Saturday, September 8, 2018

vairagya sathakam



 வைராக்கிய சதகம்       J.K. SIVAN 
ராஜா பர்த்ருஹரி 

भिक्षाशनं तदपि नीरसमेकवारं
शय्या च भू: परिजनो निजदेहमात्रं ।
वस्त्रं विशीर्णशतखण्डमयी च कन्था
हा हा तथापि विषया न परित्यजन्ति ॥

Bhikshaashanam tadapi neerasamekavaaram
Shayyaa cha bhooh parijano nijadehamaatram
Vastram visheernashatakhandamayee cha kanthaa
Ha ha tathaapi vishayaa na parityajanti  [18]

ஆசையும்  பாசமும்  யாரை விட்டது. அதோ பாருங்கள் தெரிகிறதா அவனை?  அடுத்த வேளை  உணவு உண்டா, அது எது, எங்கே , யாரிடம்.. கிடைக்குமா?? ..ஹுஹும்  ஒன்றுமே அது தெரியாதவன். கிடைத்தாலும் அது அவனுக்கு பிடித்தா ருசியாகவா இருக்கும்? தினமும் பகல் வேளை  பிக்ஷை தேடுபவன். பூமியே பாய், வானமே போர்வை என்று தரையில் படுப்பவன், இருக்கும் இடுப்பு வஸ்த்ரத்தில் இனி புதிதாக கிழிய இடமே இல்லை.  இப்படிப்பட்ட நிலையிலும்  அவன் மனத்தில் எத்தனை எதிர்பார்ப்புகள்  ஆசைகள், கனவுகள், ஐம்புலன்கள் எப்படியெல்லாம் எல்லோரையுமே வாட்டி வதைக்கிறது.  பரிதாபம் இதைவிட வேறு உண்டா?

अजानन्दाहात्म्यं पततु शलभो दीपदहने
स मीनोऽप्यज्ञानात् बडिशयुतमश्नातु पिशितं ।
विजानन्तोऽप्येते वयमिह विपज्जालजटिलान्
न मुञ्चामः कामानहह गहनो मोहमहिमा ॥

Ajaanan daahaatmyam patatu shalabho deepadahane
Sa meeno’pyajnaanaat badishayutamashnaatu pishitam
Vijaananto’pyete vayamiha vipajjaalajatilaan
Na munchaamah kaamaanahaha gahano mohamahimaa [20]

அந்த காலத்தில்  எம்.கே. தியாகராஜ பாகவதரின் குரல் உச்சாணிக்கிளையில் நின்று பாடும். ''விளக்கில்  வீழும் பழமென மயங்கி விட்டிலாகாதே ...'' என்று.  விட்டில் பூச்சிக்குத்  தெரியுமா அது  உண்ண ஆசைப்பட்டது அதன் மரணத்தை என்று? சுலபமாக விருந்து கிடைத்ததே என்று தூண்டிலில் மாட்டியிருந்த மாமிசத்துண்டை ஆசையாக விழுங்கி அது ஒருவனுக்கு ஆகாரமான மீன் போல, நாம் உலக மாயை காட்டும் இன்பங்களை ஆசைப்பட்டு  அளவிலா துன்பங்களை காசுகொடுக்காமல் வாங்குகிறோம். அடாடா  மாயை  எப்படியெல்லாம் மனிதனை ஆட்டி படைக்கிறது!

मृत्पिण्डो जलरेखया वलयितः सर्वोप्ययं नन्वणु
भागीकृत्य स एव संयुगशतैः राज्ञां गणैर्भुज्यते
ते दद्युः ददतोऽथवा किमपरं क्षुद्रा दरिद्रा भृशं
धिक् धिक् तान् पुरुषाधमान् धनकणान् वाञ्छन्ति तेभ्योऽपि ये

Mritpindo jalarekhayaa valayitah sarvopyayam nanvanu
Bhaageekritya sa eva samyugashataih raajnaam ganairbhujyate
Te dadyuh dadato’thavaa kimaparam kshudraa daridraa bhrisham
Dhikdhik taanpurushaadhamaan dhanakanaan vaanchchhanti tebhyo’pi ye [25]

யோசித்துப்பாருங்கள்.  இந்த அகண்ட உலகை நீரும் நிலமுமாக நாம் எல்லோரும் வாழ பகவான் படைத்தான். ஆனால்  இந்த அரசர்கள்  சில பல ஆட்களை படையாக வைத்துக்கொண்டு ஒருவரோடு ஒருவர் மோதி சண்டையிட்டு  அதை பிரித்து கூறாக்கி, தனித்தனியே ஒரு அளவு வைத்துக்கொண்டு தங்களது ராஜ்ஜியம் என்று மேலும் அடைய ஆசைப்படுகிறார்கள்.  இப்படிப்பட்ட பிச்சைக்காரர்கள் நிலத்தை பிரித்துக்கொண்டு  நாயாக  சண்டை போடும் ஈனர்கள்  மற்றவர்க்கு என்ன கொடுக்கப்போகிறார்கள்?.  அவர்களிடம்   ஒருவன் சென்று உன்னைப்போல் இந்திரன் சந்திரன் இல்லை என்று பொய் கூறி மதித்து கையேந்தி சில  பொருள்களை பெறுகிறான் அவனை என்ன சொல்வது?

पुरा विद्वत्तासीदुपशमवतां क्लेशहतये
गता कालेनासौ विषयसुखसिद्ध्यै विषयिणां ।
इदानीम् संप्रेक्ष्य क्षितितलभुजः शास्त्रविमुखा
नहो कष्टं साऽपि प्रतिदिनमधोधः प्रविशति ॥

Puraa vidwattaaseedupashamavataam kleshahataye
Gataa kaalenaasau vishayasukhasiddhyai vishayinaam
Idaaneem samprekshya kshititalabhujah shaastravimukhaa-
naho kashtam saa’pi pratidinamadhodhah pravishati  [27]
கல்வி கற்பது ஆரம்பத்தில்  உண்மையில் ஞானம் தேடுபவரால்  மட்டுமே நாடப்பட்டது.  அவர்கள் உலக இன்பம் துறந்தவர்களாக குருவிடம் பயின்றவர்கள். புலன்களிடம் அடிமையாகாதவர்கள். மனதை உறுதியாக சிறந்த முறையில் ஞானம் பெற, துயரம் துன்பத்தை விரட்ட  தக்கதாக வைத்திருந்தவர்கள்.  ஆனால்  போகப்போக என்ன ஆயிற்று? உலகமாயையில் சிக்கி இன்பம் தேடுபவர்களும்  பொழுது போக்காக  சாஸ்திரங்களை கற்கத்  தொடங்கினார்கள்.  இதனால் என்ன விளைவு,  பிரபுக்கள் ராஜாக்களுக்கு  உண்மையான  சாஸ்திரங்களையும் அதை முறையாக கற்பவர்களையும் அடையாளம் காண முடியாமல் போகி விட்டது. பாண்டித்யம், கல்வி எல்லாமே  கீழ் நோக்கி போக ஆரம்பித்தாகி விட்டதே என்று அப்போதே  பர்த்ருஹரி  அழுகிறார், இப்போதைய நிலையை வந்து பார்த்தால் என்ன சொல்வாரோ??

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...