Monday, February 11, 2019

NARADHA VISITS




நகரத்தில் நாரதன் J.K. SIVAN

நாரதன் அடிக்கடி வருவான். இங்கே அசாத்திய நிகழ்வுகள் நடப்பது அவனுக்கு தெரியும். ஒவ்வொருமுறையும் இங்கு வரும்போது ஏதாவது கண்ணில் படுகிறது. இந்த தடவை நங்கநல்லூர் விஜயம் செய்த நாரதன் ஒரு தெருவில் அசந்து போய் நின்றான். திடுக்கிட்டான். எதிரே ஒரு வீட்டு வாசலில் ஆஞ்சநேயனா நிற்கிறான்? அருகில் என்ன ராமரா? பச்சை நிறம். உருவங்கள் சிறிதாக இருக்கிறதே? ராமன் வில் போல் இல்லையே. ஏதோ ஒரு கொம்பை ஒடித்து வளைத்து கயிறை கட்டி வைத்திருக்கிறது. இடுப்பில் வஸ்திரம் ஏதோ ஒரு கலரில் இருக்கிறதே. ஆஞ்சநேயன் வால் எவ்வளவு பெரியது. இந்த வால் ஏதோ துணியில் சுற்றப்பட்டது போல் இருக்கிறதே. என்ன அக்கிரமம். நாரதன் பார்க்கும்போதே அந்த வீட்டு வாசலில் ராமர் தெலுங்கில் ஏதோ பாடினார். வீட்டுக்குள் இருந்து '' போ போ என்று ஏதோ குரல் விரட்டியது. தொடர்ந்து கருப்பாக ஒரு நாய் ஏகப்பட்ட கூச்சல் போட்டது. ஆஞ்சநேயன் ராமனோடு திரும்பினான். அவர்கள் பேசுவது நாரதனுக்கு புரிந்தது.

''இன்னிக்கு இதுவரை 21 ரூபா தான் தேரிச்சு ''
''அடுத்த தெருவில் ஆறு ஏழு வீடுகளில் எப்படியும் கொடுப்பாங்க. பார்க்கலாம்.''

எதற்கு நாராயணனின் அவதாரத்தை வேஷமிட்டு, ஆஞ்சநேயன் உருவம் காட்டி காசு தேடுகிறார்கள்? இப்படியா அவமானப்படுத்த வேண்டும். இப்படியா பக்தர்கள் உள்ளம் புண் பட வேண்டும்? நாரதன் கண்களில் நீர் துளித்தது . '' நாராயணா'' என பெருமூச்சு விட்டு நடந்தான்.' எங்கோ திருவல்லிக்கேணி பக்கம் சென்றான். நாரதன் ஒரு தெருவில் நின்றான். ரகளை அங்கே. சில மனிதர்கள் கையில் கத்திரிக்கோல்களுடன் ஒரு சிலரை வழி மடக்கி அவர்கள் பூணலை அறுத்துக்கொண்டிருந்தார்கள். ஒரு தொண்டு வைதிக பிராமணர் நடக்க முடியாமல் இடது காலை தாங்கி தாங்கி நடந்து வர ஒருவன் அவர் அருகே சென்று அவரது வயோதிக தலையில் சிறிதாக தொங்கிய குடுமியை அறுத்தெறிந்தான். எதற்கு ஏன் என்று புரியாமல் பிளந்த வாயோடு நின்றார் அவர். அவரது வலது கையில் தர்ப்பை சமித்துகள் நிறைந்த மஞ்சள் துணிப்பை. இடது கையால் தன்னிச்சையாக பின் தலையை தடவிப்பார்த்தார். இதுவரை அவரோடு இணை பிரியாமல் இருந்த குடுமியை காணோமே. என்ன கொடுமை.? பகவானே என்று நிர்கதியாக ஒரு குரல் அவரிடமிருந்து வெளிப்பட்டது. எங்கிருந்தோ சிலர் கோபமாக ஓடிவந்தார்கள். கத்திரிக்கோல் மனிதர்கள் இதை எதிர்பார்த்து ஓடிவிட்டார்கள்.

