Wednesday, July 29, 2020

SKIT


                            நான்  யாரு  சொல்லுங்கோ?   J K SIVAN 

  விடாமல்  என் ஆபிஸ் போன் அலறியது. காலை   10மணி ஆகப்போகிறது.  இன்னிக்கு நிறைய வேலை இருக்கு.
'' ஹலோ  யாரு?''

''தெரியலையா? ....    (யாருன்னு கேட்டாலே  தெரியலைன்னு தானே அர்த்தம்  எதுக்கு இப்படி ஒரு கேள்வி?)

'' கோபாலரத்னம் ஸாரா ....(உத்தேசமா ஏதோ ஒரு  பேர்  சொன்னாதானே  யாருன்னு சொல்வார்..அதுக்காக...)

''இல்லே... சரியா திங்க்  பண்ணுங்கோ....( இப்படி யாரு ஒரு கழுத்தறுப்பு....)

'' மைலாப்பூரிலிருந்தா?   ( ஒரு ஹேஷ்யம்.  ப்ரஹதீஸ்வரன் குரல் மாதிரி இருக்கே.... அவரோடு நிறைய  பேசணுமே .)

''சரியா  கண்டுபிடிச்சிட்டேளே ... மைலாப்பூருக்கு அடுத்த  ராயப்பேட்டாவிலிருந்து பேசறேன்..... (அப்போ கூட பேர் சொல்லாத மனுஷன்... யாருன்னே தெரியலியே..)

'ரொம்ப கேட்ட குரலா இருக்கே''

''உங்க ப்ரதரோட ஒர்க் பண்ணின  சுப்பராமன் ..''   (சத்தியமா  இந்த  ஆள்  யாருன்னே  தெரியல)

''ஓ ஓ.....     சௌக்கியமா?   (  இது ரொம்ப  சாதாரணமாக  தப்பிக்கும்  பதில். எனக்கு  நாலு  பிரதர்ஸ். எந்த பிரதரோட ஒர்க் பண்ணவர் ? )

''உலகமே  கொரானா லே  தவிக்கிறது  நமக்கு என்ன  சௌக்கியம்...? (  மறுபடியும்  குழப்பம்)

''ஆமாம்  சார்   சொல்லுங்கோ....  (சீக்கிரம் விஷயம் சொல்லமாட்டாரா?)

''உங்க  ஊர்  பிள்ளையார்  கோவில்  புனருத்தாரணத்துக்கு  2 ஜோடி வேஷ்டி வாங்கி கொடுத்தேனே  இப்ப   ஞாபகமிருக்கா?    (எந்த கல்யாணத்துக்கு,  எந்த  விழாவுக்கு  என்ன கொடுத்தோம் என்றா ஞாபகம் இருக்கும். நாம் தான்  கர்ண பரம்பரை ஆச்சே. வலது கை  கொடுத்தது இடது கைக்கே தெரியாது)  யார் இவர்?  காலம்பற இவர் கிட்டே  மாட்டிக்கொண்டேன்...)

''அப்படியா... வயசாயிடுத்து  சரியா எதுவும்    ஞாபகம் இருக்க மாட்டேங்கிறது..''   (சமாளித்தேன்).

''அப்படி சொல்லாதேங்கோ.. வயசு  மனசுலே கிடையாது. நாமா  நினைச்சுக்கிறது.... (என்ன அர்த்தம் இதுக்கு ?)

''நான் எதுக்கு  போன் பண்ணினேன்னு கேட்டா ....     இருமல்  விடாமல் ஒலித்தது..

''ரொம்ப இருமறது . கொஞ்சம்  ரெஸ்ட் எடுத்துண்டு அப்புறமா பேசுங்களேன்......  (தப்பிக்க முயற்சித்தேன். தோற்றேன்)
'அது கழுதை  வரும்  போகும்..  லட்சியமே பண்ணக்கூடாது. இந்த உடம்பு இருக்கே........ (வேதாந்தியாக மாறிவிட்டார் தவிர  இன்னும் இவர்   யார் என்றே  புரியவில்லை.)
மறுபடியும் இருமல்.   ...... நான் என்ன சொன்னேன்?''

'உங்க  உடம்பை பத்தி சொல்லிண்டிருந்தீர்கள்.''

''ஆமாம்    காமாட்சி கிட்டே கூட  அடிக்கடி சொல்வேன்.....  ( இவரே யார் என்று இன்னும் தெரியவில்லை. இது யார் நடுவில் காமாட்சி?)

''ஓ.  மாமி கிட்டேயா....  (பொத்தாம் பொதுவா  நடுவிலே  இப்படி  ஒரு பதில் விட்டேன்....  மாட்டிக்கொண்டேன்)

''மாமி இல்லே சார்... சிரிப்பு.  என்னை ஏதாவது  இக்கட்டிலே  மாட்டிவிட பாக்கறேளா....( கெக்கெக்கே    சிரிப்பு . வேறு.)
ஓ  மாமி இல்லியா?  ( நான் கேட்டது காமாட்சி மாமி இல்லையா என்று தானே. அதற்கு என்ன பதில் பாருங்கள்)

''மாமி இல்லை . மாமி   அடுத்த தெருவிலே  ரேஷன் கடைக்கு போயிருக்கா?  (ரெண்டாயிரம் கொடுக்கற கூட்டத்தில் நிக்கறா)

''அடேடே    ஜாக்கிரதை.ஸார்   .. இப்போ எல்லாம் கூட்டத்திலே  சேரக்கூடாது....   ( ஜெனரல் அட்வைஸ் கொடுத்தேன். பிடித்துக் கொண்டார் )

''யார்  சொன்னா கேட்கறா?   நானும் இதே தான் சொன்னேன்.  போகாதேன்னு....  ..போய்யா  நீரும் சம்பாதிக்க மாட்டீர். வரத்தையும்  வேணான்னு தடுப்பீர்..  என்கிறா. சரி   மூணு கஜம் தள்ளி நின்னு வாய்ண்டு வான்னு சொன்னேன்... இப்போ  நான் எதுக்கு போன் பன்றேன்னு சொல்லலியே?''

