Thursday, September 27, 2018

MARRIED LIFE



கொஞ்சம் கவனிக்கவேண்டியவை.
J.K. SIVAN
தனக்கு பிடித்த பெண்ணோ, அப்பா அம்மாவுக்கு பிடித்த பெண்ணோ, கல்யாணம் ஆனால் மட்டும் போதாது. சில அடஜஸ்ட்மென்ட்கள் அவசியம் தேவை. அமெரிக்காவிலோ வேறு எங்கோ யாருக்கோ நேரம் இருந்திருக்கிறது. இது விஷயமாக நிறைய சிந்தனை செய்து சில சுவாரஸ்யமான விஷயங்களை சொல்வதை அறிந்தேன். கல்யாணம் ஆனவர்கள் பாதிக்கு மேல் சந்தோஷமாக இல்லை என்று மட்டும் தெரிகிறது. இதற்கு அமெரிக்காவில் ஆராய்ச்சி தேவை இல்லை. அனுபவத்தில் தெரிந்த உண்மை.

1. எங்கேயாவது போகணும். ஆறுமணிக்கு அங்கே இருக்கணும். சரோஜா இன்னுமா ரெடியாகல்லை. வழியிலே டிராபிக் ஜாஸ்தி. இப்போ கிளம்பினாதான் டயத்துக்கு அங்கே இருக்கமுடியும்.... இது ஐந்து மணியிலிருந்து கணவனின் குரல். ஆனால் எந்த புடவை, எந்த நகை, என்ன மேக் அப். ரெண்டு மூன்று தொடர்ந்த டெலிபோன் கால். கமலா, ரோஷிணி ஆலோசனைகள். அவர்கள் எப்போது வரப்போகிறார்கள்? கிளம்பியாச்சா அங்கே என்ன பேசலாம்?? அடுப்பில் பால் பொங்கி அடுப்பே அணைந்தது கூட ஞாபகம் இல்லை. வாஷிங் மெஷின் வேலை செயது முடித்து என்னை நிறுத்து என்று அலறுகிறது..... கணவனுக்கு அடிக்கடி எரிச்சல் ஏற்படுத்தும் விஷயம் இது. இதை தவிர்க்கவேண்டும்.

2. குளிர் அதிதிதி திதி .......கமா இருக்கே கொஞ்சம் AC குறையுங்கோ . கோபாலன் கேட்பதே இல்லை. தினமும் இது நடக்கிறது. படுக்கையில் தூக்கமில்லாத பத்மாக்களுக்கு இது பிடிக்குமா. பாட்டு பெரிசாக வைத்து டம் டம் டும் டும் என்று சத்தம் தலையை ஆட்டிக்கொண்டே கோவிந்தன் கேட்டால் கோமளாவுக்கு எரிச்சல் வராதா. அருகில் படுத்திருக்கும் விசயத்திற்கு விளக்கு எரிந்து கொண்டே இருந்தால் விடிகாலை நாலறைக்கு எப்படி எழுந்து வேலைகளை 8மணிக்குள் முடிக்கமுடியும் அவளும் ஆபீஸ் போகணுமே? விரிசல் விடுகிற இந்த விஷயங்களை கொஞ்சம் அனுசரித்து இது கொஞ்சம் சரி பார்க்க, ரிப்பேர் பண்ண வேண்டிய விஷயம்.

3. ஆகாராதிகளில் கொஞ்சம் கவனம் தேவை. நாளுக்கு நாள் கணவரோ பெருத்துக்கொண்டே வந்தால், எத்தனை தடவை சொல்லியும் உடலில், உடல் பயிற்சியில், வாக்கிங், உணவு கட்டுப்பாடு விஷயத்தில் கவனம் செலுத்தவில்லையானால் குடும்ப வாழ்கையில் விரிசலும் பெருகும் . கல்யாணத்தின் பொது நீ ஸ்லிம்மாக இருந்தது எனக்கு ரொம்ப பிடிச்சது...... உங்க உடம்பு ஸ்போர்ட்ச்மன் மாதிரி இருந்தது. தொந்தியும் தொப்பையும் இப்போ யாரோ ஒரு மாமா மாதிரி இருக்கு...... இதெல்லாம் குறைக்கணும்.

