Monday, July 6, 2020

gitanjali

கீதாஞ்சலி 8 J K SIVAN
தாகூர்

8 வேஷம் வேண்டாம்.

நண்பர்களே, ஒரு வார்த்தை.
ஆமை முயல் ஓட்டப்போட்டி கதை தெரியுமல்லவா? முயல் வேகமாக ஓடி அங்கங்கே நின்று கர்வத்தால் தோற்றது. ஆமை கருமமே கண்ணாயினார் ரகம் . மெதுவாக விடாமல் நடந்து வெற்றி பெற்றது. நான் ஒரு கிழ ஆமை. வெற்றி பெறுவேனோ மாட்டேனோ தெரியாது. மெதுவாக ஒவ்வொன்றாக எனக்கு கண்ணில் பட்ட, விருப்பமான அனைத்து ஆன்மீக விஷயங்களையும் தொட்டு ஒவ்வொன்றாக எழுதும் தீராத தாகம் என்னை செலுத்துகிறது. கீதாஞ்சலி நூற்றுக்கும் மேலானது. ஒவ்வொன்றாக அனுபவித்து இன்று எட்டாவது கீதாஞ்சலி பாடல் படித்து ரசித்து எழுதுகிறேன். அடிக்கடி சொல்வது போல் இது ஜுனூன் வசனமல்ல. நான் வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்க்கும் ஆள் அல்ல. என் எழுத்தில் எனக்கு தெரியமாலேயே கிருஷ்ணன் உள்ளே தலை நீட்டுவான். தாகூர் கிருஷ்ணனை வாய் திறந்து ஒருமுறை கூட கூப்பிடவில்லை. பேர் மட்டும் கீதாஞ்சலி.
The child who is decked with prince's robes and who has jewelled chains round his neck loses all pleasure in his play; his dress hampers him at every step. In fear that it may be frayed, or stained with dust he keeps himself from the world, and is afraid even to move. Mother, it is no gain, thy bondage of finery, if it keep one shut off from the healthful dust of the earth, if it robs one of the right of entrance to the great fair of common human life. கிருஷ்ணா, நீ கன்றுக்குட்டிகளோடு மண்ணில் புரண்டு விளையாடியவன். உன் மேனி முழுதும் மண். ஆபரணங்கள் எதுவும் இல்லாதவன். அரையில் ஒரு மஞ்சள் ஆடை, தலையில் ஒரு மயிலிறகு.கையில் ஒரு மூங்கில் குழல் மண்ணில் பிறந்தவன் மண்ணோடு பழகி மண்ணிலே தானே மறையவேண்டும்.!! மண்ணின் வாசனையில் திளைத்து விளையாடி மகிழாமல் இந்த நாடக மேடை வேஷ வினோத அலங்காரம்..ஏன்? எல்லோருடனும் சேர்ந்து சுகமாக இயற்கையாக வாழாமல் இது என்ன மனித வாழ்க்கை!. என்ன மனித வாழ்க்கை. மண் வாசனை என்று எழுதுகிறோமே, பேசுகிறோமே , சொல்கிறோமே, படிக்கிறோமே அது என்னவாம்? எனக்கு மட்டும் அல்ல, எல்லோருக்குமே தெரியும், கிருஷ்ணா, நீ வளர்ந்த கோகுலம் பிருந்தாவனத்தில் மண்ணில் படுக்கும் பசுக்கள், கன்றுகள் வாழும் இடம் தான் எங்கும். நடுத்தர கீழ்த்தட்டு மக்கள் அதிகம் வாழும் பகுதி. அநேகமாக சிறுவர்கள் சிறுமிகள் முழு ஆடை இன்றி, சந்தோஷமாக மண்ணில் புரண்டு விளையாடுபவர்கள். கிருஷ்ணா, உன் மேனி முழுதும் மண். ஆபரணங்கள் எதுவும் இல்லாதவன். அரையில் ஒரு ஆடை, தலையில் ஒரு மயிலிறகு.கையில் ஒரு மூங்கில் குழல். உன்னைப்போன்று அந்த குழந்தைகள் விளையாடுகிறார்கள். ஏழை பணக்காரன் வித்யாசம் தெரியாத தெய்வங்கள். ஒரு குழந்தையை பிடித்து குளிப்பாட்டி, எண்ணெய் தடவி தலை சீவி, முடிந்து, கிரீடம் வைத்து, உடல் முழுதும் சந்தனாதி வாசனை திரவியங்களை தடவி, பளபளவென்று புத்தாடை உயர்ந்த பாட்டில் அணிவித்து, காலில் கையில் அணிகலன்கள், காலுறை, மிதியடி எல்லாம் மாட்டி இளவரசனாக நடக்கச் செய்கிறாள் ஒரு தாய்.
''ஜாக்கிரதையாக நட. நகைகள் எதுவும் கீழே விழுந்து விடப்போகிறது'' கண் மண் தெரியாமல் ஓடி ஆடிய குழந்தை இப்போது அப்படி உற்சாகமாக சந்தோஷமாக நகர முடியுமா? கிருஷ்ணா எங்கள் ஊருக்கு வந்து இப்போது பார் தெரியும். எங்கள் ஊரில் தாய்மார்களைப்பார். கொளுத்தும் வெயிலிலும் குழந்தைக்கு மஹாராஜா வேஷம் போட்டு, தலைப்பாகை வைத்து, பட்டு சட்டை, காலில் சாக்ஸ், காலணி, அதற்குள் காலில் நிறைய தண்டை கொலுசு, மோதிரம், கழுத்து வலிக்க தங்க வைர நகைகள், தலையில் தொப்பி, கீழே இறக்கி விட்டால் விலை உயர்ந்த ஆடை அழுக்கு படும், கசங்கிவிடும் என குழந்தையை விளையாட தரையில் விடாமல் எதையும் தானே குடிக்காமல், சாப்பிடாமல் ( மேலே சட்டையில் அழுக்கு படுமே, கரை படுமே) கைக்குள்ளேயே சிறை...குழந்தை அழாமல் என்ன செய்யும்?. கோபத்தில் குழந்தையை புரிந்துகொள்ளாமல் திட்டும் அடிக்கும் தாய்களும் உண்டு. மேலே கதையில் சொன்ன குழந்தை தனது ஆடை, ஆபரணத்தை ரசிப்பானா? நடக்கவே பயப்படுவான். ஆடை அழுக்கு பட்டால்? ஆபரணம் ஏதாவது கழன்று கீழே விழுந்தால் ? அம்மா திட்டுவாள், அடிப்பாள். ''அம்மா, போதும் நீ செய்து விட்ட அலங்காரம்! எனக்கு இதெல்லாம் வேண்டாமே! என் சுதந்திரத்தை இது பறித்து விட்டதே. சந்தோஷத்தை தின்றுவிட்டதே. என் இயற்கையான வாழ்வின் சுகம் கொள்ளை போய்விட்டதே'' என்று குழந்தையின் மனம் கதறி இருக்குமோ? அது தான் அழுகையாக கண்களில் நீராக பேசி இருக்குமோ? தாகூர் தாத்தா அற்புதம் நீங்கள்!

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...