Sunday, September 2, 2018

SUR SAGARAM



சூர் சாகரம் J.K. SIVAN
சூர்தாஸ்
நந்தலாலா உனையே நினைக்கிறேன்

jo sukh hot Gopaalahin gaaye
so nahin hot kiye jap tap ke kotik teerath nhaaye
diye let nahin chaari padaarath, charan kamal chit laaye
teeni lok trin sam kari lekhat, nand-nandan ur aaye
banseebat brindaaban jamunaa, taji baikunth ko jaaye
soordaas hari ko sumiran kari, bahuri na bhav chali aaye.

Translation (by Sunil Uniyal) :
The bliss one gets singing Gopal's glory doesn't come through fasts or meditation or bathing in sacred water.The devotee doesn't need the four purusharthas, once to His lotus feet he surrenders himself.The splendour of the three worlds seems a straw, when he enters the heart of Nanda's son.
He doesn't want to give up Brindavan on the Yamuna for any residence even in the Heaven.
Surdas says that to Hari who truly prays, won't come back to this world again.

எத்தனை மாசம், வருஷம் உபவாசம் இருந்திருக்கிறாய். நிர்ஜலமாக நீர் கூட பருகாமல்...ஊர் ஊராக போய் எத்தனை புண்ய நதிகள், தீர்த்த ஸ்நானம் செய்த்திருக்கிறாய். டயரியில் குறித்து வைத்திருப்பாயே.
கிருஷ்ணனை அனுபவிக்க முடிந்ததா?

ஏன் ஓரிருமுறை அற்புதமான அவன் திருநாம பஜனை, சுகம் சங்கீதமாக கேட்கும்போது மட்டும் கண்களில் தாரை தாரையாக ஆறு பெருகுகிறது? மேலே சொன்னதெல்லாம் உடல் சம்பந்தப் பட்டது. ஸ்ரவணம் காதுவழியாக கிருஷ்ணனை நெஞ்சில் நிரப்புவது. புரிகிறதா? அவன் சரண கமலத்தை மனதில் இருத்திக் கொள். நீயே கதி கிருஷ்ணா என்று உன்னை அவனுக்கு மனதார கொடு. அது ஒன்றே போதும். எந்த புண்ய புருஷார்த்தமும் தேடவேண்டாம். அந்த நந்தலாலா உன் மனதில் குடிபுகுந்து விட்டால், மூன்று லோகமும் கூட ஒரு துரும்புக்கு சமமாகும். பிருந்தாவனத்தில் நந்தகுமாரன் இருந்த யமுனாநதி தீரத்தில் ஒரு முறை நின்று கைகூப்பும் ஆனந்தம் கிடைத்தால் ஸ்வர்கத்தில் இடம் இருக்கிறது வா என்றால் கூட போகமாட்டேன்.



ஆமாம் சூர் தாஸ் தான் அழகாக சொல்கிறாரே ''ஹரியை மனதில் நினைத்தவன் இந்த உலகத்திலேயே இல்லை. அவன் உலகே தனி ''

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...