4. கணவன் யாருடனாவது பேசுவது பழகுவது, மனைவி ஆபீஸ் நண்பர்களோடு பேசுவது பழகுவது சந்தேகப் பிராணிகளால் தொல்லையில் கொண்டு வந்து சேர்க்கும். கொஞ்சம் பரந்த மனோபாவம் வேண்டும்.

5. தனக்கு ஏதாவது உப்புமா, கிச்சடி, கிழங்கு காய்கறி, பச்சடி வேண்டாமென்றால் மனைவிக்கு அது பிடிக்கும் என்றாலும் ஹோட்டலில் வாங்காமல் இருப்பது, வீட்டில் செய்யவிடாமல் தடுப்பது தப்பு சார். அது தான் உங்களுக்கும் மாமி. கொஞ்சம் அனுசரித்து வீட்டில் சத்தத்தை குறையுங்கள்.

7. முடியாததை எல்லாம் ''கவலைப்படாதே கோமளா நான் அதை செஞ்சு முடிக்கிறேன் என்று செய்யாமல் அவஸ்தைப்படுவது தப்பு. முடிந்ததை சொல்லவேண்டும். மார் தட்டி வீம்பு பேசி அவ மானப்படுவது எதற்கு.

8 கோபு இங்கே வரட்டும் அவனை காய்ச்சு காய்ச்சு என்று காச்சுகிறேனா இல்லையா பார் என்று சொல்லிவிட்டு கோபு வந்ததும் நல்லபிள்ளையாக அவனுக்கு தாளம் போடுவது அருவருப்பை உண்டாக்கும் விஷயம். உன் உணர்ச்சிகளை வெளிக்காட்டாதே. எது உசிதமோ அப்படி யோசித்து நடந்து கொள் .
பிடிவாதமும் எதிர் வாதமும் பெண்களுக்கே கூடாது என்று A M ராஜா பாடியது மிஸ்ஸியம்மா வில் மோகன ராக பாட்டு மட்டுமல்ல. உயர்ந்த அறிவுரை. கொஞ்சம் இது அடிக்கடி ஞாபகத்துக்கு வரவேண்டும்.

என் மனைவி சமைக்கிறாள் என்றால் நான் எப்படியாவது தப்பி எங்காவது சாப்பிட்டு வந்துவிடுவேன்... அவருக்கு ஒன்றுமே தெரியாது. இடிச்ச புளி மாதிரி பேசறவா வாயை பார்த்துண்டே உட்கார்ந்து இருப்பார். அசமஞ்சம்...... இப்படி நாலு பேர் எதிரில் சொல்வது ரொம்ப தப்பு... இதுவரை செய்தால் இப்போது மோதல் அதை தவிர்க்கவேண்டும். எல்லோருக்கும் தன்மானம் உண்டு.

காரை அப்படி திருப்புங்கோ, வேகமா போங்கோ, வேகத்தை குறையுதுங்கோ, பின்னாலே ஒருத்தன் வேகமாக வரான்.. இப்படி பின் சீட் ட்ரைவர் அதிகாரம் கட்டளை ஆபத்தில் முடியும். ஜாக்கிரதை. ஓட்டுபன் யாரோ அவனுக்கு தெரியும் தனது உயிர், காரின் ஜாக்கிரதை பற்றி.

இப்போ எங்கே இருக்கேள்? என்ன பண்ரேள் .... இப்படி கணவனோ மனைவியோ அரைமணிக்கு ஒருதரம் பரோலில் வந்தவனை போல் செக் பண்ணுவது எரிச்சலை தரும். கணவனும் இப்படி மனைவியை கண்காணிக்க கூடாது. விரிசல் வேண்டாம்.

கும்பகர்ணன் மாதிரி தூங்குவது தப்பில்லை. ரம்பமாக நாலு டன் மரம் குறட்டையை அறுப்பது ராத்திரி பூரா பொறுக்க முடியாது. ஏதாவது ஒரு வழி கண்டுபிடிக்க டாக்டரிடம் போகவேண்டாம். அதை விட்டு தொடர்ந்து காசு காக்காமல் மரம் அறுத்து மற்றவர் தூக்கம் குலைவது ,கலைவது தப்பு. விரிசல் கண்டிப்பாக வரும்.

