Thursday, May 31, 2018

AINDHAM VEDHAM



ஐந்தாம் வேதம்     j.k. sivan
                                                 
                                           
         36    கந்தர்வன் சொன்ன கதை 


பாரதம் என்றாலே ரொம்ப ரொம்ப நீளமாக போய்க்கொண்டிருக்கும் கதைகளின் தொகுப்பு என்று புரிந்து கொள்ளவேண்டும். இது போன்ற விறுவிறுப்பான அம்சங்கள் கொண்ட பல வகை உணர்ச்சிகளை எழுப்பும் சம்பவங்களையும்  எந்த புத்தகத்திலும்  இவ்வளவு படிக்க வழியில்லை.

அர்ஜுனனுக்கு  கந்தர்வன் சொல்லும் விஷயங்கள் இன்னும் முடியவில்லை.  அர்ஜுனனும் ஆவலாக கேட்கிறான்.


''கல்மஷ்பதன் என்று ஒரு இக்ஷ்வாகு வம்ச ராஜா. எல்லா ராஜாக்களையும் போல் அவனும் ஒரு நாள் காட்டில் வேட்டையாடி களைத்து குடிக்க தண்ணீர் பசிக்கு ஆகாரம் தேடும்போது விச்வாமித்ரரைக் கண்டு அவர் சிஷ்யனானான். ஒருநாள்  வழியில் வசிஷ்டரின் நூறு புத்ரர்களில் முதல்வனான  ஷக்த்ரி என்கிற  முனிவன்  எதிரே பாதையில் வருவதைப் பார்த்து ''வழியை விட்டு தூரம் போ'' என்கிறான். முனிகுமாரன் அவனுக்கு நீதி புகட்டுகிறான். அரசர்கள் பிராமணர்களையும் ரிஷிகளையும் சந்திக்கும்போது அவர்களுக்கு உபசாரம் செய்யவேண்டும். எனவே நீங்கள் தான் முதலில் வழி விடவேண்டும்'' என்கிறான்.

கல்மஷ்பதன்  வெகுண்டு சாட்டையால் முனிகுமாரனை அடிக்க, அவன்   ''நீ  ராக்ஷசத்தனமாக நடந்துகொள்வதால் ஒரு ராக்ஷசனாகப் பிரப்பாயாக''  என்று  சபிக்க,  கல்மஷ்பதன் சுருண்டு விழுந்து இறக்கிறான்.  அந்த பக்கமாக  விஸ்வாமித்திரர்  வந்து விஷயம் அறிகிறார். கல்மஷ்பதன் உடலில் ஒரு ராக்ஷசனை   விஸ்வாமித்ரர்  குடியேற்றுகிறார் .

அந்த  ராக்ஷசனை  ஒரு  பிராமணன் ஒரு நாள்  காட்டில் சந்திக்கிறான். பசியால்  வாடும்  அவனுக்கு  ராக்ஷசன்  மனித மாமிசத்தை அளிக்கிறான்.  பிராமணன்  பசியோடு வாடியவன் ''கல்மஷ்பதா,  என்னை   ஏமாற்றி நர மாமிசத்தை உணவாக அளித்த   நீ  இனி  மனித மாமிசத்தையே உணவாக தேடி வாடி அலைவாய்''  என்று சபிக்கிறான்.

இவ்வாறு சபிக்கப்பட்ட விச்வாமித்ரனின் சிஷ்யன் கல்மஷ்பதன்  தான் வசிஷ்டர் மகன் விச்வாமித்ரரோடு  வழி யாருக்கு யார் முதலில் விடவேண்டும் என்று வாதித்துக் கொண்டிருக்கும்போது வசிஷ்டரின் குமாரன் ஷாக்திரியைக்கொன்று விழுங்கிவிட்டான். விச்வாமித்ரரின் தூண்டுதலால்  வசிஷ்டரின் மற்ற 99 குமாரர்களையும்  கொன்று  புசித்து விட்டான்.

