Sunday, July 12, 2020

TEMPLE SANCTUM SANCTORIUM



                  கொஞ்சூண்டு  யோசிப்போமா?  J K SIVAN 

மாதக்  கணக்காக   கொரோனாவுக்கு பயந்து    அனைவரும்  வீட்டில் பதுங்கி இருக்கும் வேளையில்  நிறைய  நல்ல விஷயங்கள் சொல்லி இருக்கிறேன்  என்ற  சந்தோஷம் எனக்கு இருக்கிறது.    கோரோனோ  பீதி சீக்கிரமே  விலகும்.  பழையபடி வாழ்க்கை திரும்பும்.   ஆனால்  இந்த நாலு மாத பழக்கங்கள் சிலவும்  கட்டாயம் தொடரவேண்டும். 

யாரையும்  தொடக்கூடாது. சற்று தூர நின்று  கைகூப்பி வணங்கினால் போதும். வாயை,  மூக்கை மூடும் பழக்கம் நல்லது.  வெளியே சென்று வந்ததும் கைகால்களை கழுவிவிட்டு உள்ளே வரவேண்டும். பழைய சட்டை துணிகளை நனைக்கவேண்டும். குளிக்க வேண்டும். வெளியே  உணவு பண்டங்கள் சாப்பிடுவது தவிர்க்க வேண்டும். 

கட்டாயம்  கோயில்களுக்கு செல்ல குழந்தைகளை  பழக்குங்கள். எதற்கு  கோவில் செல்லவேண்டும் என்று கேட்போருக்கு  சில காரணங்களை விளக்கலாம்:

பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்களில்தான் கோயில்களை  பழையகாலத்தில் கட்டி இருக்கிறார்கள். 

பாசிட்டிவ்  சக்தி என்கிறோமே  அந்த சக்தி,  ENERGY  போன்ற மின்காந்த சக்தி அங்கே உண்டு.  அப்படிப்பட்ட சக்தி   நிரம்பிய   இடம் தான் கோவிலில்   கர்ப்பகிரகம்  எனும்  மூலவர் சந்நிதி . கோவிலால்  தான் அந்த சுற்று வட்டாரமே  காந்த சக்தி,  ஆகர்ஷண சக்தி பெறுகிறது.  

 மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட இடத்தில்  அடியில்  கீழே சில செப்பு தகடுகள்  மூலிகைகள் பதிக்கப்  பட்டிருக்கும் அது தான்  அந்த எனர்ஜியை  மின்காந்த சக்தியை,  பன்மடங்காக்கி வெளிக் கொணரும். கற்பகிரஹத்தில் ஜன்னல்கள் கிடையாது.  ஆகவே  அந்த  சக்தி வெளியே தப்பி  செல்ல இடமிருக்காது.  ஒரே வழி  கற்பகிரஹ வாசல். அதனால் சந்நிதிக்கு வெளியே அது வேகமாக வெளியேறும் இடத்தில் நாம் நிற்கிறோம். நமக்கு அந்த பலன் கிடைக்கிறது.  கர்பகிரஹம் என்றாலே தாயின் வயிற்றில் கரு வளரும் இடம் போல்  ஜன்னல், வெண்டிலேட்டர் எதுவுமில்லாதது.    மூல ஸ்தானம்   ஒரே ஒரு சிறிய குனிந்து வெளியேவரும்  வாசல் மட்டும் தான் கொண்டது. ஒருவர் இருவர் மட்டுமே உள்ளே செல்ல இடம்  உள்ளது.   

 கோயில்  ப்ராஹாரத்தை  ப்ரதக்ஷிணமாக,   இடமிருந்து வலமாக   ஏன் சுற்றி வருகிறோம்? மூலவர் கருவறையிலிருந்து வெளிவரும் எனர்ஜியின்  சுற்று பாதை  அது.  அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே  அந்த எனர்ஜி சுற்று ம்  பாதை யோடு  நாமும் சேர்ந்து சுற்ற அந்த எனர்ஜி அப்படியே நம் தேகத்தில் சேரும்.  அது   உடம்புக்கும், மனதிற்கும், மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி.

மூலஸ்தானத்தில்   மின் விளக்கு உபயோகிப்பதில்லை.  எண்ணெய், நெய்   தீபம்  கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும்.  விக்கிரகத்திற்குப்   பின் ஒரு விளக்கு இருக்கும்    அதை சுற்றி கண்ணாடி ஒன்று இருக்கும். அது அந்த  மின்காந்த சக்தியை, எனர்ஜியை அப்படியே  பிரதிபலித்து  சுவற்றிலடித்த பந்துபோல்   வெளியே   தள்ளும்.

 மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும்  அபிஷேகம் செய்வதால்  அந்த சக்தி  கூடுகிறது. அபிஷேக  நீரில் சக்தி கலக்கிறது.  அதை தான் ஒளஷதம் என்று நமக்கு தாமிரப்பாத்திரத்தில் கொண்டுவந்து தருகிறார்கள்.   தாமிரப்பத்திரத்தில் உள்ள அந்த நீரில் என்னவெல்லாம் கலந்திருக்கிறது என்று தெரியுமா?
பூக்கள்,  கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்),கிராம்பு (கிளவ்) ஆகவே  தாமிர செம்பில் விநியோகம் செய்யும்  அபிஷேக  தீர்த்தம்  ஒரு ஆன்டிபயாட்டிக்.
 ''அகால ம்ருத்யு   ஹரணம்  சர்வ ,வியாதி நிவாரணம், ஸமஸ்த பாப  க்ஷயகரம்  ஸ்ரீ  விஷ்ணு/வைத்யநாத  பாதோதகம் சுபம்....''   அகால மரணமோ, சகல நோய்நொடிகளும் வராமலோ, வந்தால் உடனே குணமாகவோ, எல்லா பாபங்களும் அழியவோ, என்று இந்த மூன்று  காரணங்களுக்காக மூன்று முறை  தீர்த்தம் அர்ச்சகர்/ பட்டாச்சாரியார் அளிக்கிறார். அது  சிவனோ/விஷ்ணுவோ  பாதத்தில் அபிஷேகம் செய்யப்பட்ட நீர் சுபத்தை அளிக்கவல்லது என்று மந்திரத்தின் அர்த்தம். 

அதனால் தான்  மூன்று தடவை கொடுக்கும் அந்த அபிஷேக தீர்த்தத்தை,  ஒன்று தலையில் தெளித்துக் கொள்ள, ஒன்று  கண்ணில்  ஒற்றிக்கொள்ள, உடலில் தெளித்துக்கொள்ள, மூன்றாவது  உள்ளே கொஞ்சம் விழுங்க. உள்ளும் புறமும் சுத்தமாகிறது. புண்ணியம்  உள்ளே சேரட்டும் என்பதற்காக. 
மந்திர ஒளஷதமாகிறது  இந்த அபிஷேக நீர். வாய் நாற்றம், பல்,   இரத்தத்தை  சுத்தப்  படுத்தும் ஒரு அபரிதமான கலவை இந்த நீர்.   

நம் முன்னோர்கள்  தினமும்  காலை மாலை  தவறாமல்  கோயிலுக்குச்  சென்றார்கள், நோயற்று, நீண்ட காலம் வாழ்ந்தார்கள். 

கோயிலுக்குள்  சட்டை  அணியாமல் இருப்பதற்கு ஒரு காரணம் உண்டு.   மேலே சொன்ன சக்தி, எனர்ஜி,  மார்பு கூட்டின் வழியே புகுந்து  தேகத்தில் செல்ல வசதியாக இருக்கும். 

பெண்களுக்கு ஆண்களை    விட இதய நோய் வருவது  குறைவாக   இருக்கும்  ஒரு காரணம்   தாலியில் இருக்கும்  தங்கம்.    செம்பு கலந்த தங்கம்  நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை உள்வாங்கி, கொழுப்பை  கரைக்கும் சக்தி கொண்டதாம். 

பல மைல்கள்  பிரயாணம் செய்து, பலமணிகள்  நின்று  மூலவரின் சந்நிதி அருகே  ஒரு சில நிமிஷங்கள் நின்றாலும்  அந்த  குறைந்த நேரத்தில் உடம்பில் ஏற்படும் ஒரு மென்மையான சிலிர்ப்பு, நிம்மதி,   திருப்தி, சந்தோஷம் ஏற்பட காரணம், கோயிலின் மூலஸ்தானத்தில் இருந்து வெளிவரும் ஆகர்ஷண சக்தி. பாசிட்டிவ்  எனர்ஜி.

ஏன்  கோயிலில் கொடிமரம்? எதற்கு அங்கே நமஸ்கரிக்கிறோம்?  கொடிமரம் மூலஸ்தானத்திற்கு நேர் எதிரே இருக்கும். இரண்டிற்கும் ஒரு நேரடி WIRELESS   கம்பியில்லா தொடர்பு  உண்டு. கோயில்  கோபுரத்தின் மேல் இருக்கும் கலசம்  இடிதாங்கிகளாக  மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும்  மின் காந்த   அலைகள்  அந்த  உலோக கலசங்களை  வானில் இருந்து  தாக்கும் இடியை  எதிர்கொண்டு  மின் கடத்தியாக  செயல்பட்டு  இரிடியமாக  இடியின்  மின் சக்தியை திறன் இழக்க செய்கிறது. .

கோவிலுக்கு செல்வதால்  உடல் மட்டுமல்ல மனதும் மூளையும்  நல்ல எண்ணங்கள் கொண்டதாக  
சுத்தமாகும்.  




மேலே சொன்னதெல்லாம் அறிவியல் என்று எடுத்துக்கொண்டாலும்  அதற்கும் மேலே   மனதில்   பக்தி என்ற ஒரு விளக்கவொண்ணாத ஒரு அரிய  சக்தி சேருகிறது.  இறைவன் பாதுகாப்பான் என்ற நம்பிக்கை உற்சாகத்தை, தன்னம்பிக்கையை வளர்க்கிறது. 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...