என்ன ரெண்டுநாளா ஜுரமா? சரியா போயிடும். எழுந்து துணி தோய். என்று மனைவியை விரட்டுவது, அலட்சியப்படுத்ததுவது, அதே நேரம் தனக்கு ஜலதோஷம் வந்தாலே வீட்டை ரெண்டு படுத்துவது சில குடும்பங்களில் நிச்சயம் விரிசல் உண்டாக்குகிறது. ஜாக்கிரதை. அடுத்தவர் உடல் உன் உடல் மாதிரி முக்யமானது தான். அலட்சியம் அதில் கூடாது. விரிசல் வேண்டாம்.

உனக்கு ஜிம்மி நாய்க்குட்டி பிடிக்கும் என்பதற்காக ஜமுனாவிற்கும் உனக்கும் இடையே அதை படுக்க விடுவது தப்புடா. ஜமுனாவிற்கு நாய் பிடிக்காது என்பது போக உன்னையே பிடிக்காமல் போய்விடும். ஜாக்கிரதை.

தினமும் குளிச்சுட்டு வந்தால், குழாய் சரியா மூடுவதில்லை. பேஸ்ட் வாஷ் பேசின் லே ஒட்டிக்கொண்டிருக்கிறது. ப்ரஷ் சரியா அலம்பி வைக்கறதில்லை. அப்படியே மூடமா பேஸ்ட் திறந்திருக்கு. சோப்பு டப்பாலே தண்ணி குளமா இருக்கு. சோப்பெல்லாம் கரைஞ்சு சோப் வாங்கியே சம்பளம் பாதி கறையறது. துடைச்சுண்டு டவலை சுருட்டி கீழே போட்டால் எப்படி காயும்? பாத் ரூமே சொதசொதண்ணு இருக்கு....... கணவன் மனைவி இதற்காக எதற்கு வார்த்தை மீற வேண்டும். கொஞ்சம் கவனமாக இருக்கலாமே.

எங்கம்மா, எங்கப்பா..... எது பேசினாலும் அவர்களை கொண்டு பேச்சில் பெருகுவது கணவனுக்கோ மனைவிக்கோ எப்படி பிடிக்கும்.... ஒருவரின் விருப்பம் இன்னொருவர் விருப்பமாகுமா? தங்களை பற்றி பேசிக்கொள்ள முயலவேண்டும். எங்கோ இருக்கும், எப்போதோ இறந்த அவர்கள் இப்போதைய நிம்மதியை குலைக்க இடம் தரவேண்டாம்.

தினமும் தன் கணவன், மனைவி அழகாக உடுத்துக் கொள்ளவேண்டும், நாலு பேர் பார்க்கும்படியாக இருக்கவேண்டும் என்று நினைப்பது தப்பா? ஆமா கல்யாணம் ஆயி இருப்பது வருஷம் ஆகிறது. இனிமே என்ன தலை வாரம், தினசரி முகச் சவரம் சலவை சட்டை, பேண்ட், இந்த வேஷ்டி போதும், இந்த பழம் புடவை போதும். நைட்டி பகல்ட்டி ஆக இருந்து விட்டு போகட்டுமே..... இந்த எண்ணம் வேண்டாம். விரிசல் விடும் விஷயம் இது.

முக நூல், வாட்டசாப்ப் முக்கியமில்லை. அருகே உன்னை பொம்மையாக பார்த்துக்கொண்டு ஊமையாக இருக்கும் வாழ்க்கை துணைவி, துணைவனை பற்றி நிச்சயம் கவலைப்படவேண்டாமா. அவன்/அவள் மீதும் கொஞ்சம் கவனம் வேண்டாமா ? ஒவ்வொரு இரவும், பகலும் இப்படியே போனால்??

இப்படி சொல்லிக்கொண்டே போனால் என் மனைவிக்கே என்னை பிடிக்காமல் போய்விடும் என்பதால் இப்போதைக்கு இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்... நிறையவே இருக்கிறது சொல்ல.


