Saturday, July 4, 2020

SAMUDHRA MANDHAN




சமுத்திர மந்தனம் J K SIVAN

தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்று   தாய்லந்து.

தாய்லாந்தில்   இருக்கும்  ஹந்து மதத்தினரை   மொத்த ஜனத்தொகையில்  0.03%  எனலாம்.  நூற்றுக்கு ஒருவர் கூட இல்லை . முழுதும்  பௌத்தமதத்தை  சார்ந்த மக்கள் வாழும் தேசம்.  இருந்த போதிலும் ஹிந்து மதம் தாய்லாந்து மக்கள் வாழ்வில் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது.  அங்கே  ராமாயணம் உண்டு.   அவர்கள் விரும்பும்  ராமாகியன்  நமது ராமாயணத்தின்  சிதைந்த உருவம்.  தாய்லாந்தின் மன்னர்கள்  பின்பற்றும்  ராஜ்ய தேசிய சின்னம்  கருடன். விஷ்ணுவின் வாஹனம்.   14வது நூற்றாண்டு விஷ்ணு  சிலை  அங்கே இருக்கிறது.

தலைநகர் பாங்காக்  அருகே  ஒரு  நகரம் உள்ளதே அதன் பெயர் அயுத்தயா . அயோத்யாவின் மழுங்கிய  பெயர்
.வழிபாட்டின்  போது  விகிரஹங்களுக்கு  சங்கில் அபிஷேகம் செயகிறார்கள்.  ஹிந்து விகிரஹங்களை வழிபடுகிறார்கள்.   இரவன் எனும் ஊரில் உள்ள  கோவிலில் ப்ரம்மா இருக்கிறார்.  இந்திரன், சிவன், பிள்ளையார்  கருடன் உருவங்கள் உண்டு.   சூரின்  என்கிற ஊர்  அருகே  உள்ள 12ம் நூற்றாண்டு கோவில் பிரசத் சிகோரபும்  சுவர்களில்  தாண்டவமாடும் சிவன், பார்வதி, ப்ரம்மா கணேசன் உருவங்கள் இருக்கிறது.

1784ல்  முதலாம் ராமா  என்கிற ராஜா கட்டிய  தேவசதன்  கோவில் இருக்கிறது. அரசு குடும்பம் பிராமணர்களை நியமித்து  பராமரிக்கும் ஆலயம் . பூஜைகள்  அவர்கள் வழிபாட்டு முறையில் இன்னும் நடக்கிறது.

1935 வரை   தாய்லந்தில்  ஒரு பெரிய  ஊஞ்சல் விழா நடந்தது . அதன் பெயர்  வேடிக்கையாக  இருக்கிறது.   த்ரியம்பவை த்ரிபவை   (நமது திருவெம்பாவை  திருப்பாவையின்  கை  கால் ஒடிந்த வடிவம் )   தெ .போ. மீனாட்சிசுந்தரம் எனும் தமிழ் வித்தகர்,    இந்த விழாவை  தாய்லந்து ஹிந்துக்கள்  கொண்டாடும் போது  திருப்பாவை திருவெம்பாவை   பாசுரங்கள்  பாடல்களை  பாடினார்கள்  என்கிறார்.
நம்மூரில் இன்னும் நிறைய பேருக்கு திருப்பாவை திருவெம்பாவை என்றால் என்னவென்றே தெரியாதே.

தாய்லந்து  விவசாய தேசம்.  பிராமணர்களை வைத்து  ஏர் உழும் பண்டிகைகள்  பூஜையோடு துவங்கும் பழக்கம் உண்டு.  அறுவடைக்கு அதே போல் பூஜையோடு விழா. ராஜ பிராமணர்கள் என்று ஒரு வகுப்பு இதற்காகவே  உருவாகி இருக்கிறது.

இப்போதும்  லக்ஷக்கணக்கான ஹிந்துக்கள் வாழும்  தேசமாக தாய்லந்து விளங்குகிறது.  நமது சாஸ்திரங்கள்  சம்பிரதாயங்கள் அவ்வளவும் தெரியாவிட்டாலும் ஏதோ கொஞ்சம் அறிந்து வைத்திருக்கிறார்கள்.

1879ல்  வைத்தி படையாச்சி  என்ற தமிழர்  ஒருவர் பாங்காக்கில்  மாரியம்மன் கோவில் காட்டியிருக்கிறார்.
தாய்லந்து  தலைநகர்  பாங்காக்  விமான நிலையத்தில் ஒரு அற்புத கண் காட்சியே  காத்திருக்கிறது.  பாற்கடலை கடைந்து தேவர்கள் ஒருபுறம், அசுரர்கள் மறுபுறம்,  அம்ருதம் தேடுகிறார்கள்.  மஹா விஷ்ணு பெரிய  கூர்மமாக (ஆமையாக) பாற்கடல் அடியில் படுத்து முதுகில் மந்திர மலையை சுமக்கிறார். அது தான் மத்து  பாற்கடலை கடைவதற்கு.  மத்தை கடைவதற்கு கயிறு வேண்டுமே?   சாதாரண கயிறு எல்லாம் தாங்காது.  வாசுகி எனும்  நீண்ட  சர்ப்பம்  கயிறாக பணி புரிய சம்மதித்தது. அதை மந்திரமலையில் சுற்றி  அதன் தலை பக்கம்  அசுரர்கள் வால் பக்கம் தேவர்கள்  இழுத்து கடைகிறார்கள்.  





இப்படி ஒரு அற்புதமான ஹிந்து சநதனமாத   பாகவத புராண காட்சியை  காட்சியை எவ்வளவு அழகாக நவீன உபகரணங்களை உபயோகித்து  படைத்திருக்கிறார்கள்.  அவர்களுக்கு நமது வந்தனம்.  ஏன் நமது பொது இடங்களில் இது போன்ற காட்சிகளை காணோம்.   0.03% ஹிந்துக்கள் வாழும் இடத்திலேயே இது முடியும் எனும்போது  70%க்கு மேல் உள்ள நமது தேசத்தில்  ஏன் கருடனோ  பாற்கடலோ  தோன்றவில்லை.  காரணம் மனம்...... மனித மனம். அது பொல்லாதது ....செல்லம் கொடுத்து வளர்க்கப்பட்டு  கெட்டுப்போன  குழந்தை களோ நாம்?


  ஒன்றுபடாத னங்களோ?  குட்டி குட்டி ராஜ்யங்களாக இருந்த நமது பாரத தேசத்தை ஒன்றாக இணைத்த  union ஆக பண்ண பாடுபட்ட  சர்தார் படேல் சிலை பொதுமக்கள் ஆதரவில் நன்கொடையில் நிர்மாணிக் கப்பட்டதற்கே  கூச்சல் போடுபவர்கள் நாம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...