Tuesday, September 11, 2018

RASANISHYANDHINI



ரஸ நிஷ்யந்தினி                       
            J.K. SIVAN            
பருத்தியூர் கிருஷ்ண ஸாஸ்த்ரிகள் 

ஸ்ரீ ராமனைப் பற்றி அபூர்வமான தேவ ரஹஸ்யங்களை விஸ்வாமித்ர ரிஷி  தசரதனுக்கு எடுத்துச் சொல்வதை 100 ஸ்லோகங்களாக ''அஹம் வேத்மி'' (நான் அறிவேன்) என்று அவர் சபையில் உரைப்பதாக ஸ்ரீ கிருஷ்ண ஸாஸ்திரிகள்  ரஸனிஷ்யந்தி என்று வடித்து எடுத்த ஊற்றாக நாடெங்கும் பிரவசனம் செய்தததின் சிறிதளவு சாரத்தை இதுவரை பருகினோம். இன்றைய கட்டுரையோடு அதை நிறைவு செயகிறோம். 

91. உன் மகன் ராமனை என்னுடன் காட்டுக்கு அனுப்ப நீ தயங்குகிறாய். காரணம் அவன் எல்லோரையும் போல்  அக்னி, சூரிய வெப்பம், சந்திரனின் குளிர், இந்திரனின் கோபம், வாயுவின் சீற்றம், யமனின் சக்தி இதற்கெல்லாம் அஞ்சுபவன் என்று எண்ணுவதால். ராமன் யார் தெரியுமா?அவனைக்கண்டு அஞ்சி நடுங்கி தான் அக்னி எரிகிறான்,இந்திரன் யமன் எல்லோரும் அவரவர் வேலைகளை கிரமமாக செய்கிறார்கள்.  சூரிய சந்திரர்கள் காலத்தில் தமது கடமைகளை சரிவர  செய்கிறார்கள். புரிந்துகொள். 

92. சிறிய பாலகன்.  பன்னிரெண்டு ஆனவன் என்று சொன்னாயே தசரதா, உன் மகனுக்கும் வயதுக்கும் சம்பந்தமே இல்லை. நான் அறிவேன். அவன் என்றும் ஸாஸ்வதமான எல்லா  உயிர்களுக்கும்  உள்ளே உறையும் பரமாத்மா. அவனுக்கு  வளர்ச்சியோ உருவ கட்டுப்பாடோ ஏது ? ஒரே நேரத்தில் அணுவுக்குள் அணு,  பெரியதில் பெரிதானவன். 

93. அவன் தனது சிறிய பாதங்களால் நடந்து என்னோடு காட்டுக்கு வரவேண்டுமே  என்ற கவலை. தசரதா, நானறிவேன், நீயும் அறிந்துகொள். மூன்று அடியில் இந்த மண் விண் அனைத்துலகையும் கடப்பவன் ஸ்ரீ ராமன்.

94. ஏதோ காலம் அருளியதால் ஜனித்தவன் ராமன் என்றா நினைக்கிறாய்? எனக்கு தெரியும்.  கண்ணைப்பறிக்கும் மின்னல் ஒளி கொண்ட ராமனால் தான் நிமிஷங்கள், வினாடிகள், மணிகள், காலத்தின் எல்லா அளவுகளும்  தோன்றியவை. அவனே அவற்றை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவன்.

95. என் மீது   ரொம்ப பிரியம் கொண்டவன் என் மகன் என்று சொன்னாயே. சிரிப்பு வருகிறது தசரதா , அவனிடமிருந்து பொங்கி ததும்பும் அன்பு ஒன்றினால் உலகில் எதுவுமே எல்லாமே பிரியமாக காண்கிறது. அன்பில் திளைத்து மகிழ்கிறது.

96 நம்மைப்போல் பஞ்சபூத சேர்க்கையால் உண்டான உருவமா  ராமன்? அப்படியா நினைக்கிறாய் நீ? இல்லை தசரதா, அவன் பரப்பிரம்மம். அவனில் ஆகாசம் முதலான ஐம்பூதங்களும் இயங்குபவை. கண்ணுக்கு தெரிந்த தெரியாத அனைத்து  உருவங்களில் உள்ள   ஜீவன்களில் ஆத்மா அவன்.  பிராண ஆதாரம். மனதில் விளையும் ஆனந்தத்தின் காரணம். அவனிடமிருந்து எங்கும் எதிலும் சாந்தி சாந்தி சாந்தி, அழிவற்ற நிரந்தரம் தோன்றுகிறது.