அவர்களின் தலைவன் சந்தோஷமாக வந்த வேலை சக்ஸஸ் என்று சொல்லி சிரித்துக்கொண்டே ஒரு சந்தில் திரும்பி ஓடியவன் அந்த சந்து முனையில் எதிரே வரும் லாரியை பார்க்கவில்லை. அவனது இடது தோளை குடி தண்ணீர் நிரம்பிய அந்த எட்டு டன் லாரி பளாரென்று மோதியது. எதிரே திடீரென்று ஒருவன் ஓடிவருவானென்று லாரி ஓட்டுபவர் எதிர்பார்க்கவில்லை. லாரியின் கனம் அதன் சக்கரத்தை ஒடித்து லாரி ட்ரைவரால் உடனே ஒரு பக்கமாக திருப்ப முடியவில்லை. நிலைகுலைந்து விழுந்த அவன் வலது கரத்தை கூழாக நசுக்கியது லாரி அவன் கதறல் அவனை அங்கிருந்து தூக்கிச் செல்லும் வரை கேட்டது. எந்த ஆஸ்பத்திரியோ, ஆபரேஷனோ, கை தோளோடு நீக்கப்பட்டதோ? நாரதன் தனது தலை கொண்டையை தடவிப்பார்த்துக்கொண்டு அந்த லாரி போகும்போது பின் பக்கம் பார்த்தான். நாராயணா தண்ணீர் சப்ளை ..என்று அதன் பெயர் கண்ணில் பட்டது. கண்ணீர் விட்டு யாரோ வருந்த தண்ணீர் லாரியாக நாராயணின் அவதாரம் ஒன்று இப்படி கூடவா?

சிறிது நேரம் கூட செல்லவில்லை. நாரதன் வடசென்னை ஒரு சாலை ஒதுக்குப்புறத்தில் ஒரு பசுவுடன் இருவர் பேசுவது கேட்டான்.
''பத்தாயிரம் ஜாஸ்தி. எட்டாயிரம் தரலாம்''
''இல்லீங்க கன்னுக்குட்டி கூட வவுத்திலே இருக்குதே... போட்டுக் குடுங்க''
''யோவ் எங்களுக்கு எடை தான் கணக்கு. தூக்கிக்கினு போய், வேலை செஞ்சி, தோல் பிரிச்சு. அப்புறம் இன்னா தேரப் போவுது. ஆயிரம் கிடைச்சா கூட போதும்னு நாங்க பாக்கிறோம்''
ஒம்பதாயிரமாவது கொடுங்க...
சரி எட்டாயிரத்து ஐந்நூறு. ஏத்து மாட்டை வண்டியிலே...
நாரதனுக்கு புரியவில்லை. பசு காமதேனு... அதை ஏன் இவர்கள் விலை பேசுகிறார்கள்.. தோல், எடை... என்கிறார்களே.சமீபத்தில் நான் கேள்விப்பட்டது இது தானோ.பசுவை வெட்டி மாமிசமாக்கி விற்கிறார்களாமே... ஐயோ. வயிற்றில் கன்றுக்குட்டியோடா. அதனால் தான் கூட விலையோ??.... பசு லாரியில் ஏற்றப்பட்டது. நாரதன் அதை பின் தொடர்ந்தான். தெருவில் பச்சை விளக்கு நின்று சிகப்பு எரிந்தது. லாரிக்கு அருகே ஒரு கார் நின்றது. அதில் ஒரு கண்ணாடி ஆசாமி. அவர் பார்வை லாரியில் பசுவின் கண்களில் நீர் வழிவதை பார்த்துவிட்டது. காரை விட்டு இறங்கி லாரி ஓட்டுனரிடம் நடந்தார். ஏதோ கேட்டார். லாரி ஓரம் கட்டப்பட்டது. கண்ணாடிக்காரர் மாற்றுடையில் வந்த ஒரு அரசாங்க துறை உயர் அதிகாரி. இந்த லாரி நம்பர் அன்று காலை தான் அவரிடம் வந்தது. அதை கண்டுபிடிக்கவேண்டும் என்று கவலைப்பட அதுவே இதோ என் எதிரில். ஒரு சிலை கடத்தலில் சம்பந்தப்பட்ட வண்டி அது. தெரிந்து தான் வண்டியை நிறுத்தி இருக்கிறார். பசு விஷயம் புதியது. அதையும் அறிந்தார். பசுமாட்டுக்கு சொந்தக்காரன் வண்டியிலிருந்து இறங்கினான். வணங்கினான். அவன் பிள்ளை வேலை செய்யும் நிர்வாகத்தின் உயர் அதிகாரி அந்த கண்ணாடியின் மனைவி. அவர் வீட்டுக்கு போயிருக்கிறான்.
மறு வார்த்தை பேசாமல் பசுவை லாரியிலிருந்து இறக்கி அது வீடு போய் சேர்ந்தது....



நாராயணா என்றான் நாரதன்...... அடிக்கடி தமிழகம் வரும் நாரதன் பல விஷயங்களை அறிந்து கொள்வது நமக்கு ஆச்சர்யமாக இல்லையா?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...