Thursday, September 27, 2018

KUNTHI'S PRAYER



      குந்தியின் பிரார்த்தனை. 2  J.K. SIVAN


''என்னுயிரே,  கிருஷ்ணா, நீ செய்த விஷமங்கள் ஒன்றா இரண்டா? எந்த அளவுக்கு தாங்க முடியாதபடி இருந்திருந்தால், யசோதை உன்னை கோபத்தோடு, ஒரு கயிற்றால் கட்டி நகராது இருக்க செயதிருப்பாள்? நடிப்பின் சிகரமே, என் மனக்கண்ணால் அந்த காட்சியை காண்கிறேன். கண்களில் பயம், அதையும் முழுக அடிக்கும் அளவு கண்ணீர், தேம்பி தேம்பி அழுகிறாய். புறங்கையால் கண்ணை கசக்குகிறாய். கண்களில் யசோதை இட்ட மை கரைகிறது. கன்னத்தில் வழிகிறது. நீயா பயப்படுபவன்! எல்லாம் வேஷம்.

பிறப்பற்றவன் நீ பிறந்தாயே,  ராஜ்யபாரம் சுமக்கவா? 'ராஜா' க்களின் பாரம் குறைக்கவா? எந்தகாலத்திலோ வசுதேவரும் தேவகியும் தவமிருந்து வேண்டியதின் பலனாய் நீ அவர்கள் மகனாக பிறந்தவன். ஒரு கல்லில் ரெட்டை மாங்காய். துஷ்ட நிக்ரஹம், சிஷ்ட பரிபாலனம். உன்னிடம் ப்ரம்மா  வேண்டியதும் இந்த குறை தீர்க்கத்தானே.

உன்னை அனவரதமும் வேண்டி பிரார்த்தனை செய்பவர்களுக்கு,  உன் தாமரைத் திருவடிகள் பணிந்தவர்க்கு,  ஜனன மரண துன்பமே இல்லையே.
++

குந்தி வாசலுக்கு ஓடுகிறாள். தாருகன் தயாராக தேரில் குதிரைகளைப்பூட்டி கிருஷ்ணன் ஏறி அமர காத்திருக்கிறான். சுற்றிலும் மக்கள் வெள்ளம். நேராக குதிரைகள் துவாரகை நோக்கி பறக்கப் போகின்றன. கிருஷ்ணன் ஏன் இன்னும் ஹஸ்தினாபுர அரண்மனையை விட்டு வெளியே வரவில்லை. விடை பெற இவ்வளவு நேரமா? என்று தாருகன் அதிசயித்தான். குதிரைகள் கனைத்தன.


''போகாதே கிருஷ்ணா, போகாதே, இங்கேயே ஹஸ்தினாபுரத்தில் எங்களோடு இரு'' என்று வேண்டுகிறாள் குந்தி.   கிருஷ்ணன் குந்தியின்  அரண்மனை வாயிலுக்கு  வந்து தேரில் அமர்ந்து விட்டான். அவனது இரு கைகளையும் பிடித்துக்கொண்டு மண்டியிட்டு தரையில் மண்டியிடுகிறாள் குந்தி. கண்களில் கங்கையும் காவிரியும் சேர்ந்து வெள்ளத்தை உருவாக்கின. நாக்கு தழுதழுக்க பிரார்த்திக்கிறாள்.
கிருஷ்ணன் பேசாமல் அவளையே பார்த்துக்கொண்டு நிற்கிறான். இதழில் புன்னகை.
''அத்தை, உன் மனம் புரிகிறது'' என்றான்.
नमस्ये पुरुषं त्वद्यमीश्वरं प्रकृते: परम् ।
अलक्ष्यं सर्वभूतानामन्तर्बहिरवास्थितम् ॥१॥
namasye puruùaü tvà.a.adyamã÷varaü prakçteþ param |
alakùyaü marvabhåtànàmantarbahiravasthitam || 1 ||

''ஹே பரிபூர்ண பரமாத்மா, தேவாதி தேவா, சர்வ பிரபஞ்ச காரணா, எங்கும் நிறை மனமோஹனா, உள்ளும் புறமும் வியாபித்தருளும் வாசுதேவா, உன்னை கையெடுத்து கும்பிடும் பாக்யம் பெற்றதற்காகவே உன்னை வணங்குகிறேன் கிருஷ்ணா'' என்று ஆரம்பிக்கிறாள் குந்தி தேவி.

