Sunday, September 2, 2018

VAIRAGYA SATHAKAM. BARTHRUHARI



வைராக்கிய சதகம்       J.K. SIVAN 
ராஜா பர்த்ருஹரி 


ராஜா  பர்த்ருஹரியின்  வைராக்கிய சதகம் ஒவ்வொரு எழுத்தும் முத்து.. இன்று கொஞ்சம்  ரசிப்போம் .

भोगा न भुक्ताः वयमेव भुक्ता: तपो न तप्तं व्यमेव तप्ताः
कालो न यातो वयमेव यातास्तृष्णा न जीर्णा व्यमेव जीर्णाः 

Bhogaa na bhuktaa vayameva bhuktaastapo na taptam vayameva taptaah
Kalo na yaato vayameva yaataastrishnaa na jeernaa vayameva jeernaah  [12]

உண்மையை சொல்லப்போனால்  ஆஹா  இந்த உலக வாழ்க்கை  எனக்கு சுகத்தை கொடுத்தது என்பதே தவறு.   நம்மை அப்படியே உருட்டி லபக்கென்று இந்த உலக மாயை தான் சாப்பிட்டு சுகமடைந்தது.   பெரிதாக நாம்  எந்த  தவமும் செய்யவில்லை. எந்த தவச்சூடும் தஹிக்கவில்லை . 
மாறாக  இந்த  உலக மாயை நம்மை வறுத்து எடுத்து விட்டது. இன்னொரு விஷயம். நாம்  காலத்தை செலவழிக்கவில்லை. காலத்தின் போக்கில் நாம் விழுந்து மீளவில்லை.நாமாகவா  முதியவர் களானோம். யாராவது ஒருவராவது கிழவன் கிழவியாக விரும்பினோமா? காலம் தானே மாற்றுகிறது.  நமது பேராசைக்கு மட்டும் வயதாகவில்லை. என்றும் அதேபோல் இருக்கிறதே!!

क्षान्तं न क्षमया गृहोचितसुखं त्यक्तं न सन्तोषतः
सॊढाः दुस्सहशीतवाततपनक्लेशा: न तप्तं तपः।
ध्यातं वित्तमहर्निशं नियमितप्राणैर्न शंभो: पदं
तत्तत्कर्म कृतं यदेव मुनिभिस्तैस्तैः फलैर्वञ्चिताः॥।

Kshaantam na kshamayaa grihochitasukham tyaktam na santoshatah
Soddhaah dussahasheetavaatatapanakleshaah  na taptam tapah
Dhyaatam vittamaharnisham niyamitapraanairna shambhoh padam
Tattatkarma kritam yadeva munibhistaistaih phalairvanchitaah     [13]

அதை விடுங்கள், மறந்து விடுங்கள், மறந்துவிட்டேன் மன்னித்து விட்டேன்.... என்கிறோமே,  உண்மையில் நாம் அவ்வளவு உயர்ந்த குணம் உடையவர்களா?  இல்லவே இல்லை.  வேறு வழியில்லை நமக்கு.  எதெதையோ உத்தேசித்து  பொறுத்துக் கொள்கிறோம். குளிர் உஷ்ணம் எல்லாம் பொறுத்துக்கொள்ளவில்லையா. தவமா செய்தோம்? இரவும் பகலும் பணம் ஒன்றே தானே நம் எண்ணத்தை வியாபித்தது! மூச்சை அடக்கி   சிவ தியானம் ஒருநாளாவது??? ஹுஹும்.   ரிஷிகளைபோல  தவம், விரதம், தியாகம்  செய்ய முயற்சித்தாலும் ரிஷிகளாகிவிடுவோமா, அவர்கள்  அடைந்ததை துளியாவது பெறுவோமா? அசல் வேறு நகல் வேறு.

अवश्यं यातारश्चिरतरमुषित्वापि विषयाः
वियोगे कोभेदस्त्यजति न मनो यत्स्वयममून् ।
व्रजन्तः स्वातन्त्र्यादतुलपरितापाय मनसः
स्वयं त्यक्त्वाह्येते शमसुखमनन्तं विदधति॥


Avashyam yaataarah chirataramushitwaapi vishayaah
Viyoge ko bhedastyajati na mano yatswayamamoon
Vrajantah swaatantryaadatulaparitaapaaya manasah
Swayam tyaktwaa hyete shamasukhamanantam vidadhati [16]

இவ்வளவு வருஷங்களுக்கு துய்த்த  ஐம்புலன்கள் தந்த   சுகம் இன்பம் எல்லாம் சாஸ்வதமா?  பஞ்சாக பறந்துவிடும். போகும்போது  கை நிறைய, பை நிறைய துன்பம் துயரத்தை தான் தந்துவிட்டு போகும். நாமாகவே வேண்டாம் என அதை தவிர்த்தால் அதன் சுகமே தனி.   மனம் நம்மை அப்படி விடாதே. திரும்ப திரும்ப புலனின்பத்தை அல்லவோ தேடுகிறது.  அந்த சுகம் கிடைக்காவிட்டால் மனம் படும் துன்பம், ஏக்கம் இருக்கிறதே. அப்பப்பா  சொல்லில் எழுத்தில் அடங்காது.  சே நீ வேண்டாம் போ என்று நாமாக உதறிவிட்டால் அப்போது விளையும் நிரந்தர சுகம், மன அமைதிக்கு ஈடு இணை உண்டா?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...