Sunday, February 10, 2019

KRISHNA KARNAMRUTHAM



மஹான்கள் J.K. SIVAN
லீலா சுகர்

6. கிருஷ்ண கர்ணாம்ருதம்

मणिनूपुरवाचालं वन्दे तच्चरणं विभोः ।
ललितानि यदीयानि लक्ष्माणि व्रजवीथिषु ॥ १.१६॥

Mani noopura vaachaalam, Vande thacharanam Vibho,
Lalithaani yadheeyaani, Lakshmaani Vruja veedhishu. 1-16

மணிநூபுரவாசாலம் வந்தே³ தச்சரணம் விபோ:⁴ ।
லலிதாநி யதீ³யாநி லக்ஷ்மாணி வ்ரஜவீதி²ஷு ॥ 1.16॥

அடடா, அந்த வ்ரஜ பூமி எவ்வளவு புண்யம் பண்ணிய பூமி. கண்ணன் சிறு கால்களை ஊன்றி நடந்த பூமி. அதில் விசேஷம் என்னவென்றால். அவன் கால்களில் ரேகை என்னென்ன?சங்கு,. சக்ரம், கற்பக கொடி , அங்குசம், பத்மம், மத்ஸ்யம், வஜ்ரம், துவஜம், கலசம் இதெல்லாம், அந்த ஆயர்பாடி மண் தெருக்களில் அவன் பாடம் பட்டதால், அந்த மண்ணில் பதிந்து அத்தனை சின்னங்களும் மண்ணில் சுவடுகளாக பாத ரேகைகளாக தெரிந்தன. இதைக் கண்ட கோப கோபியர்கள் எவ்வளவு புண்யம் பண்ணியவர்கள். ஜல் ஜல் என்று பாதங்களில் சலங்கை, தண்டை ஒலிக்க கண்ணன் ஆடிக்கொண்டே அந்த தெருக்களில் நடந்தவன், ஓடியவன்.குதித்தவன். கண்ணா உன் திருப் பாதங்களை வணங்குகிறேன்.

मम चेतसि स्फुरतु वल्लवीविभो
र्मणिनूपुरप्रणयिमञ्जुशिञ्जितम् ।
कमलावनेचरकलिन्दकन्यका
कलहंसकण्ठकलकूजितादृतम् ॥ १. १७॥

Mama chethasi sphurathu vallavee vibho,
Mani noopura pranayi manju sinjitham,
Kamala vane chara kalinda kanyakaa,
Kala hamsa kanda kala koojithadrutham. 1-17

மம சேதஸி ஸ்பு²ரது வல்லவீவிபோ
⁴ர்மணிநூபுரப்ரணயிமஞ்ஜுஶிஞ்ஜிதம் ।
கமலாவநேசரகலிந்த³கந்யகா
கலஹம்ஸகண்ட²கலகூஜிதாத்³ருʼதம் ॥ 1. 17॥

கண்களை மூடி ஒரு கணம் லீலா சுகர் கண்ணன் வாழ்ந்த ஆயர்பாடி நாட்களை, நினைக்கிறார். கலீர் கலீர் என்று தண்டை யில் பொன் நவரத்ன மணிகள் ஒலிக்க ,புல்லாங்குழலை கையில் ஏந்தி தாமரை மொட்டு போன்ற இதழ்களில் பொருத்தி தேவகானம் பொழிகிறான் கண்ணன். கண்ணனைப் போலவே கருநிறமாக, யமுனை பெரிதாக பொங்கி அவன் ஆடலைக் காண, பாடலைக் கேட்க வருகிறாள். அவள் மீது கம்பீரமாக மிதக்கும் புஷ்பங்களாக வெள்ளை வெளேரென்று அன்னங்கள் கூட்டமாக சேர்ந்துவிட்டன. அவைகளும் கண்ணனை ரசிக்க வந்துவிட்டன. எங்கும் செந்தாமரைக் காடுகள். ