Tuesday, February 26, 2019

SRIMADH BAGAVATHAM



 ஸ்ரீ மத் பாகவதம்.    J K SIVAN 

               
                                                    ஆஹா அந்த  ஏழு நாட்கள்.... 

Bhagavad-gita (18.66),   aham tvam sarva-papebhyo moksayisyami ma sucah: "   
நான் இருக்கும்போது உனக்கேன் கவலை.  நீ தான் என்னை நினைத்து விட்டாயே. பிறகு என்ன? உன் பாபங்களின் வினைகளிலிருந்து உன்னை விடுவித்து மோக்ஷம் அளிக்கிறேன். கவலையை விடு.''  என்று கிருஷ்ணன்  அர்ஜுனனுக்கு மட்டும் இதை உபதேசிக்கவில்லை. அவனோடு நமக்கும் சேர்த்து தான்  இந்த  காரண்டீ.

பஞ்ச பாண்டவர்கள்  அதிர்ஷ்டக்காரர்கள். கிருஷ்ணன் வாயினால் இதை நேரே கேட்டு அவனை கெட்டியாக பிடித்துக்கொண்டு  மோக்ஷம் அடைந்தவர்கள்.  அர்ஜுனன் பேரன் பரீக்ஷித்  மஹாராஜா,  இன்னும் ஏழு நாளில்  தக்ஷன் எனும் கொடிய நாக  விஷத்தால் மரணம் நிச்சயம் என தெரிந்தவன். யோசித்தான். தாத்தாக்களோ அப்பாவோ இல்லை.  சுகரை எப்படியோ வரவழைத்து பாண்டவ  சரிதம்,  பாரதம், பாகவதம் என்று தான் வாழ இன்னும் இருக்கும்  ஏழுநாளும் சப்தாஹம் செய்யவைத்தான். கிருஷ்ணன் சம்பந்தப்பட்ட  அனைத்து நிகழ்வுகளை காதார கேட்டான். கிருஷ்ணனை  மனதால் அனுபவித்து  காதார கேட்டு கெட்டியாக மனதில் பிடித்துக் கொண்டான். மோக்ஷம் அடைந்தான். அவனைப்போலவே  நாமும் மோக்ஷம் அடைய வழிகாட்டிவிட்டான்.

கிருஷ்ணன் எனும்  நாராயணனை  கடைசி காலத்தில் பிடித்துக் கொள்வது தான்   ''அந்தே நாராயண ஸ்ம்ரிதி''   எனும்  நாராயணனை பற்றி ஸ்மரித்தல். கடைசி நேரத்தில் ஒருவருக்கு விஷ்ணு சஹஸ்ரநாமம் படித்தல்.  ஒரு சில குழுவாக  ஒவ்வொரு ஆஸ்பத்திரியாக சென்று  விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்லும் வழக்கம் உண்டு.  கிருஷ்ணன்  பாண்டவர்களை மட்டுமா காப்பாற்றியவன். இதே  பரிக்ஷித் சிசு வாக  உத்தரையின்  கர்ப்பத்தில்  இருந்தபோது அஸ்வத்தாமன் எய்த பிரம்மாஸ்திரம் அவனைக் கொல்லாமல்  தனது சுதர்சன சக்ரத்தால்  அதை தடுத்து உயிர் பிச்சை அளித்தவன் அல்லவா.  பரீக்ஷித் இதை அறிந்து தான்  நன்றியோடு கடைசி  ஏழு நாட்களை கிருஷ்ணனை பற்றி ஸ்மரித்துக்கொண்டு கேட்கிறான்.     கடைசி காலத்தில்  க்ரிஷ்ணனை  நினைப்பவன் அதிர்ஷ்டக்காரன். 

