Sunday, September 30, 2018

TAMIL SCHOLARS





இந்த சதாவதானியை  தெரியுமா?   J.K. SIVAN 

கன்யாகுமரி,   நாகர்கோயில் அதை ஒட்டிய காயல் பட்டினம் போன்ற பகுதிகள்  நாஞ்சில் நாடு என்ற பெயரில் தமிழோடு கலந்தவை.
அந்த பக்கத்திலிருந்து ஒரு அற்புத கவிஞர் உருவானார். ஷேக் தம்பி என்று அந்த புலவருக்கு பெயர். தமிழில் அபார ஞானம். சதாவதானி. அதாவது  ஒரே சமயம் நூறு விஷயங்களில் கவனம் சென்றாலும் எதிலும் தவறு, தப்புகளிருக்காது. எட்டு விஷயங்கள் செய்பவன் அஷ்டாவதானி.

ஒரு சமயம்  வடலூர் வள்ளலாரின் அருட்பா  ஏமாற்று வேலை,  மருட்பா என்று சிலர்  எதிர்த்தபோது  வள்ளலாரின்  அருட்பாவை ஆதரித்து கொதித்தெழுந்தனர் ஷேக் தம்பி பாவலர்.  தமிழில் அவர் பெயரை  செய்குத்தம்பி புலவர் என்பார்கள்.

 ஒரு வேலையையே  சரியாகி செய்ய முடியாத நம்  சதாவதானம் செய்வதை பற்றி  சரியாக யோசிக்க முடியாதவர்கள். உதாரணமாக  சதாவதானிக்கு ஒரு பக்கம் முதில் மல்லிகைப்போ ஒன்றன் பின் ஒன்றாக போடப்பட்டு அது எத்தனை என்று பார்க்காமலே சொல்லவேண்டும். மணி எங்கோ நடித்துக்கொண்டிருக்கும். எத்தனை தடவை மணி அடித்தது என்று கேட்டால் சரியாக சொல்லவேண்டும். ஒரு பக்கம் ஒரு அடி   கொடுத்து இதில் ஆரம்பி,  இன்னொரு வார்த்தை கொடுத்து அதில் முடி என்று வெண்பா கேட்பார்கள், குறித்த நேரத்தில் அதை நிறைவேற்ற வேண்டும்.

இப்படியெல்லாம் சோதனைகளில் வெற்றி பெற்றவர் செய்குத்தம்பி பாவலர்.

ஒரு தடவை சில  புலவர்கள் அவரை சோதித்து  தோற்கடிக்கவேண்டும் என்று எண்ணினார்கள்.  செய்குத்தம்பியை ஒரு சபைக்கு அழைத்து 
சதாவதானம் நடந்தது.  புலவர் அதை சரியாகி செயதுகொண்டுவந்தார்.  நடுவே ஒருவன் எழுந்து 

புலவரே,   நான் ஒரு கடைசி அடி வார்த்தை கொடுக்கிறேன் அதில் முடியும்படியாக ஒரு பாடல் உடனே சொல்லமுடியுமா?'' என்றான் 
அதற்கென்ன  ''கேளுங்கள் '' என்கிறார் புலவர்.
நீங்கள் பாடும் பாட்டின் கடைசி அடி    ''துருக்கனுக்கு ராமன் துணை''   என்று முடியவேண்டும். சரி ஆரம்பியுங்கள் என்றான் அந்த புலவன்.

துருக்கனுக்கு எப்படி ராமன் துணை?? ராமன் காலத்தில் துருக்கர்களே கிடையாதே. அந்த மதமே பிறக்கவில்லையே?  இப்படி எல்லாம் யோசிக்க கூட நேரமில்லை செய்குத்தம்பி பாவலருக்கு. ஆரம்பித்தார் அற்புதமாக 

(எனக்கு முதல் மூன்றடி மறந்துபோய்விட்டது)   மூன்றாவது அடி  முடிவில்     ''....................................... பரத்த சத்
நாலாவது  அடி கடைசி அடியில்                                                                                                 துருக்கனுக்கு ராமன் துணை.'
எப்படி லாகவமாக  துருக்கனுக்கு  என்பதை சத்ருக்கனுக்கு என்று மாற்ற அந்த அற்புத புலவருக்கு தோன்றியது என்று இதை எழுதும்போது கூட  வியக்கிறேன்.   தமிழ்நாட்டில் விந்தை மனிதர்களுக்கு பஞ்சமே இல்லை.  குறும்பாக  இந்த ஈற்றடி  கொடுத்தவன் நிச்சயம் அசந்து போயிருப்பான்.

இன்னொருமொரு செய்குத்தம்பி பாவலரின் கவிதையை ரசித்து விடை பெறுவோம்.

''கொக்கிவிட்ட சங்கிலிபோற் கூண்டெழுந்து நும்மடியார்
சொக்கிவிட்ட நல்லருட்கே தோய்ந்து நின்றாரை யோநா
னுக்கிவிட்ட நெஞ்கினான யுள்ளுடைந்த மெய்ம்மடங்கிக்
கக்கிவிட்ட தம்பலொத்தேன் கல்வத்து நாயகமே.

துட்டென்றால் வாயைத்திறந்து துடிதுடித் தெழுந்து
கொட்டென்று கேட்டுநிற்குங் கோளர் கட்கோ - இட்டென்றும்
வற்றாத் தனம்படைத்த வள்ளல்சி தக்காதி
 பொற்றா மரைக்கோ புகழ்

என்னைவிட  எத்தனையோஓஓஓஓஓஓ   மடங்கு உயர்ந்த ஞானஸ்தர்கள்  பண்டிதர்கள் உங்களில் உண்டே.  யாராவது ஒருவர் இந்த மேலே கண்ட  ரெண்டு தமிழ் செய்யுளுக்கு அர்த்தம் எழுதுங்கள். மற்றவர்கள் என்னையும் சேர்த்து தான்,  செய்கு தம்பி பாவலர்  கவிதை நயத்தை தெரிந்து கொள்கிறோம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...