Monday, May 28, 2018

GNANAPPANA



ஞானப்பான: -- J.K. SIVAN
ஒரு சோகம் தந்த ராகம்

ഭുവനങ്ങളെ സൃഷ്ട്ടിക്കയെന്നതു
ഭുവനാന്ത്യപ്രളയം കഴിവോളം
കര്‍മ്മപാശത്തെ ലംഘിക്കയെന്നതു
ബ്രഹ്മാവിന്നുമെളുതല്ല നിര്‍ണ്ണയം.

Bhuvanangale srishtikka ennathu,
Bhuvananda pralayam kazhivolam,
Karma pasathe langikkunnathu,
Brahmavinnum eluthalla nirnayam,

நாம் இருக்கும் உலகம் இருக்கிறதே இது எத்தனை காலம் இப்படியே ஓடும்? ஓடும் ஓடும், நிச்சயம் ஓடிக்கொண்டே தான் இருக்கும் எதுவரை தெரியுமா? எல்லாமே ஒரு முடிவுக்கு கொண்டுவரும் பிரளயம் நடைபெறும் வரை. ஒவ்வொரு யுகமும் அப்படித்தானே நடைபெற்றது. புனரபி ஜனனம் தான். இந்த கர்ம வினையை, பயனை, நான்முகம் படைத்த ப்ரம்மா தலைகள் கீழே நின்றாலும் மாற்றமுடியாதே '' என்கிறார் பூந்தானம்.

ദിക്പാലന്മാരുമവണ്ണമോരോരോ
ദിക്കുതോറും തളച്ചു കിടക്കുന്നു

Dik palakan marum avvannam orororo,
Dikku thorum thalachu kidakkunnu.]

அந்த அஷ்ட திக் பாலகர்கள் எவ்வளவு தான் பலமிக்க இருந்தாலும் இப்படி ஒரு பிரளய மாற்றத்தை தடுக்க முடியுமா? அவர்களை சங்கிலியால் கட்டிப்போட்டதை போல அல்லவோ அவரவர் இடத்தில் இருந்து கொண்டு வேறு வழியில்லாமல் பார்த்துக் கொண்டிருப்பார்கள்? என்று சொல்கிறார் பூந்தானம்.

അല്‍പകര്‍മ്മികളാകിയ നാമെല്ലാം
അല്പകാലംകൊണ്ടോരോരോ ജന്തുക്കള്‍
ഗര്‍ഭപാത്രത്തില്‍ പൂക്കും പുറപ്പെട്ടും
കര്‍മ്മംകൊണ്ടു കളിക്കുന്നതിങ്ങനെ.

Alpa karmikalaya namellam,
Alpa kalam kondu ororo janthukkal,
Garbha pathrathil pukkum purapettum,
Karmam kondu kalikkunathengine.

இந்த வேடிக்கையை பார்த்தீர்களா? எப்படி இந்த பகவான் ஒரு ஏற்பாடு செய்த்திருக்கிறான் என்று? அவனவன் செய்த கர்மாவுக்கு தக்கப்படி கச்சிதமாக குறுகிய காலமாகட்டும், நீண்ட காலமாகட்டும், வினைப்பயனுக்கு ஏற்ப, ஒவ்வொரு ஜந்துவின் கர்ப வாசத்திலும் புகுந்து, வெளியே புறப்பட்டு, கர்மாவின் ஆட்டுவித்தலுக்கு ஆளாகி ஜனிக்கிறோம், மரிக்கிறோம். முடிவில்லாத இந்த விளையாட்டை வேறு வழியில்லாமல் விளையாடிக்கொண்டிருக்கிறோம்.

நல்ல கர்மாவினால் சுகமான நற் பிறப்பு. ;மற்றதை சொல்லவே வேண்டாம். கர்மாவிலிருந்து தப்பவே முடியாது. நல்ல சுயநலமில்லா தர்ம கார்யங்களை செய்து மூட்டையின் கனத்தை கொஞ்சம் குறைக்கலாம்

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...