Thursday, July 9, 2020

GITANJALI

 கீதாஞ்சலி 10.        J K   SIVAN   
தாகூர் 

         
             10    ஏழை  பங்காளா  தீன பந்தோ.


10.  Here is thy footstool and there rest thy feet
 where live the poorest, and lowliest, and lost.
When I try to bow to thee,
my obeisance cannot reach down to the depth
where thy feet rest among the poorest, and lowliest, and lost.
Pride can never approach to where thou walkest
in the clothes of the humble among the poorest, and lowliest, and lost.
My heart can never find its way to where thou keepest company
with the companionless among the poorest, the lowliest, and the lost

கிருஷ்ணா, காருண்ய மூர்த்தி, தயாசாகரா , இதோ பார்த்தாயா, உயரமாக ஒரு  பலகை,  உன் கால்களை அதன் மேல் வைத்து கொஞ்சம் இளைப்பாறு.  எவ்வளவு நடந்திருக்கிறாய் எம்மை காக்க. எம்மை தூக்கி. 

உன் திருவடிகளை  எங்கே காண்கிறேன்.... ஆஹா   எண்ணற்ற  தீனர்கள், ஏழைகள், திக்கற்றோர், பாமரர், கதியிலார், அவர்களை அரவணைத்து அல்லவோ காணப்படுகிறது.

உன்   திருவடிகள் அருளும்  அந்த  எண்ணற்ற பரம ஏழைகள், அனாதைகள், தீனர்கள்   கூட்டத்தில்  நானும்  இடம்பெற  என்னால்   எவ்வளவோ முயன்றும் அடைய முடியவில்லையே கிருஷ்ணா.  எவ்வளவு  தாழ்வாக  குனிந்தும்  எட்டாத தூரத்தில் அல்லவோ  இருக்கின்றன

இது என்ன ஆச்சர்யம்,  உன் திருவடிகளை வணங்க  நான்  குனிகிறேன். குனியக்குனிய, உன் கால்கள் எல்லையில்லாமல்  கீழே கீழே  போய்க் கொண்டே  இருக்கிறதே.   எண்ணற்ற  எளியோர்கள், பக்தர்கள், பக்தைகள்,  நிராதரவான அனாதைகள், தீனர்கள்  தென்படுகிற  இடமாக  அல்லவோ அது நீண்டு  பரந்து செல்கிறது.

நீ  தீன பந்து.  தயாபரன்.   தீனதயாளன்,  நீ  நகரும், நடக்கும், இருக்கும்  இடத்தில் கர்வத்துக்கும் அகம்பாவத்துக்கும்  அனுமதியே கிடையாது.

என்னால் உன்னை அடையாளமே காண முடியவில்லை, நீ ஏழைகளோடு ஏழையாய், எளியவனாய், அவர்களில் ஒருவனாக   மிக எளிய ஆடை உடுத்து  அல்லவோ காண்கிறாய். அன்பை செலுத்துகிறாய்.    ஏழை பங்காளா,      உன்னை  நெருங்க வேண்டுமானால் ஆதரவற்றோருடன் பரம தரித்ரர்களுடன்,  தாழ்ந்தவர்களுடன்,   எல்லாம் இழந்தவர்களுடன்,   நீயும்  அவர்களில் ஒருவனாக இருப்பது போல்  என் இதயமும் என்னைஅப்படி இருக்க  மாற்றினால் அன்றோ  உன்னுடைய கருணாசாகர பேரன்பு மிக்க  இதயத்தை  கொஞ்சமாவது உணரவோ நெருங்கவோ முடியும்.!  என் செய்வேன்.

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...