கொஞ்சம் கவனிக்கவேண்டியவை.
J.K. SIVAN
தனக்கு பிடித்த பெண்ணோ, அப்பா அம்மாவுக்கு பிடித்த பெண்ணோ, கல்யாணம் ஆனால் மட்டும் போதாது. சில அடஜஸ்ட்மென்ட்கள் அவசியம் தேவை. அமெரிக்காவிலோ வேறு எங்கோ யாருக்கோ நேரம் இருந்திருக்கிறது. இது விஷயமாக நிறைய சிந்தனை செய்து சில சுவாரஸ்யமான விஷயங்களை சொல்வதை அறிந்தேன். கல்யாணம் ஆனவர்கள் பாதிக்கு மேல் சந்தோஷமாக இல்லை என்று மட்டும் தெரிகிறது. இதற்கு அமெரிக்காவில் ஆராய்ச்சி தேவை இல்லை. அனுபவத்தில் தெரிந்த உண்மை.

1. எங்கேயாவது போகணும். ஆறுமணிக்கு அங்கே இருக்கணும். சரோஜா இன்னுமா ரெடியாகல்லை. வழியிலே டிராபிக் ஜாஸ்தி. இப்போ கிளம்பினாதான் டயத்துக்கு அங்கே இருக்கமுடியும்.... இது ஐந்து மணியிலிருந்து கணவனின் குரல். ஆனால் எந்த புடவை, எந்த நகை, என்ன மேக் அப். ரெண்டு மூன்று தொடர்ந்த டெலிபோன் கால். கமலா, ரோஷிணி ஆலோசனைகள். அவர்கள் எப்போது வரப்போகிறார்கள்? கிளம்பியாச்சா அங்கே என்ன பேசலாம்?? அடுப்பில் பால் பொங்கி அடுப்பே அணைந்தது கூட ஞாபகம் இல்லை. வாஷிங் மெஷின் வேலை செயது முடித்து என்னை நிறுத்து என்று அலறுகிறது..... கணவனுக்கு அடிக்கடி எரிச்சல் ஏற்படுத்தும் விஷயம் இது. இதை தவிர்க்கவேண்டும்.

2. குளிர் அ தி.. தி.. தி .. தி ..தி ..கமா இருக்கே கொஞ்சம் ACயை குறையுங்கோ . கோபாலன் கேட்பதே இல்லை. தினமும் இது நடக்கிறது. படுக்கையில் தூக்கமில்லாத பத்மாக்களுக்கு இது பிடிக்குமா. தனக்கு பிடித்த டப்பாங்குத்து பாட்டை பெரிசாக வைத்து 'டம் டம் டும் டும்' என்று சத்தம் தலையை ஆட்டிக்கொண்டே கோவிந்தன் கேட்டால் கோமளாவுக்கு எரிச்சல் வராதா. அருகில் படுத்திருக்கும் விஜ யாவிற்கு விளக்கு எரிந்து கொண்டே இருந்தால் விடிகாலை நாலரைக்கு எப்படி எழுந்து வேலைகளை 8 மணிக்குள் முடிக்கமுடியும் அவளும் ஆபீஸ் போகணுமே? விரிசல் விடுகிற இந்த விஷயங்களை கொஞ்சம் அனுசரித்து இது கொஞ்சம் சரி பார்க்க, ரிப்பேர் பண்ண வேண்டிய விஷயம்.

3. ஆகாராதிகளில் கொஞ்சம் கவனம் தேவை. நாளுக்கு நாள் கணவரோ மனைவியோ பெருத்துக் கொண்டே வந்தால், எத்தனை தடவை சொல்லியும் உடலில், உடல் பயிற்சியில், வாக்கிங், உணவு கட்டுப்பாடு விஷயத்தில் கவனம் செலுத்தவில்லையானால் குடும்ப வாழ்கையில் விரிசலும் பெருகும் . கல்யாணத்தின் போது நீ ஸ்லிம்மாக இருந்தது எனக்கு ரொம்ப பிடிச்சது...... உங்க உடம்பு ஸ்போர்ட்ச்மன் மாதிரி இருந்தது. தொந்தியும் தொப்பையும் இப்போ யாரோ ஒரு மாமா மாதிரி இருக்கு...... இதெல்லாம் குறைக்கணும்.

