Thursday, February 14, 2019

KRISHNA KARNAMRUTHAM

'

மஹான்கள்   J.K. SIVAN
லீலா சுகர்
                         

                   7. கிருஷ்ண கர்ணாம்ருதம்

आमुग्धमर्धनयनाम्बुजचुम्‌ब्यमान
हर्षाकुलव्रजवधूमधुराननेन्दोः।
आरब्धवेणुरवमादि किशोरमूर्तेः
आविर्भवन्ति मम चेतसि केऽपि भावाः॥१-१९

 āmugdhamardhanayanāmbujacumbyamāna
harṣākulavrajavadhūmadhurānanendoḥ |
ārabdhaveṇuravamādi kiśoramūrteḥ
āvirbhavanti mama cetasi ke'pi bhāvāḥ || 1-19

ஆமுக்³த⁴மர்த⁴நயநாம்பு³ஜசும்ப்³யமாந-
ஹர்ஷாகுலவ்ரஜவதூ⁴மது⁴ராநநேந்தோ:³ ।
ஆரப்³த⁴வேணுரவமாதி³கிஶோரமூர்தே-
ராவிர்ப⁴வந்தி மம சேதஸி கேঽபி பா⁴வா: ॥ 1.19॥

ஆயர்பாடியில் கிருஷ்ணன் குழலூதுகிறான்.  மோஹன வம்ஸி என்ற அந்த மூங்கில் குழல் எவ்வளவு சுநாதத்தை எழுப்புகிறது.   சகல   ஜீவராசிகளை,உயிர்களை தன்வயப்படுத்தி ஆனந்தத்தில் திக்கு முக்காட செய்கிறது.  அவன் யாரையும் அழைக்கவில்லை,  கூப்பிடவில்லை.  கூட்டம் சேர்க்கவில்லை. தானுண்டு தனது குழலுண்டு என்று தனிமையில் யமுனாநதி ஓரத்தில் ஒரு மரத்தடியில் அமர்ந்து வாசிக்கிறான். அவனது கீதத்தில் அவனே லயித்து  அவனது கண்கள் அரை மூடி இருக்கிறது.  அந்த அரை மூடிய விழிகள் சுற்றிலும் பார்க்கிறது. எண்ணற்ற கோபியர் எங்கிருந்து வந்து  மனித வேலி  போட்டு விட்டனர். அவன் அவர்களை மனதால் வேலி போட்டு விட்டதாலா?  அவனது குழல்  தந்த கீதத்தில் அவர்களை அறியாமல்  அவர்கள் பாதங்கள்  தாளம் போட்டவாறு  ஆடுகிறதே. தனை  மறந்த நிலையில் அவனது இசை மதுவில் மயங்கிவிட்டார்களா?  அனைவரின் முகத்திலும் பரவசம்.  கிருஷ்ணா  நீ என்ன ஒரு  மயக்கும் மந்திரப்பாவையா? உன்னை வணங்குகிறேன்.

कलक्वणितकङ्कणङ्करनिरुद्धपीताम्बरङ्
क्रमप्रसृतकुन्तलङ्गलितबर्हभूषम् विभोः।
पुनःप्रसृतिचापलम्प्रणयिनीभुजायन्त्रितम्-
ममस्फुरतुमानसेमदनकेलिशय्योत्थितम्॥ १-२०(पृथ्वी)

kalakvaṇitakaṅkaṇaṅkaraniruddhapītāmbaraṅ
kramaprasṛtakuntalaṅgalitabarhabhūṣam vibhoḥ |
punaḥprasṛticāpalampraṇayinībhujāyantritam-
mamasphuratumānasemadanakeliśayyotthitam || 1-20

கலக்வணிதகங்கணம் கரநிருத்³த⁴பீதாம்ப³ரம்
க்ரமப்ரஸ்ருʼதகுந்தலம் கலிதப³ர்ஹபூ⁴ஷம் விபோ:⁴ ।
புந: ப்ரஸ்ருʼதிசாபலம் ப்ரணயிநீபு⁴ஜாயந்த்ரிதம்
மம ஸ்பு²ரது மாநஸே மத³நகேலிஶய்யோத்தி²தம் ॥ 1.20॥

