Saturday, February 16, 2019

JEYADEVAR



வைஷ்ணவ மஹநீயர்கள்.    J.K. SIVAN 
ஜெயதேவர் 

                                                  நம்ப முடியாத  அதிசயங்கள் 
                                         
ஒரிஸ்ஸா அரசன்  ஜெயதேவர் மனைவி பத்மாவதி தேவியாரை உபசரித்து, கவனித்துக் கொள்ளுமாறு தம் அரசிகளுக்கு அறிவித்ததால்  அவர்களும் அவ்வாறே பத்மாவதி தேவியாருடன் அன்புடனும், மரியாதையுடனும் பழகி,  அரண்மனையில்  பத்மாவதி மூலம்  ஸ்ரீகிருஷ்ண லீலைகளை கேட்டு மகிழ்ந்தனர்.

ஒரு நாள் ஒரு சோக செய்தி.    ராணியின் சகோதரன் திடீர் என்று மரணமடைந்தான்.   அவன் மனைவி துக்கம் தாளாமல் கணவன் உடலோடு தானும் உடன் கட்டை  ஏறியதாக  மளமளவென்று  செய்தி பரவியது.  ஒரே நேரத்தில் சகோதரன் அவன் மனைவி இருவரும் மறைந்த துக்கம்  ராணிக்கு.  ஆனால்  இதைக் கேட்ட  பத்மாவதி மௌனமாகி இருந்தாள் .

ஏன் அம்மா  நீங்கள் ஒன்றும் சொல்லவில்லை.  கவலையே படவில்லையே. என்று  ராணி கேட்கிறாள். என் சகோதரன் மனைவி உடன் கட்டை ஏறினாள் என்றால்  அவள்  இனி  ஏழு பிறவியிலும்,  அவனோடு  வாழ்க்கை துணையாக,  இருவரும் தம்பதியாக இருப்பார்கள் என்று தானே  அர்த்தம்?   என  பத்மாவதியிடம் கேட்ட  ராணிக்கு 

''அப்படி இல்லை.மஹாராணி. கணவன் இறந்ததை கேட்ட உடனே மனைவி தற்கொலை செய்துகொள்ளலாமே தவிர, உரிருடன், நெருப்பில் விழுவதில்,  எனக்கு  சம்மதி இல்லை,  உடன்பாடில்லை ''  என்றாள்  பத்மாவதி.
சூரியன் மறைந்ததும்  சூரிய கிரணங்கள் தானே மறைவது போலே  கணவனின் மறைவோடு மனைவியும் மறைய வேண்டும்''  என்றாள்  ஜெயதேவர் மனைவி பத்மாவதி.   

ராணிக்கு  இது பொய்யோ என்று தோன்றியது.  உண்மையாகவே  பத்மாவதி அப்படிப்பட்ட கொள்கை உள்ளவளா என்று சோதிக்கவேண்டும் என்று எண்ணம் தோன்றியது. 

ஒருநாள்  ராஜா காட்டில் வேட்டையாட சென்றான். தன்னோடு ஜெயதேவரையும் அழைத்து சென்றான்.  ராணி  இந்த சந்தர்ப்பத்த்தை பயன் படுத்திக் கொண்டாள் .   மந்திரியை கூப்பிட்டாள்.  ''  நான்  ஜெயதேவர் மனைவியோடு  அரண்மனையில் பேசிக்கொண்டிருக்கும்போது ஜெயதேவரை காட்டில் ஒரு பெரிய புலி அடித்து கொன்று விட்டது என்று வந்து உண்மையைப் போல் சொல்''  என்று உத்தரவிட்டாள் .

அதேபோல்  அரண்மனையில் அன்று மாலை ராணி பத்மாவதியுடன் பேசிக்கொண்டிருக்கும்போது  மந்திரி ஓடிவந்தான். ''ஐயோ ஐயோ  எப்படி சொல்வேன்'' என்று அழுதான்.
''எதற்கு அழுகிறாய் மந்திரி என்ன விஷயம்  சொல்'' என்றாள்  ராணி.
''காட்டில் புலி அடித்து ஜெயதேவர் இறந்துவிட்டார்.  ராஜா ரொம்ப விசனமாக திரும்பி வந்து கொண்டிருக்கிறார் '' என்று நடித்தான் மந்திரி.

