Friday, July 10, 2020

CHAYA SOMALINGESWARAR



நிழல் சிவலிங்க ஸ்தாணு   J K SIVAN

நான்   சிறுவயதில் சூளைமேட்டிலிருந்து  கோடம்பாக்கம் ரயில் தண்டவாளம் கடந்து வடக்கு தியாகராயநகர் சென்று பனகல் பார்க்கில் விளையாட செல்வேன்.  அங்கு சாயந்திரத்தில்  வெள்ளை சீருடை அணிந்து மேலே சிகப்பு நீலம்  பச்சை என்று  கலர் கலராக  பட்டையாக  இடுப்பில் பெல்ட் மாதிரி கட்டிக்கொண்டு தலைப்பாகை அல்லது தொப்பி அணிந்து நிறைய  வாத்தியங்களோடு  15 -20  பேர்  ரவுண்டாக நின்றுகொண்டு ஒரு மணி நேரம் ரெண்டு மணி நேரம்  வாசிப்பார்கள்.  அவர்களுக்கு  கார்பொரேஷன் பேண்ட் BAND   என்று பெயர்.   பெரிய   BAND   ஒன்றை சுமந்து  துணி பந்து மாதிரி சுற்றிய முனையோடு ஒருவர் அதை   தொம்  தொம்  என்று அடிக்கும்போது  நாமும் அடிக்க மாட்டோமா என்று ஏக்கமாக இருக்கும்.   இரு பனகல் பார்க்கில்  ரேடியோ சாயந்திர வேளைகளில்  பாடும்.  பெரிய பார்க். எங்கு வேண்டுமானாலும் கேட்கும்.    நிறைய  முதியோர்கள் இவற்றை கேட்க வருவார்கள்.  வாய்  வேர்க்கடலை கொரித்துக் கொண்டிருக்கும்.  சுவாரஸ்யமாக ஊர் வம்பு பேசுவார்கள். 

எனக்கு   கார்பொரேஷன்  BAND  ஆட்கள் வாசிக்கும் பாட்டு புரியாவிட்டாலும் அவர்கள் யூனிபாரம்  தலை தொப்பி,  வாத்தியங்கள் அதிலிருந்து வரும் சப்தம் எல்லாம் ஆர்வமாக  கேட்க பிடிக்கும்.    சுற்றி நின்று    கொண்டோ  அல்லது அங்கே உள்ள  சிமெண்ட்  பெஞ்சுகளில் பல முதியோர்களை, பெண்களை போல் உட்கார்ந்து கொண்டோ அல்ல,  மரங்களை செடிகளை சுற்றி பிடிக்கிற விளையாட்டு ஆடிக்கொண்டு ஓடிக்கொண்டு.  பார்க் நடுவே  பனகல் மஹாராஜா சிலை நின்று கொண்டு இந்த வாத்தியகோஷத்தை அசையாமல் கேட்கும். 

பனகல் ராஜா  வெள்ளையன் ஆட்சியின்  போது  மெட்ராஸ் முதல் அமைச்சராக இருந்தவர்.  வெள்ளைக்காரன் இந்த  ராஜாவை திவான் பகதூர் ஆக்கி  1923-26  கால கட்டத்தில்  மெட்ராஸ் ப்ரெசிடென்சி  முதலமைச்சர். 


ஏன் பனகல் பார்க், மஹாராஜா எல்லாம் இப்போது  நினைவுக்கு வந்தது என்றால்  பனகல் என்ற ஊரை பற்றி  இன்றுபடித்தேன். ஆந்த்ரப் ரதேசத்தில்   நால்கொண்டா ஜில்லாவில்  பனகல் கிராமம் இருக்கிறது.  அங்கே  11-12ம் நூற்றாண்டு  இக்ஷ்வாகு வம்ச ராஜா கட்டிய  சிவாலயம் ஒன்று அற்புதமானது மட்டுமல்ல அதிசயமானதும் கூட இன்னும் இருக்கிறது.   சிவன்  சாயா சோமேஸ்வரஸ்வாமி.  

சாயா என்றால் நிழல் என்று தெரியுமல்லவா?  அந்த கோவிலில்  தினமும் ஒரு  பெரிய நிழல் ஸ்தம்பம் காணப்படுகிறது. எந்த தூணின்  நிழல் சுவற்றில்  அப்படி விழுகிறது என்று எவராலும் கண்டுபிடிக்கப்படவில்லை.  அடிமுடி காணாத ஸ்தாணு.சோழர்கள் கட்டியது என்கிறார்கள். த்ரிகூடஆலயம் என்று பெயர்.  அற்புதமான  கற்சிலைகள், வேலைப்பாடுகள் நிறைந்த கோவில். ஆ வென்று தாராளமாக  பார்த்து வாயைப் பிளக்கலாம்.  கிழக்கு பார்த்த ஒரு கர்ப்பகிரகத்தில் தான் இந்த  நிழல் தூண் காட் சி  தருகிறது. 

ஹைதராபதிலிருந்து 104 கி.மீ.  நால் கொண்டா  பஸ் நிலையத்திலிருந்து 4 கி.மீ.  பனகல்  பஸ் நிலையத்திலிருந்து 1.4 கி.மீ.  கர்பகிரஹ ம் எதிரே இருக்கும் நான்கு தூண்களின் ஒட்டு மொத்த நிழல் என்று சொல்கிறார்கள்.   நாள் முழுதும் இந்த நிழல் ஸ்தாணு காட்சி தருகிறது.  
நமது ஊரைப்போல்  இல்லை  இந்த கோவில்
 பற்றிய  அதிக விவரங்கள் அங்கெல்லாம் இல்லை.  தெலுங்கில் இருந்து நமக்கு தெரியவில்லையோ என்னவோ?

 கோவில் தூண்களில்  ராமாயண பாரத  சம்பவங்கள்  செதுக்கி இருக்கிறான் சிற்பி.   நிறைய  யாத்ரீகர்கள் தெலுங்கு ஹிந்தி பேசிக்கொண்டு வருகிறார்கள்.    தமிழ் என்றோ எப்போதோ காதில் விழும்போல் இருக்கிறது.  இந்த கோவிலை நேரில் சென்று பார்க்காத வர்களுக்கு  இத்துடன் ஒரு  தெலுங்கு  வீடியோ இணைத்திருக்கிறேன்.  நிழல் சிவலிங்கத்தை தரிசியுங்கள். யூட்யூப் கிளிப்பிங்
  https://youtu.be/9JLtDDIMR2k




No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...