Friday, May 25, 2018

DEATH



''போனவனுக்கு...........'' J.K. SIVAN இது படிக்க கொஞ்சம் கஷ்டமாக, வேதனையாக இருக்கலாம். எந்த பிறவி எடுத்தாலும் அது நாமோ நம்மை சேர்ந்தவர்களோ தான். சாதாரண ஒரு கரப்பாம் பூச்சி செத்துப் போனாலும் அதன் கர்ம பலனை நிர்ணயிக்கும் பரிணாம நிலை அழிவதில்லை. செத்த பின்னும் பிராணசக்தி இறந்த உடல எங்கும் போகாமல் அந்த இடத்திலேயே சுற்றுகிறது. ராத்திரி புல் வெளி பக்கம் நடக்காதே என்பதற்கு காரணம் சில பூச்சிகளை, பாம்புகளை நீங்கள் மிதித்து அது உங்களை கடித்துவிடக்கூடாது என்பதற்காக மட்டும் இல்லை. அப்போது தான் செத்துப்போன பூச்சிகள், உயிரினங்கள் எல்லாம் வேறு பரிணாமத்திற்கு இடம்பெயரும் நிலையில் அங்கே பூமியை பற்றிக்கொண்டே இருக்கும். அநேகமாக மிருகங்கள் பூச்சிகள் எல்லாம் இரவில் தான் மரணம் அடைகிறது. சின்ன சின்ன ஜீவன்களை பறவைகளோ, விலங்குகளோ கொன்று தின்பதற்கு இரவு பகல் தனியாக வேண்டாம். தானாகவே இறப்பது அதிகம் இரவில்தான். அவற்றின் வாழ்க்கையே கொஞ்ச காலம் தான். ஆகவே அடுத்த ஜென்மத்தை சீக்கிரமாக அடையும். ஆயிரமாயிரம் ஆண்டுகள் இதையெல்லாம் அறிந்து தான் இறந்து கொண்டிருப்போர்களுக்கும், இறந்தவர்களுக்கும் பல சடங்குகள் உண்டாக்கப்பட்டிருக்கின்றன. வடக்குப்பக்கம் தலை வைப்பதும் வீட்டிற்கு வெளியே கொண்டு போய் உடலை கிடத்தும் காரணம், ஒரு கட்டிடத்துக்குள் இருக்கிறபோது அவ்வளவு சுலபமாக உயிர் பிரியாது. கட்டிடத்திற்கு வெளியில் வடக்கு தெற்காக அந்த மரணமடையப் போகிறவனுடைய உடல் கிடத்தப்படுகிறபோது, எளிதாக அந்த உயிர் உடம்பிலிருந்து பிரிகிறது. இறந்தவன் உயிர் உடலை சுற்றிக்கொண்டே இருக்கும் . அந்த உடலை வடக்கு தெற்காக வைப்பதால் காந்த ஈர்ப்பு காரணமாக அந்த உயிர் உடம்பை விட்டு விலகிப் போய்விடுகிறது. அந்த உடலில் சில மாற்றங்கள் நிகழ்வதால் இனி அந்த உடலைச் சுற்றிக் கொண்டிருப்பதில் பயன் இல்லை என உயிர் அறிகிறது. வடக்கு, தெற்காக வைத்துவிட்டால் மறுபடியும் உடலுக்குள் நுழைய முடியாது என்று உயிர் அறிகிறது. எதற்காக இறந்த உடலின் ரெண்டு கால் கட்டைவிரலையும் ஒன்றாக சேர்த்து கட்டுகிறார்கள்? இறந்தவுடன் உடலில் மீதமிருக்கிற பிராணசக்தி மூலாதாரம் வழியே வெளியேற முயலும். உடலினுடைய பின்புறத் துவாரம் திறந்திருக்குமேயானால் அதன் வழியாக அந்த உயிர் மீண்டும் நுழைய முயலும். அது அந்த உயிருக்கும் நல்லதில்லை. அந்த சூழலுக்கும் நல்லதில்லை. எதிர்மறை விளைவை உண்டாக்கும்.கால்கட்டை விரல்களைக் கட்டுவதால் மூலாதாரம் மூடப்படுகிறது. கால்கட்டை விரல்களை மூடினால் பின்புறத் துவாரம் இறுக்கமாகி விடுமே. ஏன்உடலை எரிக்கிறார்கள்? நான்கு மணி நேரத்திற்குள் உடலை எரிக்க வேண்டும். உடல் சிதைந்து போகும் வரையில் உயிர் அதைச் சுற்றியே அலையும். மேல்நோக்கிப் போகாது. அந்த உயிருக்கு அடுத்து என்ன நிகழ வேண்டுமோ அது நிகழவேண்டாமா? தான் அதுவரை குடியிருந்த வீடான உடல் இனி இல்லை என்று அதற்கு தெரியாது. தேடும். . எனவே எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அந்த உடலை எரித்துவிட வேண்டும். பழைய காலங்களில் மரணம் நிகழ்ந்து ஒன்றரை மணி நேரத்தில் எரித்துவிட வேண்டும் என்று ஒரு விதி இருந்தது. இப்போது நிலையே வேறு. பிள்ளை வெளிநாடுகளிலிருந்து வரவேண்டும் என்பதற்காக பல தினங்கள் குளிர் பெட்டியில் ஆஸ்ப்பித்திரிகளில் கிடங்குகளில் கிடக்கிறது. வீடுகளில் கூட உடலை வீட்டிலேயே இரண்டு நாட்கள் கூட வைக்கிறார்கள். அது இறந்தவருக்கும் நல்லதில்லை, உயிரோடு இருப்பவர்களுக்கும் நல்லதில்லை. நம்மில் அநேகருக்கு மரணம் என்ற பேச்சை எடுத்தாலே பிடிக்காது. கோபிப்பார்கள். ஏதோ பேசக்கூடாத கெட்ட விஷம் எதையோ பேசிவிட்டது போல் கை அமர்த்தி, '' சே சே அபசகுனமாக பேசாதே, நல்ல விஷயமாக பேசு'' என்பார்கள். மரணம் பற்றி தெரிந்துகொள்ள ஒரு பக்கம் அருவருப்பு, பயம், மனம் இடம் கொடுப்பதில்லை. யாரும் அது பற்றி அதிகம் பேச விரும்புவதில்லை. வாழவே தெரியாதவர்கள் வாழ்வுக்கு அப்புறமாக நிகழும் மரணத்தையோ, அதற்கு அப்புறமாக நடப்பதையோ பற்றியா தெரிந்து கொள்வார்கள்?. எல்லோருமே மரணமே நிகழாமல் வாழதான் ஆசைப்படுகிறார்கள். நடக்க முடியாததை நடக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள். வாழ்க்கையில் என்னென்ன வெல்லாம் நிகழவேண்டும் என்று ரொம்ப பெரிய லிஸ்ட் ஒவ்வொருவரிடமும் இருக்கிறதே. மேலும் அறிவோம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...