இந்த செய்தி  பத்மாவதியின் காதில் நாராசம் போல் விழ  அடுத்த கணமே  அவள் கீழே விழுந்து  மரணம் அடைந்தாள் 'ஆஹா  என்று  இதை எதிர்ப்பார்க்காத ராணி அதிர்ச்சியில் நடுங்கினாள்.   அரசன்  ஜெயதேவரை  அவர் ஆஸ்ரமத்தில் இறக்கிவிட்டு  முன்னிரவில் அரண்மனை திரும்பியதும்  பத்மாவதி இறந்த அதிர்ச்சி செய்தி கிடைத்தது. 

ராஜா நடந்ததை அறிந்து  அதிர்ச்சியும், சோகமும் கோபமும் கொண்டான்.  ராணியைக்  கொல்ல வாளை உருவினான். 
''சே, ஒரு  பெண்ணை கொல்வது  பாபம் .  என்னையே  அழித்துக் கொள்வது தான் உசிதம் என்று தீர்மானித்து  நெருப்பு மூட்டி அதில் தான் மூழ்க ஏற்பாடு பண்ணினான். அதற்கு முன்  ஜெயதேவரை  சந்தித்து நடந்ததை சொல்லி தன்னால், தன மனைவியால் இப்படி ஒரு இழப்பு நேரிட்டதற்கு மன்னிப்பு கேட்க நினைத்தான். 

ஜெயதேவர் கண் மூடி  நடந்ததை தன் ஞான திருஷ்டியால் அறிந்தார். ''ஜெகன்னாதா, எல்லாம் உன் திருவிளையாடல் என்று வேண்டி, அரசனை சமாதானப்படுத்தி,  பத்மாவதியின் உடலை கொண்டுவர சொல்கிறார்.
அதன் எதிரே  நின்று  ராதா-மாதவ கானம் பாடுகிறார். " மாதவா, கோவிந்தா பக்த ரக்ஷகா, கஜேந்த்ரனுக்கு,  த்ரௌபதிக்கும் உடனே அருள் புரிந்தவா, இப்போது, எனக்கு அருள் புரிவாயா?'  என  துயரத்தோடு வேண்டுகிறார்.

24 சுலோகங்களாக 8 வரி கொண்ட ஸ்லோகங்கள்  உருவாகிறது. அதுவே  கீத கோவிந்த  அஷ்டபதி.  
ஜெகன்னாதன்,  தன் பக்தனுக்காக  அங்கே வந்து ஜெயதேவரை அணைத்து, ஆசீர்வதித்து பத்மவதிதேவியாரை உயிர்ப்பித்தான் '' என்பார்கள். 

இதுமட்டுமா,   ''ஜெயதேவா,  "இந்த உன்னுடைய கீத கோவிந்த,  அஷ்டபதி ஸ்தோத்திரங்களை பாடுபவர்களையும்
கேட்பவர்களையும்  எப்போதும் நான்  அருகில் இருந்து காப்பேன்" என மற்றுமொரு வரத்தையும் அருள்கிறான் ஜெகந்நாதன்.  ராஜா  ஜெகநாதனை நேரில் காணும்  பாக்யம் பெறுகிறான்.  ஜெயதேவரின் அருளால்  தெய்வ தரிசனம் பெறுவது எவ்வளவு பெரிய  புண்யம் அவனுக்கு. !!


ஜெயதேவரை  வேத வியாசரின் அவதாரம் என்று சொல்வார்கள்.   ஜெயதேவரின்  24 கானங்களான  ராச க்ரீடை. கீத கோவிந்தந்தை பாடுவோரின் எல்லாவிதமான இன்னல்களும் ஸ்ரீஹரியின் அருளால் சூரியனைக்கண்ட பனிபோல் விலகி ஹரிபக்தர் ஆவர்கள் என்பது நிதர்சனம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...