Thursday, February 7, 2019

SIVALINGAM


ஆதி சிவன் - J.K. SIVAN

பரம சிவனை ஒரு லிங்கமாக வழிபடுவது தொன்று தொட்டு ​நமது முன்னோர் காலத்திலிருந்து தொடரும் வழக்கம். இந்தி​யா , ஸ்ரீலங்கா மட்டுமல்ல, இத்தாலியில் ரோமர்களும் ‘பிரயபாஸ் ('Prayapas’) என்ற பெயரில் சிவலிங்கத்தை வழிபட்டவர்கள். ஐரோப்பாவில் சிவலிங்கம் உண்டு. மெசொபொடோமியோவில், பாபிலோன் நகரத்தில் புதை பொருள் ஆராய்ச்சியாளர்கள் சிவலிங்கத்தை பார்த்திருக்கிறார்கள். சிந்து சமவெளி நாகரிகத்தில் ஆரியர்கள் வருகைக்கு முன்பே சிவலிங்கம் வழிபாட்டு தெய்வமாக இருந்ததை மொஹென்ஜாதாரோ, ஹாரப்பா புதைபொருள் ஆராய்ச்சியில் கிடைத்த சிவலிங்க சிலைகள் சொல்கின்றன.​ ​மிக சிறந்த நாகரிகம் ஒன்று அப்போ​தே இருந்திருக்கிறது.
நமது சனாதன முறையில், கடவுளை அறிவதற்கு எத்தனையோ வழிகள் உண்டே. இப்படித்தான் என்று ஒரு எந்த கெடுபிடியும் கிடையாது. அவரவர் மன நிலைக்கேற்ப இறைவனோடு உறவு கொள்கிறோம். நமது வழியைப் போல் எந்த மதத்திலும் உருவமாகவும், அருவமாகவும் வழிபடும் முறை கிடையாது. எத்தனை எத்தனையோ சித்தாந்தங்கள், உருவங்கள், பெயர்கள் பண்டிகைகள். கோடானுகோடி மக்களின் திருப்தி இதில் அடக்கம். கண்டிப்பு ஒன்றுமே இல்லையே. பக்தியில் அன்பும் பாசமும் நிரம்பியிருக்கிறதே தவிர பயம் எங்கே?
​​
சிவலிங்கம் மூன்று பாகமாக அமைந்திருக்கிறது. அடி பாகம் சதுரமாக 4 பக்கங்கள் கொண்டது. அது பூமி க்கு கீழே மறைந்துவிடும். நடு பாகம் எட்டு பக்கம் கொண்டது. இதற்கு ஒரு பீடம் உண்டு. மேல் பாகம், இது தான் வழிபடும் தெய்வம். லிங்கம். உருண்டை வடிவம் கொண்டது. உருண்ட பாகத்தின் உயரம் மற்ற பாகங்களின் மொத்தத்தில் மூன்றில் ஒன்று அளவு. இந்த மூன்று பாகமும் பிரம்மா, விஷ்ணு, சிவன். அடி பாகம் தான் பிரம்மா, நடு தான் விஷ்ணு, மேல் பாகம் சிவலிங்கம் தான் சிவன். இந்த நடு பாக பீடம் நாம் ஆவுடையார் என்போமே அது. ஒரு கை மாதிரி ஒரு பக்கம் நீண்டு இருப்பதன் வழியாக ஜல தாரை. சிவன் அபிஷேகப் பிரியன். எனவே அபிஷேக ஜலம் இதன் வழியாக கீழு விழும். சிவ லிங்கம் ஆக்கல் அழித்தல் ஆகிய இரண்டையுமே குறிக்கும் சிவனின் அம்சம். பக்தர்கள் மன நிறைவு அடைவது இந்த லிங்க உருவத்தை கண்டு தான். வெள்ளைக்காரர்கள் ஏனோ தெரியவில்லை, ​நமது சிவ ​லிங்கத்தை ஆண் குறியாக உணர்த்தியும் நம்மவர்கள் அதை ஒப்புக்கொண்டு ​ இன்னமும் ​கன்னத்தில் போட்டுக்​ ​கொண்டு இருக்கிறார்கள். நல்ல உதாரணம்வேறு கிடைக்கவில்லையா? இன்றும் பலர் தடி தடி புத்தகங்களில் ஆங்கிலத்தில் அதை படிக்கிறார்கள். ஆமாம் என்கிறார்கள். இப்படி தான் லிங்கம் ஆவுடையாரை ஆண் -பெண் மூலம் ஜீவர்களின் சிருஷ்டி என்று எடுத்து சொல்லவேண்டுமா என தெரியவில்லை. மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது. உருவமில்லா சிவனுக்கு இப்படி ஒரு உருவகம் காட்டுவது இழிவு. இதனால் தான் வெளிநாடுகளில் புயல் போல் சுற்றுப்பயணம் செய்து சுவாமி விவேகானந்தர் இதை கண்டனம் செய்து சிவலிங்கம் சாஸ்வத பிரம்மம் என்றார். அதர்வ வேதத்தை எடுத்துச் சொல்லி, சிவன் நீண்ட அடி முடியில்லா ஒரு ஸ்தாணு என்று விவரித்துச் சொன்னார். கற்பனை வடிவம் என்றார்.