மாமன் கம்சன் கிருஷ்ணனை எதிரியாக கருதி கெடுதல் செய்தவன். இருந்தும் அவனைக் கொன்றபின் அவனுக்கு மோக்ஷம் அளித்தான் கிருஷ்ணன். ஏன்?  பக்தன் கிருஷ்ணனை எப்போதுமா  நினைக்கிறான்?  எதிரி கம்சன் இரவு பகல் தூங்காமல் கிருஷ்ணன் எங்கே இருக்கிறான், எப்படி வரவழைப்பது எப்படி கிருஷ்ணனை வெல்வது, கொல்வது  யாரால்,  எதன் மூலம்? என்று கிருஷ்ணனை பற்றியே தான் சாகும் வரை நினைத்தவன்.  கிருஷ்ணனை நினைப்பவன் ஆஸ்திகனாக இருக்க அவசியமே இல்லை. கிருஷ்ணன் கிடையாது, அவன்  கெட்டவன், கல், துரோகி என்று நாள் தோறும் சொல்பவனுக்கும் கூட  மோக்ஷம் உண்டு.
rohinyas tanayah prokto ramah sankarsanas tvaya devakya garbha-sambandhah kuto dehantaram vina 
நாராயணன்  அவதாரமாகிய கிருஷ்ணன்  அம்சத்தில் நாலு பேர் உண்டு. சங்கர்ஷணன் எனும்  பலராமன், அநிருத்தன் எனும் கிருஷ்ணன் பேரன், ப்ரத்யும்னன் எனும் கிருஷ்ணன்-ருக்மிணி மகன், கிருஷ்ணன்  ஆகியோர் தான் இது.  தேவகி கர்ப்பத்திலிருந்து  ரோஹிணி  கர்ப்பத்துக்கு மாற்றப்பட்டு நந்தகோபன் அரண்மனையில் வளர்ந்தவன் பலராமன்.  

 kasman mukundo bhagavan pitur gehad vrajam gatah kva vasam jnatibhih sardham krtavan satvatam patih 
யமுனையின் ஒரு கரையில் மதுரா. அங்கே சிறையில் வசுதேவர்  தேவகி மைந்தனாக பிறந்த கிருஷ்ணன் யமுனைஆற்றின் மறுகரையில் கோகுலத்திற்கு, பிறந்தவுடனேயே செல்கிறான். அங்கே  நந்தகோபர்-யசோதை மகனாக வளர்கிறான்.  மதுரா செல்கிறான். கம்சனைக் கொன்றபிறகு தாய் தந்தையரை விடுவித்து பிருந்தாவனம் கொண்டு செல்கிறான்.பரீக்ஷித் நிறைய கேள்விகளை சுகரிடம் கேட்கிறான். ஏன் கிருஷ்ணன் மாமனைக் கொன்றான்? ஏன் கம்சன் சொந்த சகோதரி தேவகியையும்,  அவள் புருஷன் வசுதேவரையும் சிறை வைத்தான். ஏன் அவர்கள் குழந்தைகளைக்   கொன்றான்? '' சுகதேவரைத் துளைக்கிறான் பரீக்ஷித். 

 deham manusam asritya kati varsani vrsnibhih yadu-puryam sahavatsit patnyah katy abhavan prabhoh 
கிருஷ்ணன் நம்மைப்போல  நம் கண்ணுக்கு  உருவில் தோன்றினாலும் அவன் உருவமற்றவன். சச்சிதானந்த விக்ரஹம்   --  ஆன்ம ஸ்வரூபம், மனிதன் போல் உரு  தேவைப்பட்ட போது  அமைத்துக் கொண்டவன். 

''சுகப்பிரம்ம  ரிஷியே,எனக்கு  க்ரிஷ்ணனைப் பற்றிய  சகல  விஷயங்களையும் அறிந்த தாங்கள் தான் ஒன்றுவிடாமல் அனைத்தையும் சொல்லவேண்டும்'' என்கிறான்  பரீக்ஷித்.

 naisatiduhsaha ksun mam tyaktodam api badhate pibantam tvan-mukhambhoja- cyutam hari-kathamrtam 
 ''ஏழு நாளே  வாழப்போகும் நான்  நீர் அருந்துவதை தவிர்த்து விட்டேன். ஆனால் என்ன, சுகப்பிரம்ம ரிஷியே உங்கள் மூலம் அம்ருதமான கிருஷ்ண  சரிதம்  காதால் பருகுகிறேனே. அது  போதுமே.  பசியும் தாகமும் என்னை என்ன பண்ணும்.   பரீக்ஷித்  நீரும் பருகுவதில்லை,  ஆகாரம் உண்ணுவதையும் கடைசி ஏழுநாட்கள்  நிறுத்திவிட்டான்.    பரிக்ஷித்தின்  நிர்ஜல உபவாசம் அவன் உடலைத்  தளரச்செய்யவில்லை. 

''ஒரு  தடவை காட்டில் வேட்டையாட சென்ற எனக்கு  பசியும் தாகமும் வாட்ட  அருகே  இருந்த  ஒரு முனிவர் ஆஸ்ரமம் சென்றேன்.  சமீகர்  என்ற ரிஷி அங்கே தவம் செயது கொண்டிருந்தார்.   குடிக்க ஜலம் கேட்டேன். கண் திறந்து கூட பார்க்கவில்லை. குடிக்க  நீர் கொடுக்கவோ என்னை மதித்து பேசவோ இல்லை.   நான் செய்த தவறு  அருகே இருந்த ஒரு செத்த பாம்பை என் வில் நுனியால் தூக்கி அவர் கழுத்தில் மாலையாக போட்டு விட்டு திரும்பினேன்.  

