Saturday, September 29, 2018

IRUPADHU VARUSHAM



இருபது வருஷம்....  ஜே.கே. சிவன் 


அடுத்த மாதம்  லீலாவதி மாமி பாட்டியாக போகிறாள். பெண்ணுக்கு பிள்ளையோ பெண்ணோ  வரப்போகிறதே.   அமெரிக்கா  பறக்க போகிறாள்.வேலைக்கு காசில்லாத ஆயா எங்கே கிடைப்பாள் என்று அவள் நண்பிகள் முதுகுக்கு பின்னால் பேசுகிறார்கள். மாமிக்கு  தன்னை ஏதோ ஞாபக மறதியாக  சரஸ்வதியோடு எது வாக்குவாதத்தின் போது  ரதியாக  படைத்துவிட்டான் அந்த பிரமன் என்று நினைப்பு. என்னை அழகு அழகு ன்னு எல்லோரும் சொல்றாளே. வெக்கமாக இருக்கு என்று தலையில் ரெண்டு சுருள் எடுத்து முன்னால் விட்டுக்கொள்ளும் வழக்கம்.

ரெண்டு நாளைக்கு முன்னாள்  வடைக்கு அரைத்துக்கொண்டிருந்த போது  மிக்சிக்கு  வலிக்கவில்லை. இடது நெஞ்சு வலித்தது. மூச்சு திணறியது. கண் இருந்தது கை தோள்  மேல் முதுகு வலி.   நாணா என்று கத்தி கீழே விழுந்தாள்.  நாராயணஸ்வாமி எனும் தம்பி உடனே ஒரு  ஊபர் பிடித்து அழைத்து வா எடுத்து போ  ஆஸ்பத்திரி கொண்டுபோனான். பெரிய பெரிய டாக்டர்கள் மாமியை பார்த்து  நின்று போன இதயத்தை எழுந்திரு எழுந்திரு என்று அடித்து  பயனில்லை.  மாமி  கிருஷ்ண  பக்தை. அவள் இறந்து போனது அவளது ஸூக்ஷ்ம சரீரம் பார்த்துக்கொண்டிருந்தது.  தனது உடல் அந்த பெரிய அறையில் நிறைய மெஷின்களுக்கு  நடுவில் வெள்ளை படுக்கையில்.மேலே பச்சை கவுன்  கை கால் அசையாமல் மரக்கட்டை. இதயம் நின்று சில நிமிஷங்கள்.. ''என்னடி லீலா இப்படி பண்ணிட்டே.  அடுத்தமாசம் அமெரிக்கா....பேரனோ பேத்தியோ...ஆசையா பாக்கணும் னு இருந்தியே....அவள் சூக்ஷ்ம சரீரம் கண்ணீர் விட்டது. அதன் தோள்  அருகே  எமதர்மன் நின்று கொண்டிருந்தான். எதற்கு அழறே.  இதிலே ஏதோ தவறு ஆகிவிட்டது.  ராங் அட்ரஸ் போய்ட்டான் என் அசிஸ்டன்ட்...  லீலா  மாமிக்கு இன்னும் இருவது வருஷம் இருக்கு... அப்புறம் தான் என்கிட்டே வரணும்.''

சூக்ஷ்ம சரீரம் கையெடுத்து கும்பிட்டு  லீலாவதி உடம்பில் மீண்டும் புகுந்து கொண்டது. நர்ஸ் ரோஸ் டாகடர் டாக்டர் என்று கத்தி   கோபால்ராவ் வந்து பார்த்து அதிசயித்தார். இதயம் இயங்குவதை கம்ப்யூட்டர் மானிடர் சிறு கோடாக அசைந்து காட்டியது.  வேக வேகமாக மீண்டும் என்னன்னவோ சிகிச்சை.   ஒருமணிநேரத்தில்  லீலாவதி கண்ணை திறந்தாள். நாணா  சிரித்தான்.  வடபழனி விபூதி நெத்தியில் தடவினான். முருகன் காப்பாத்திட்டான்.

லீலாவதிக்கு  எல்லாம் தெரிந்தது. தான் இறந்தது. தனது உடலை தானே பார்த்தது. எமன் இன்னும் இருபது வருஷம் இருக்கு என்று சொன்னது.
நாலைந்து நாளில் நடக்க ஆரம்பித்தாள். அமெரிக்கா யாத்திரைக்கு ஏற்பாடுகள் ஜரூராக பண்ணினாள் அழகு சாதனங்கள் உபயோகித்தாள் . சிறந்த மேக்கப் எல்லாம்  பண்ணிக்கொண்டாள்.

அப்புறம் என்ன.  எல்லாம் முடிந்து வெளியே வந்தாள் . அடையாளம் தெரியவில்லை மாமியை.  எல்லோரும் என்னடி லீலாவதி இருபது வருஷம் குறைஞ்சு  போயிட்டே.   ஒருவர் இருவரல்ல  நிறைய பேர்  இருபது  வருஷம் குறைச்சல் பத்தி சொன்னது அவளுக்கு  ஆனந்தத்தை தந்தது 
வாசலில் சென்றாள்   ஆட்டோ என்று கத்தினாள்  சாலையின் எதிர் பக்கம் நின்றிருந்த  ஆட்டோ நகர்ந்தான். அவனை நோக்கி ஓடினாள். அதை தண்ணீர் லாரி காரன் எதிர்பார்க்காமல் அவள் மீது எட்டு டன்  ஏறியது.  இருபது வருஷம் கூடினால் என்ன குறைந்தால் என்ன கணக்கு சரிதான் என்று எமனின் ஆள் அவளை தூக்கி போனான்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...