பிருந்தாவனத்தில் படுக்கையில் இருக்கிறான் கண்ணன். யார் அவனை தூங்க விட்டார்கள்? அங்கும் அவனை சுற்றி கோபியர் கூட்டம்.  எழுந்து விட்டான். கையில் கங்கணம் ஜல்ஜல் என்று ஒலிக்கிறது. தலை யில் சுருண்ட கேசங்களை இரு கைவிரல்களால் நீவி விட்டுக்கொள்கிறான். கண்கள்  மயில் பீலியை தேடுகிறது. அதையும் எடுத்து  தலையில் செருகிக்கொள்கிறான். இடுப்பில் தளர்ந்திருந்த  பீதாம்பர வஸ்திரத்தை இருக்க முடிந்து கொள்கிறான். கிளம்பியாகி விட்டது. ஆதி மூலத்திற்கு அடுத்து என்ன வேலையோ? கண்ணன் எழுந்துவிட்டான்  கையில் புல்லாங்குழல் தரித்து விட்டான்..முகத்தில் காந்த புன்னகையோடு  நடக்கிறான்.  இனி அடடா எங்கும் ஆனந்த ஒலி மழைதான்.

स्तोकस्तोकनिरुध्यमानमृदुलप्रस्यन्दिमन्दस्मितम्
प्रेमोद्भेदनिरर्गलप्रसृमरप्रव्यक्तरोमोद्गमम्।
श्रोतृ श्रोत्रमनोहर व्रजवधूलीलामिथो जल्पितम्
मिथ्यास्वाप मुपास्महे भगवतः क्रीडानिमीलद्दृशः॥ १-२१

stokastokanirudhyamānamṛdulaprasyandimandasmitam
premodbhedanirargalaprasṛmarapravyaktaromodgamam |
śrotṛ śrotramanohara vrajavadhūlīlāmitho jalpitam
mithyāsvāpa mupāsmahe bhagavataḥ krīḍānimīladdṛśaḥ || 1-21

அவனுக்கு நன்றாக தெரியும். ஒரு கூட்டம் அவனை சூழ்ந்து நிற்கிறது என்று.  ஆனாலும் பொய்யுறக்கம் நாடகமாடுகிறார். தூங்குவது போல் நடிக்கிறான்.  ''பாவம் கிருஷ்ணன் ரொம்ப கலைத்திருக்கிறான். என்ன என்ன ஆட்டம் ஆடுகிறவன். களைத்து போய் தூங்குகிறான். தூங்கும்போது கூட  அவன் அழகை பார்த்தாயா?  என்று ஒருத்தி கேட்கிறாள். என்ன ஒய்யாரமாக படுக்கை !  எப்போ எழுந்திருப்பானோ?  காத்திருப்போம்''  என்று சில குரல்கள்.  எல்லாவற்றையும் கேட்டவாறு  கண்ணை மூடி பாசாங்கு தூக்கம்.
முகத்தில் அரும்பிய புன்னகை காட்டிக்கொடுத்துவிட்டது . எழுந்து விட்டான். கிருஷ்ணன் பால்ய லீலைகளை லீலா சுகர் ஒவ்வொரு கட்டமாக  அனுபவித்து எழுதுகிறார்.

विचित्रपत्राङ्कुरशालिबाला;\
स्तनान्तरं मौनिमनोऽन्तरं वा ।
अपास्य वृन्दावनपादपास्य
मुपास्यमन्यन्न विलोकयामः ॥ १.२२॥

vicitra-patrankura-shali-bala-
    stanantaram yama vanantaram va
apasya vrindavana-pada-lasyam
    upasyam anyam na vilokayamah
விசித்திர பதரங்குர சாலி பாலா 
-ஸ்தநாந்தரம் மௌனி மனோந்தரம் வா —
அபாஸ்ய வ்ருந்த வன பதபஸ்யா–
முபாஸ்ய மான்யம் ந விலோக்யமா . 1-22

''ஐயா,  லீலா சுகரே , ஸ்ரீ கிருஷ்ணனை  பார்க்கவேண்டும். எங்கே  போய் பார்ப்பது?''
''அவன் இருக்கும் இடம் சொல்கிறேன். அங்கே போய் பாருங்கள்''
அவன் ஞானியரின்  ஹ்ருதயத்தில் வசிப்பவன். அங்கே போய் தேடலாம். அங்கு கிடைக்காவிட்டால்  பிருந்தாவனம் செல்லுங்கள். அங்கே தேடுங்கள். எங்காவது ஒரு மரத்தின் அடியில் கிளையில் அமர்ந்திருப்பான் .  அங்கேயும் கிடைக்கவில்லையென்றால். அவனைத் தேடாதீர்கள். கோபியரை தேடுங்கள். நிச்சயம் அவர்கள் நடுவே அவனை காணலாம். அவனை கண்டால் விடமாட்டார்கள் அந்த வ்ரஜ பூமி  கோபியர்கள். இதை விட்டால் வேறே எங்கேயும் அவனை காணமுடியாது என்பது என் அபிப்ராயம் என்கிறார்  லீலா சுகர்.

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...