அவர் மகன் ஸ்ரிங்கி  பிறகு ஆஸ்ரமம் வந்தவன்  இதைக் கண்டு தன் தந்தையை இவ்வாறு அவமானப்படுத்தியவன் நான் என அறிந்து ஏழு நாளில்  நான் கொடிய விஷ நாகம்  தக்ஷனால் மரணம் அடைவேன்'' என்று சபித்தான்.   நான் பசியோ தாகமோ இப்போது  இல்லாதவன். உலகவாழ்க்கையில்  தான் பசியும் தாகமும் துன்பமும் இன்பமும். ஆன்மீக வாழ்வில்  இவை எதுவுமே கிடையாது என புரிந்துகொண்டேன்.இப்போது எனக்கு ஆன்மீக தாகம் தான்.   உலகில் ஒவ்வொரு ஜீவனும்  ப்ரம்மம். பரப்ரம்மத்தின் ஒரு அம்சம்.   

மாறாத  அழியாத உண்மை சத்யம்  ஸ்ரீ கிருஷ்ணன் உணர்வு.   ஸ்ரீ கிருஷ்ண கதாம்ருதம்  ஸ்ரீ சுகப்பிரம்ம மகரிஷி வாயினால் கேட்க கொடுத்து வைத்தவன்  பரீக்ஷித். 

 matir na krsne paratah svato va mitho 'bhipadyeta grha-vratanam adanta-gobhir visatam tamisram punah punas carvita-carvananam 
புலனடக்கம் இன்றி, பொருள்  தேடும்  உலக  வாழ்க்கையில் சிக்கி  நரகத்தில் உழல்பவர்கள்  கிருஷ்ணனை நினைப்பதில்லை.   கனி  இருப்ப காய் கவர்ந்தவர்கள். தானாகவோ,  பிறர் மூலமாகவோ  அறிவு சுடர் விடுமானால், உண்மை புரியும். அதற்கு தக்க காலம்  வரும்.(கீதை  7.5.30)  அதுவரை  அரைத்த மாவையே அரைக்கிறோம்.  பிறப்பு இறப்பு தொடர்கிறது.   நமக்கெல்லாம்  ஸ்ரீ சுகப்பிரம்ம மகரிஷி வாயினால்  ஸ்ரீ கிருஷ்ண கதாம்ருதம் கேட்க வாய்ப்புண்டா?. கிருஷ்ணனை நாமே  அறிவோம்.  படிப்போம்,கேட்போம். சொல்வோம். ஸ்ரீ கிருஷ்ணன் அருளால் அதற்கு எல்லா வசதிகளும் தான் இப்போது இருக்கிறதே.
 suta uvaca evam nisamya bhrgu-nandana sadhu-vadam vaiyasakih sa bhagavan atha visnu-ratam pratyarcya krsna-caritam kali-kalmasa-ghnam vyahartum arabhata bhagavata-pradhanah 

சுதர்  என்னும்  மஹரிஷி,  பரிக்ஷித்துக்கு சுகப்பிரம்ம ரிஷி சொன்ன க்ரிஷ்ணகர்ணாம்ருதத்தை முழுதும் கேட்டு  பரீக்ஷித்தை  வாழ்த்துகிறார். கலியுகத்தில் பாவம் தீர  அதை மற்றவர் அறிய உபதேசிக்கிறார்.  வைசம்பாயனர்  பிறகு பரீக்ஷித் மகன் ஜனமேஜயனுக்கு சொல்லி அதையே வியாச பாரதமாக நாம்  அறிகிறோம்.
 krsna-caritam kali-kalmasa-ghnam    என்றால்  கலியுக தீமைகளுக்கு துன்பங்களுக்கு ஒரே மருந்து ஸ்ரீ கிருஷ்ண சரிதமும் மந்திரமும் தான்.   
anarthopasamam saksad bhakti-yogam adhoksaje lokasyajanato vidvams cakre satvata-samhitam " என்றால்  கிருஷ்ண பக்தி உலக வாதனைகளை குறைக்கும்.  சத்தியத்தை உணரவைக்கும். கலியுகத்திற்கு அவசியம் இது தேவை நீங்கள் சொல்லுங்கள் என்று  நாரத ரிஷி  சொல்லி தானே  வேத வியாசர் மஹா பாரதம், ஸ்ரீமத் பாகவதம் சொல்லி இருக்கிறார்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...