मायाजवनिकाच्छन्नमज्ञाधोक्षमव्ययम् ।
न लक्ष्यसे मूढदृशा नटो नाटयधरो यथा ॥२॥
màyàjavanikàcchannamaj¤àdhokùajamavyayam |
na lakùyase måóhadç÷à naño nàñyadharo yathà || 2 ||

நானோ எழுத்து வாசனை அற்ற, அஞ்ஞானி, கல்விஅறிவற்றவள், மாயத்தோற்றம் கொண்டு மதி மயக்கும் கண்ணா, கபட நாடக சூத்ரதாரி, உன்னை அறிந்து கொள்ளும் திறன் இல்லாதவள் நான். எளிதில் மாயையின் வலையில் விழுந்து அவஸ்தை படுபவள்.
था परमहंसानां मुनीनाममलात्मनाम् ।
भक्तियोगविधानार्थं कथं पश्येम हि स्त्रिय: ॥३॥
tathà paramahaüsànàü munãnàmamalàtmanàm |
bhaktiyogavidhànàrthaü kathaü pa÷yema striyaþ || 3 ||

''என் அப்பனே, ஜெகன்னாதா, உன்னை சகலமும் உணர்ந்த ஞானிகளே கண்டறியமுடியாதபோது. மறையோதும் ஞானியர் கண்ணுக்கே மறைந்து இருப்பவனான நீ, என் போன்ற எளிய பேதை, அறிவற்ற ஜீவனுக்கு, புரிபடுவாயா ? உன்னை அறியும் சக்தி எனக்கு ஏது?. உன் மீது பக்தி ஒன்றையே எப்போதும் செலுத்தி உன் அருள் கிடைப்பதற்கே பெரும் பாக்கியம் செயதிருக்கவேண்டும் நான்.

கிருஷ்ணாய वासुदेवाय देवकीनन्दनाय च ।
नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नम: ॥४॥
kçùõàya vàsudevàya devakãnandanàya ca |
nandagopakumàràya govindàya namo namaþ || 4 ||

தேவகி மைந்தா வாசுதேவா, யசோத நந்தனா, நந்தகுமாரா, கோவிந்தா, உன்னை திரும்ப திரும்ப விழுந்து வணங்குவதே நான் செய்ய முடிந்தது கண்ணா. பசுக்களை ரக்ஷிப்பதால் தானே நீ கோ விந்தன் என்ற பெயர் கொண்டவன். அதற்கு தானே பிருந்தாவனத்தில் நந்தகோப குமாரனாக தோன்றியவன்.
नम: पङ्कजनाभाय नम: पङ्कजमालिने ।
नम: पङ्कजनेत्राय नमस्ते पङ्कजाङ्घ्रये ॥५॥
5.Nama Pankhaja nabhaya, nama Panjkaja maline,
Nama Pankaja nethraya, namaSthe pankajangraye.

இந்த ஸ்லோகத்தை நான் சிறுவயதில் என் தந்தை தினமும் காலையில் சொல்வது நினைவிலிருக்கிறது. சிறு வயதில் அர்த்தம் தெரியாமலேயே ரசித்திருக்கிறேன். மனதில் பதிந்து விட்டது. .
கிருஷ்ணா உன் வயிற்றில் தாமரை மலர் அதன் கொடி போன்ற உருவத்தை பார்த்திருக்கிறேன். நீ பத்மநாபன் மகா விஷ்ணு என்று அப்போது தெரியவில்லை. உன் கண்களும் இப்போது தான் மொட்டவிழ்ந்த தாமரை மலர்கள் என்று பலமுறை வியந்ததுண்டு. அதனால் தான் உன் பார்வை குளிர்ச்சியை தருகிறது. உன் திருவடிகளும் தாமரை மலர் போன்ற மென்மையானவை என்றும் அறிவேன். உன் கழுத்திலும் மணம்கமழ் தாமரை மலர்கள். எப்படிப்பார்த்தாலும் நீ தாமரையின் மொத்த உரு. உன்னை மனமார நமஸ்கரிக்கிறேன் கிருஷ்ணா

பத்மநாபா, எண்ணற்ற எனது நமஸ்காரங்கள், தாமரை வனமாலி வாசுதேவா பத்மலோசனா, தாமரைதிருவடிகளை தொழுகிறேன்.

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...