நமது ஹிந்து நம்பிக்கை விஞ்ஞானத்துக்கு எதிரி அல்ல. மற்ற மதங்களையும் இழிவு படுத்தவில்லை. விஞ்ஞானம் என்பது மனித மனத்தின் வளர்ச்சி, முதிர்ச்சி ஒன்றே. இயற்கையை சோதித்து உண்மைகளை பரிசோதித்து வெளியிடட்டும். விஞ்ஞானத்தினால் அறியமுடியாதவற்றை ஹிந்து மத வேத, சாஸ்திரங்கள் எடுத்துச் சொல்கிறது. அண்டா என்று வடமொழியில் சொல்வது முட்டையை. அண்டம் என்று தமிழில் லிங்கம் முட்டைவடிவமாக இருக்கிறது. பிரம்மாண்டம் என்பது இந்த பிரபஞ்சத்தை பெரிய முட்டையாக காட்டுகிறது.​ ஹிரண்யகர்ப்பம் தங்க நிற முட்டை. ​ சிவ வழிபாட்டில் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன் என்று சொல்கிறோமே. கருப்பு நிற கிரானைட் கல்லில் லிங்கம் ஒருவகை. மற்றொன்று கெட்டியான பாதரச லிங்கம். இதற்கு சக்தி அதிகம். முட்டை வடிவு ஆரம்பமோ முடிவோ இல்லை என்று காட்டுவதற்காக.

விபூதி பட்டை, மேலே நாகாபரணம், இதெல்லாம் கூட அர்த்தமுள்ளவை தான். ஒரு டேனிஷ் விஞ்ஞானி NEILS BOHR என்ற பெயர் கொண்டவர், சிவலிங்கத்தில் கண்ணுக்குத் தெரியாத அணுக்கள், (ப்ரோடான், ந்யூட்ரான், எலெக்ட்ரான் சேர்ந்தவை) லிங்கத்தின் அமைப்பில் உள்ளது என்கிறார். விஞ்ஞானம் பிறக்குமுன்பே ரிஷிகள் அவற்றை பிரம்மா விஷ்ணு சிவன் (சக்தி) என்று ஆக்கல், காத்தல், அழித்தல் சக்தியாக காட்டியிருக்கிறார்கள், மூன்றும் சிவலிங்கத்தில் அடக்கம் என்றும் எழுதி, சொல்லி வைத்திருக்கிறார்களே..
ஸ்தாணு​ என்ற தத்வம் ​ மூன்று கடவுள் அம்சமாகவும் - பிரம்ம, விஷ்ணு, சிவன் - ஆவுடையார், சக்தி ஸ்வரூபமாகவும் ஹிந்து நம்பிக்கை​யை ​ காட்டுகிறது.
வியாசர் வேதத்தில் சொல்லும் அணோரணீ யம், மஹதோமஹத் என்பது அணுவுக்குள் அணுவாக, பெரியதில் பெரியதாக இருப்பவன் என்று நிர்ணயிக்கமுடியாத பிரம்மத்தின், (சிவனின்) அருவத்தை ப்ரோடான், எலெக்ட்ரான் நியூட்ரான் சமாச்சாரங்களை சொல்கிறது.​ ​காலம், அழிவு, தோற்றம் எதுவுமில்லாதாது.

அர்ஜுனன் களி மண்ணில் லிங்கம் பண்ணி உபாசித்தான் என்று பார்த்தோம். அதேபோல் தான் ராமேஸ்வரத்தில் ராமர், சீதா ஆகியோர் மண்ணில் சிவலிங்கம் சமைத்து பூஜித்தனர் என்று ராமாயணத்தில் வரும். அருவத்தை உருவத்தால் வழிபடுவது. அணுக்கள் தான் உலகின் காரணம் என்று விஞ்ஞானமும் தட்டுத்தடுமாறி இதை கண்டுபிடித்து சொல்கிறது. -- இன்னும் சொல்கிறேன்.

​ஒரு விஷயம் புரிந்து கொண்டால் ஆச்சர்யமாக இருக்கும். சிவலிங்கத்தில் ஒரு புதிர் இருக்கிறது. பிரம்மா பிரபஞ்சத்தை படைத்தார். சரி. ஆனால் அதில் சக்திகள், ப்ரோடான், எலக்ட்ரான், நியூட்ரான், சக்திகள் சிவலிங்கத்தில் இருந்து தோன்றுகின்றன என்று விஞ்ஞானிகள் தலை ஆட்டுகிறார்களே.
​விஷ்ணு தான் ப்ரோடான். - பாசிடிவ் மின் சக்தி.
​சிவன் நியூட்ரான் - மின்சக்தி கிடையாது.
பிரம்மா - எலெக்ட்ரான் - எதிர்மறை மின் சக்தி. - நெகடிவ்.
​சக்தி தேவி -- சக்தி தான். வேறு யார். சுழற்சி.
​சிவலிங்கம் - அணு சக்தி அமைப்பு. ரிஷிகள் முனிவர்கள் வாக்குப் படி, சிவனும் விஷ்ணுவும் லிங்கத்தில் ஐக்கியம். சம்ச்க்ரிதத்தில் மூன்று பட்டைகள் சேர்க்கை, கூடுதல் என்பதை குறிக்கும். அணுவின் சக்தியில் சேர்க்கை தானே ! ப்ரோடான், நியுட்ரான், அதைச் சுற்றிலும் எலெக்ட்ரான் சுழற்சி.
இன்னுமே மேலே அறிந்து கொண்டே போகலாம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...