evade them ever, for I am only waiting for love to give myself up at last into his hands.

People blame me and call me heedless; I doubt not they are right in their blame.
The market day is over and work is all done for the busy. Those who came to call me in vain have gone back in anger. I am only waiting for love to give myself up at last into his hands.

கிருஷ்ணனுக்கு தெரியாதா  என்ன  நான் என்னையே  அவனுக்கு அர்ப்பணிக்க காத்திருக்கிறேன் என்று. கண்ணா, கருமை நிற வண்ணா, நின்னையே சரணடைந்தேன் நந்தலாலா, என் காதல் பாசம் அனைத்தும் உன்னிடமே அல்லவா?உனக்காக கடைசி வரை காத்திருப்பவர்களில்  நான் முதல்வன். அதனால் தான் நான் ரொம்ப லேட் பேர்வழி. நிறைய தவறுகள் செய்தவன் அல்லவா.  என் தவறுகள் சும்மா விடுமா.  எனக்கு தண்டனை கொடுக்க என்னென்ன வழியோ  சேர்த்து என்னை அணுக முயலும் போது நான் அகப்படுவேனா. உன்னிடம் அல்லவோ ஓடிவந்து நீ காத்திடுவாய். என்னை திருத்திடுவாய்.உன்னை அடைந்தவனின் தவறுகள் உனதாகி விடுகிறதே.  சேய் செய்த பிழை தாய் பொறுப்பவள் ஆயிற்றே. இவன் மதி கெட்டவன், சொன்னதை கேட்கமாட்டான் என்று நிறைய பேர் சொல்லி காது  புளித்து விட்டது கிருஷ்ணா. அவர்கள் சரியாகத்தான் சொல்கிறார்கள்.எனக்கு துளியும் சந்தேகம் இல்லை. நான் தான் அதை உணர்ந்து உன்னிடம் ஓடி வந்துவிட்டேனே .
கடை வியாபாரங்கள் முடிந்து போய்விட்டது. கடையை மூடி அவரவர் காசு எண்ணுகிறார்கள். என்னை தேடி வந்தவர்கள் என்னை அடையமுடியாத  கோபத்தோடு திரும்புவது தெரியும். நான் என்ன செய்வது? நான் தான் செய்த தவறை உணர்ந்து வருந்தி உன்னிடம் வந்து விட்டேனே. அவர்களிடம் எப்படி அகப்படுவேன்?
Clouds heap upon clouds and it darkens. Ah, love, why dost thou let me wait outside at the door all alone?
In the busy moments of the noontide work I am with the crowd, but on this dark lonely day it is only for thee that I hope.
If thou showest me not thy face, if thou leavest me wholly aside, I know not how I am to pass these long, rainy hours.
I keep gazing on the far-away gloom of the sky, and my heart wanders wailing with the restless wind.
கண்ணம்மா,  என் மனம் நீ அறிவாய்.  மேலே பார்க்கிறேன்  கருமையான  யானை யானையாக  மேக கூட்டங்கள் மெதுவாக அசைந்து ஒன்று மேல் ஒன்று ஏறி விளையாடுகிறது.  வானத்தை மறைத்து கருமை படர்கிறது. பெரிய மழை ஒன்று நிச்சயம் காத்திருக்கிறது.  என்னை ஏன்  உன் வாசலிலேயே நிற்க வைத்து காத்திருக்க செயகிறாய். என்னை ஏன் உள்ளே சேர்த்துக்கொள்ளவில்லை. கண்ணம்மா, காத்திருக்கிறேனே தெரியவில்லையா?

என்னைப்பற்றி தெரியுமே.  பகலெல்லாம் எங்கெல்லாமோ அலைந்து திரிந்து எவரிடமோ பழகி என் வேலையாக இருந்துவிட்டேன். இதோ இரவு நெருங்கும்போது  அவர்கள் யாரும் என் கண்ணுக்கு தெரியவில்லை. எங்கும் இருள் சூழ்கிறது.  நீ மட்டுமே தெரிகிறாய். என் புகலிடம் நீ மட்டும் தானே. என் நம்பிக்கை நக்ஷத்ரம்.

கண்ணம்மா, நீ உன் முகம்காட்டி  தலை அசைத்து புன்னகைக்காவிட்டால் நான் என்ன செய்வேன். பாராமுகம் ஏனம்மா? முழுசாக நான் ஒருவன் நிற்பது கண்ணில் படவில்லையா?ஜோ வென்று மழை கொட்டும்போதும்  நான் தொப்பலாக உன்னை தேடி எதிர்பார்த்து தான்  நிற்பேன்.எனக்கு வேறு எதுவும் தெரியாதே.  வானத்தை நோக்கி  கண்ணிமைக்காமல் பார்த்து நிற்கும் என் மனம் அலை பாய்கிறதே.  என்  இதயத்திலிருந்து  ''உன்னைக் காணாத நெஞ்சம்..... என்று சோகமாக ஒரு மெல்லிய கீதம் புறப்படுகிறதே உன் காதில் விழுகிறதா?
காற்றோடு கலந்து என்னை விட்டு சென்றதே.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...