4. கணவன் யாருடனாவது பேசுவது பழகுவது, மனைவி ஆபீஸ் நண்பர்களோடு பேசுவது பழகுவது சந்தேகப் பிராணிகளால் தொல்லையில் கொண்டு வந்து சேர்க்கும். கொஞ்சம் பரந்த மனோபாவம் வேண்டும்.

5. தனக்கு ஏதாவது உப்புமா, கிச்சடி, கிழங்கு காய்கறி, பச்சடி வேண்டாமென்றால் மனைவிக்கு அது பிடிக்கும் என்றாலும் ஹோட்டலில் வாங்காமல் இருப்பது, வீட்டில் செய்யவிடாமல் தடுப்பது தப்பு சார். அது தான் உங்களுக்கும் மாமி. கொஞ்சம் அனுசரித்து வீட்டில் சத்தத்தை குறையுங்கள்.

6. முடியாததை எல்லாம் ''கவலைப்படாதே கோமளா நான் அதை செஞ்சு முடிக்கிறேன் என்று செய்யாமல் அவஸ்தைப்படுவது தப்பு. முடிந்ததை சொல்லவேண்டும். மார் தட்டி வீம்பு பேசி அவ மானப்படுவது எதற்கு.

7 கோபு இங்கே வரட்டும் அவனை காய்ச்சு காய்ச்சு என்று காச்சுகிறேனா இல்லையா பார் என்று சொல்லிவிட்டு கோபு வந்ததும் நல்லபிள்ளையாக அவனுக்கு தாளம் போடுவது அருவருப்பை உண்டாக்கும் விஷயம். உன் உணர்ச்சிகளை வெளிக்காட்டாதே. எது உசிதமோ அப்படி யோசித்து நடந்து கொள் .

8. பிடிவாதமும் எதிர் வாதமும் பெண்களுக்கே கூடாது என்று A M ராஜா பாடியது மிஸ்ஸியம்மா வில் மோகன ராக பாட்டு மட்டுமல்ல. உயர்ந்த அறிவுரை. கொஞ்சம் இது அடிக்கடி ஞாபகத்துக்கு வரவேண்டும்.

9. என் மனைவி சமைக்கிறாள் என்றால் நான் எப்படியாவது தப்பி எங்காவது சாப்பிட்டு வந்துவிடுவேன்... அவருக்கு ஒன்றுமே தெரியாது. இடிச்ச புளி மாதிரி பேசறவா வாயை பார்த்துண்டே உட்கார்ந்து இருப்பார். அசமஞ்சம்...... இப்படி நாலு பேர் எதிரில் சொல்வது ரொம்ப தப்பு... இதுவரை செய்தால் இப்போது மோதல் அதை தவிர்க்கவேண்டும். எல்லோருக்கும் தன்மானம் உண்டு.

10.காரை அப்படி திருப்புங்கோ, வேகமா போங்கோ, வேகத்தை குறையுதுங்கோ, பின்னாலே ஒருத்தன் வேகமாக வரான்.. இப்படி பின் சீட் ட்ரைவர் அதிகாரம் கட்டளை ஆபத்தில் முடியும். ஜாக்கிரதை. ஓட்டுபன் யாரோ அவனுக்கு தெரியும் தனது உயிர், காரின் ஜாக்கிரதை பற்றி.

11. இப்போ எங்கே இருக்கேள்? என்ன பண்ரேள் .... இப்படி கணவனோ மனைவியோ அரைமணிக்கு ஒருதரம் பரோலில் வந்தவனை போல் செக் பண்ணுவது எரிச்சலை தரும். கணவனும் இப்படி மனைவியை கண்காணிக்க கூடாது. விரிசல் வேண்டாம்.

12. கும்பகர்ணன் மாதிரி தூங்குவது தப்பில்லை. ரம்பமாக நாலு டன் மரம் குறட்டையை அறுப்பது ராத்திரி பூரா பொறுக்க முடியாது. ஏதாவது ஒரு வழி கண்டுபிடிக்க டாக்டரிடம் போகவேண்டாம். அதை விட்டு தொடர்ந்து காசு காக்காமல் மரம் அறுத்து மற்றவர் தூக்கம் குலைவது ,கலைவது தப்பு. விரிசல் கண்டிப்பாக வரும்.