97. உன்மீது ரொம்ப பந்த பாசமுள்ளவன் ராமன் என்று நினைக்கிறாயே . தெரிந்துகொள். அகில புவன ஜீவன்களின் மனமும் அவன் மீது பந்தம் பாசம் ஈர்ப்பு கொண்டவை. 

98. உனக்கு உன் மகன் ராமன்  உன்னோடு அயோத்தியில் இருப்பதாக ஒரு நினைப்பு.  பரப்ரம்மத்திற்கு தனியாக எங்காவது இடம் என்று ஒன்று உண்டா. சர்வமும் அதுவேயாக அல்லவோ வியாபித்திருக்கிறது. 

99. ராமன் மற்றவர்கள் போல் கடவுளை நினைத்து   வழிபாட்டில் இருபவனா.  எல்லா வழிபாட்டிற்கும் மூலமாக, எவராலும் வழிபடப்படுபவன் ஸ்ரீ ராமன் என்பது உனக்கு தெரியுமா?

100. ராமனைத் தெரிந்தவன் அவனை நம்பி இருப்பவன் செல்வந்தனாகலாம் என்று நினைக்கிறாய். ராமனை உணர்ந்தவன் அமரன். ஸாஸ்வதமானவன் . நிரந்தரன். இதெல்லாம் எனக்கு தெரியும் நான் அறிவேன். அதனால் உனக்கும் உணர்த்தினேன்.

விஸ்வாமித்ரர் கடல் மடை போல் இவற்றை சொல்கிறார். நமக்கு படிக்க பல நாள் ஆனாலும் சில நிமிஷங்களில் இதெல்லாம் விஸ்வாமித்ரர் அயோத்தியில் தசரதன்  அவையில் எல்லோரும் அறிய அவனுக்கு உபதேசிக்கிறார். தசரதன் தைரியமாக சந்தோஷமாக ராமனை அவரோடு அனுப்புகிறான்.

பருத்தியூர் கிருஷ்ண சாஸ்த்ரிகள் கூறும் 100 ஸ்லோகங்களில் விஸ்வாமித்ரர் சொல்வதாக வருபவை எல்லாமே  வால்மீகி மகரிஷியின் இராமாயண ஸ்லோகங்களில் இருக்கும் உண்மைகள்.அவற்றை அழகாக கையாள்கிறார். ஒரு இடத்தில் ஹநுமானுக்கு சொல்வது போல்: '' வானர சேனையின் முக்கியமான தலைவனே, ஆஞ்சநேயா,  ராமனின்  திவ்ய சுந்தர ரூபம்  அவன்  அங்கிருந்து அகன்றாலும் கூட  அந்த காட்சி கண்ணை விட்டு  எப்போதும் அகலாது.''  

ஆரண்யகாண்டத்தில் ஒரு ஸ்லோகத்தில் காட்டில் வசிக்கும் அனைத்து ரிஷிகள், முனிகள், யோகிகள் அனைவரும் ராமனை காணும்போது அவனது கம்பீரத்தை  பௌருஷதத்தில் அசந்து போகிறார்கள்.அவனது பொருத்தமான மரவுரி அவர்களை மயங்க வைக்கிறது'' என்கிறார் வால்மீகி.

கண்ணுக்கு இனியவன் ராமன், தெவிட்டாத இன்பம் தரும் சுந்தரரூபன்,  என்பது எவ்வளவு பொருத்தமானது.

உபநிஷத்,    ஜீவாத்மா பரமாத்மாவை ரெண்டு பறவைகளாக ஒரு மரத்தில் ஒன்றோடொன்று அன்புடன் இணைந்தவை, ஒன்று கர்மாவின் பலனை பழம் தின்னுவதாக காட்டி மற்றொன்று அதற்கு சாட்சியாக தனித்து இருப்பதாக அழகாக சொல்கிறது.  ராமன் புருஷோத்தமன், கர்மபலன்கள் அணுகாதவன். ஒவ்வொருஜீவனிலும்  பரமாத்மா ஸ்வரூபமாக அவன்  அவரவர் கர்மபலனுக்
கேற்றவாறு அனுபவம் பெறுவதை சாட்சியாக நின்று கவனிப்பவன் .  

ராமன்  யார் என்று இனி தெரிந்து கொள்வோம்:

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...