பிரம்ம ரிஷி வசிஷ்டர்,   விச்வாமித்ரரின்  இந்த செயலால் தனது 100 புத்ரர்கள் மாண்டதை அறிந்து துளியும் கோபமோ வருத்தமோ கொள்ளவில்லை. தனது தவ வலிமையால்  கௌசிகனையோ அவன் வம்சத்தையோ  பூண்டோடு அழிக்கவில்லை.  யமனிடத்தில் வேண்டி  இறந்த தனது 100 புத்ரர்களை உயிர்ப்பிக்க யாசிக்கவும் இல்லை. மிகுந்த வருத்ததோடும் வேதனையோடும் வசிஷ்டர்  தனது உயிரைத் தியாகம் செய்ய தீர்மானித்து,  மலைமீதிருந்து வீழ்ந்தபோதும்,  கடலில் குதித்தபோதும், தீயில் இறங்கியபோதும்  அவரது தவ வலிமை அவரை பாதுகாத்து  மீட்டதால் அவர் தனது ஆஸ்ரமத்துக்கு திரும்பவும்  மீண்டார். தவத்திலேயே காலம் கழித்தார்.

ஆஸ்ரமத்துக்கு  அவர்  திரும்பியபோது அவர் பின்னே  யாரோ வேதங்களை உச்சரிப்பது காதில் விழவே திரும்பிப் பார்த்தவர்  தனது மகன் ஷக்த்ரியின் மனைவி அத்ரிஸ்யந்தி  தன் பின்னே தொடர்ந்து வருவதைக் கண்டார்.

'' யாரம்மா இங்கே இப்போது  வேதம் ஓதியது?''

''தந்தையே, தங்கள் புத்திரன்  ஷக்திரியின் குமாரன் என் வயிற்றில் வளர்பவன் தான் வேதங்களை ஓதியவன்'' என்கிறாள். வசிஷ்டர் மகிழ்கிறார்.  வசிஷ்டர் வம்சம் இனி தொடருமே .

ஒருநாள் காட்டில்  தனது மகன்களைக் கொன்ற  கல்மஷ்பதனை  வசிஷ்டர்  காண்கிறார்.  அவர் மகன் அல்லவா அவனை சபித்தது என்று  வெகுண்டு அவரையும் கொன்று தின்பதற்கு முயல்கிறான் கல்மஷ்பதன்.   வசிஷ்டர்  அவன் மேல் பரிதாபம் கொண்டு கமண்டலத்தில் நீர் எடுத்து மந்திரம் ஜபித்து  தெளித்து அவனை பழைய ராஜாவாக மாற்றுகிறார். அவன்  செய்த  தவறுகளுக்கு அவரிடம் மன்னிப்பு பெறுகிறான். அயோத்தி திரும்புகிறான்.  அவனது இக்ஷ்வாகு குலமும்  வாரிசுகளை  பெறுகிறது.

ஆஸ்ரமத்தில் குறித்த காலத்தில்  ஷக்த்ரியின் மகன் பிறந்து  வசிஷ்டரால்  பராசரன்  (உயிரூட்டுபவன்)  என்று பெயர் பெறுகிறான். பராசசர  முனி பின்னர்  யாகம் வளர்த்து  தனது தந்தையை  ஒரு ராக்ஷசன் கொன்றதால்  எல்லா  ராக்ஷசர்களையும்   யாகத்தீயில் விழுந்து மாள ஒரு யாகம், ஹோமாக்னி, வளர்க்கிறார்.  நிறைய  ராக்ஷசர்கள்  மந்திர சக்தியால்  கவரப்பட்டு  அவரது  ஹோமத்தீயில்  வந்து விழுந்து மாள்கிறார்கள்.