''நீங்க  சொன்னா தானே  தெரியும். சொல்லுங்கோ...
''நான் என்ன சொல்றது.  நீங்க சொன்னது  ஞாபகம் இல்லியா?
''நான் என்ன சொன்னேன் எப்போ சொன்னேன், எதுக்கு சொன்னேன்னு  மறக்கிறது  சார். 
''குளத்தங்கரை சீனு கிட்டே நான்  வீடு கேட்டேனே ஞாபகம் இருக்கா?    (ஐயோ  யார்  இது குளத்தங்கரை சீனு?.  எனக்கு எந்த குளமும் தெரியாதே.  நீச்சல் தெரியாது என்பதால் தண்ணீரில் கால் வைக்கும் வழக்கமே இல்லையே.  பேசாமலே  இருந்தேன்  )
''.........''
ஹலோ ..  என்ன  பதிலே  பேசலே.  அதான்  சீனு.  அவன் நேத்திக்கு பார்த்துட்டு  நீங்க  இன்னும்  கொடுக்க வேண்டியதை கொடுக்கலேன்னு சொன்னான். 

''யார் சீனுன்னு தெரியலே சார். நான் என்ன கொடுக்கணும் அவருக்கு. எனக்கு தெரிஞ்சு நான் எதுவும்  தரேன்னு யாரு கிட்டேயும் சொன்னதில்லையே சார். யாருக்கும் எதுவும் பாக்கி இல்லேயே...

பார்த்தேளா  பார்த்தேளா.. இதான் அவனும் சொன்னான்.   அவர் அப்படி தான் ஜோக்கா  பேசுவார் எப்போவும் னு சொன்னான்''

''சார். சத்தியமா சொல்றேன். எனக்கு எந்த குளத்தங்கரை சீனுவையும் தெரியாது. சீனுவாசன்னு ஒரு ரிட்டயர்டு ஹெட் கிளார்க் ரயில்வே லே  ஒர்க் பண்ணினவர் அடுத்த வீட்டிலே இருந்தபோது தெரியும். அவருக்கும் எனக்கு கொடுக்கல் வாங்கல் எதுவும் இல்லையே சார். ''

உண்மையா சொல்லுங்கோ சீனுவை தெரியவே தெரியாது?

''உண்மையா இப்போ சொல்றேன் சார்.    கேளுங்கோ.   நீங்க சொல்ற சீனுவை தெரியறது இருக்கட்டும்  . நீங்க யாருன்னே முதல்லே  எனக்கு  தெரியலே...''

''ஆஹா  வழிக்கு வந்துட்டேளா.. இதை தான் எதிர்பார்த்தேன்.  உங்களுக்கு ஐநூறு ரூபா போனவாரம் கொடுத்த    கிருஷ்ணமாச்சாரி. .மறந்துட்டேளா அதுக்குள்ளே....

''சார். நீங்க  தப்பா என்கிட்டே பேசறேள். உங்களை எனக்கு தெரியலே. நான் யார் கிட்டேயும் கடன் வாங்கற வழக்கம் இல்லை.. சாரி...   வச்சுடறேன்....

ஆமாம்  ...சாரி தாண்டா.  கோபு , நான்  கிருஷ்ணமாச்சாரி தான். சாரின்னு  தானே என்னை கூப்பிடுவே. 

''சார்.  நான் போனை வைக்கிறேன். நீங்க யாருன்னே தெரியலே. நான்  அனந்தராமன், அட்வோகேட்  .. கோபாலபுரம்.  யாரோ க்ளையண்ட்  பேசறா  அடையாளம் தெரியலேன்னு  இத்தனை நேரம் சமாளிச்சேன் உங்களை. உங்களுக்கு யாரோட பேசணும்.''

''அடேடே   நீ  முத்துகிருஷ்ணன் இல்லையா...  நங்கநல்லூர்....

''இல்லே ஸார்  தயவு செய்து  சரியான நம்பரை தேடி போன் பண்ணுங்கோ.  என்னை பேசவே நடுவிலே  பேசவே  விடலே... நான்  வக்கீல்  இப்படி கேள்வி கேட்டதே இல்லை..''...

''அடாடா  அந்த கடன்காரன்  சீனு   ராங் நம்பர் கொடுத்துட்டானே.   இதோ  குளத்தங்கரை சீனுவை மறுபடியும் பிடிச்சு  சரியான  நம்பர் வாங்கறேன்''......
டெலிபோன் ஓய்ந்தது...


இன்டர்நேஷனல் நண்பர்கள் தினம் இன்று.   இப்படி நண்பர்கள் நமக்கு நிறைய இருக்கிறார்களே. எங்கிருந்தாலும் வாழ்க  வளமுடன்....

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...