13. என்ன ரெண்டுநாளா ஜுரமா? சரியா போயிடும். எழுந்து துணி தோய். என்று மனைவியை விரட்டுவது, அலட்சியப்படுத்ததுவது, அதே நேரம் தனக்கு ஜலதோஷம் வந்தாலே வீட்டை ரெண்டு படுத்துவது சில குடும்பங்களில் நிச்சயம் விரிசல் உண்டாக்குகிறது. ஜாக்கிரதை. அடுத்தவர் உடல் உன் உடல் மாதிரி முக்யமானது தான். அலட்சியம் அதில் கூடாது. விரிசல் வேண்டாம்.

14. உனக்கு ஜிம்மி நாய்க்குட்டி பிடிக்கும் என்பதற்காக ஜமுனாவிற்கும் உனக்கும் இடையே அதை படுக்க விடுவது தப்புடா. ஜமுனாவிற்கு நாய் பிடிக்காது என்பது போக உன்னையே பிடிக்காமல் போய்விடும். ஜாக்கிரதை.

15. தினமும் குளிச்சுட்டு வந்தால், குழாய் சரியா மூடுவதில்லை. பேஸ்ட் வாஷ் பேசின் லே ஒட்டிக்கொண்டிருக்கிறது. ப்ரஷ் சரியா அலம்பி வைக்கறதில்லை. அப்படியே மூடமா பேஸ்ட் திறந்திருக்கு. சோப்பு டப்பாலே தண்ணி குளமா இருக்கு. சோப்பெல்லாம் கரைஞ்சு சோப் வாங்கியே சம்பளம் பாதி கறையறது. துடைச்சுண்டு டவலை சுருட்டி கீழே போட்டால் எப்படி காயும்? பாத் ரூமே சொதசொதண்ணு இருக்கு....... கணவன் மனைவி இதற்காக எதற்கு வார்த்தை மீற வேண்டும். கொஞ்சம் கவனமாக இருக்கலாமே.

16. எங்கம்மா, எங்கப்பா..... எது பேசினாலும் அவர்களை கொண்டு பேச்சில் பெருகுவது கணவனுக்கோ மனைவிக்கோ எப்படி பிடிக்கும்.... ஒருவரின் விருப்பம் இன்னொருவர் விருப்பமாகுமா? தங்களை பற்றி பேசிக்கொள்ள முயலவேண்டும். எங்கோ இருக்கும், எப்போதோ இறந்த அவர்கள் இப்போதைய நிம்மதியை குலைக்க இடம் தரவேண்டாம்.

17. தினமும் தன் கணவன், மனைவி அழகாக உடுத்துக் கொள்ளவேண்டும், நாலு பேர் பார்க்கும்படியாக இருக்கவேண்டும் என்று நினைப்பது தப்பா? ஆமா கல்யாணம் ஆயி இருப்பது வருஷம் ஆகிறது. இனிமே என்ன தலை வாரம், தினசரி முகச் சவரம் சலவை சட்டை, பேண்ட், இந்த வேஷ்டி போதும், இந்த பழம் புடவை போதும். நைட்டி பகல்ட்டி ஆக இருந்து விட்டு போகட்டுமே..... இந்த எண்ணம் வேண்டாம். விரிசல் விடும் விஷயம் இது.

18. முக நூல், வாட்டசாப்ப் முக்கியமில்லை. அருகே உன்னை பொம்மையாக பார்த்துக்கொண்டு ஊமையாக இருக்கும் வாழ்க்கை துணைவி, துணைவனை பற்றி நிச்சயம் கவலைப்படவேண்டாமா. அவன்/அவள் மீதும் கொஞ்சம் கவனம் வேண்டாமா ? ஒவ்வொரு இரவும், பகலும் இப்படியே போனால்??

இப்படி சொல்லிக்கொண்டே போனால் என் மனைவிக்கே என்னை பிடிக்காமல் போய்விடும் என்பதால் இப்போதைக்கு இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்... நிறையவே இருக்கிறது சொல்ல.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...