இதை அறிந்த வசிஷ்டரும் புலஸ்திய ரிஷியும்  ''பராசரா, போதும்  நிறுத்து,  உன்னால் மாண்டு போகும் ராக்ஷசர்கள் எந்தவிதத்திலும் உன் தந்தையின் மரணத்துக்கு  காரணம் இல்லை.  எனவே இவர்களை கொல்லும்  இந்த யாகம்  போதும் '' என்று  அறிவுரை கூற பராசரரின்  யாகம் முடிகிறது.

இன்னும்  நிறைய  உப கதைகளை  கந்தர்வன் அர்ஜுனனிடம் கூறியதும்  ''ஒ  கந்தர்வா, நீ எப்படி இவ்வளவு சரித்ரங்களை அறிந்திறிக்கிறாய் என்று ஆச்சர்யப்படுகிறேன்.  எனக்கு  ஒரு நல்ல  ரிஷியை  ஆசானாக  காட்டு''  என்று அர்ஜுனன் விண்ணப்பிக்கிறான்.

''அர்ஜுனா,   நீங்கள் செல்லும் இந்த காட்டில்  ஒரு ரிஷி இருக்கிறார்.  தௌம்யர்  என்று பெயர். அவரை  குருவாக  ஏற்றுக்கொள்ளுங்கள்.''

அர்ஜுனனும்  மற்ற பாண்டவர்களும்  கந்தர்வனிடம் விடை பெற்று  பாகீரதி நதியைக் கடந்து   தௌம்யரின்  உத்கோசக ஆஸ்ரமத்தை அடைகிறார்கள்.   அவர் அவர்களை மனமுவந்து உபசரித்து  அவரோடு ஆஸ்ரமத்தில் தங்கச் செய்கிறார்.  சிஷ்யர்களாக ஏற்கிறார். அவரின்  பிராமண சீடர்களாக  பாண்டவர்கள்  பாஞ்சால தேசம்  நோக்கி  செல்லும்போது வழியில் நிறைய பிராமணர்கள்  செல்வதை பார்த்து  யுதிஷ்டிரன் கேட்கிறான்

''எங்கே  இவ்வளவு கூட்டமாக  பிராமணர்கள்  செல்கிறீர்கள். எங்கே  என்ன  விசேஷம்?

''சற்று தூரத்தில் பாஞ்சால தேசம் இருக்கிறதே,  அங்கு மன்னன் மகளுக்கு ஸ்வயம்வரம் நடக்கிறது. அநேக ராஜாக்கள் வருகிறார்கள். பிராமணர்களுக்கு நிறைய தான தர்மங்கள்  நடைபெறும்.பொன்னும் பொருளும்  கிடைக்குமே.   எனவே  நாங்கள் அங்கே செல்கிறோம்''.

''பாஞ்சால தேசமே ஒரே  கோலாகலமாக  இருக்கிறதே''

''இருக்காதா  பின்னே?'   எல்லா  ராஜாக்களும்  வருகிறார்கள்.  அவர்களுக்கு வீர  விளையாட்டுப் போட்டிகள்  நடைபெறப்போகிறதே.  அவற்றில் வென்றவனை  துருபதன் மகள் பாஞ்சாலி   கணவனாக   ஸ்வயம்வரத்தில் தேர்ந்தெடுக்கப் போகிறாள்.   உங்களைப்பார்த்தாலே  ராஜா மாதிரி இருக்கிறீர்கள்.  ஒருவளை நீங்களும் போட்டிகளில் பங்கேற்று  வென்று உங்களில் ஒருவன்  அவளது  கணவனாகலாம். போல்  இருக்கிறதே  என்றார்கள் பிராமணர்கள்.'

''பிராமணர்களே  நீங்கள்  சொல்வதே  நாங்களும் போட்டிகளைக்  கண்டு மகிழ்ந்து வெற்றிபெறுவது போல்  சந்தோஷம் அளிக்கிறது.  நாங்களும் உங்களோடு வந்து அந்த கோலாகல வைபவம் காண்கிறோம்.''

பாண்டவர்கள்  துருபதன் அரண்மனையை அடைந்தார்கள்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...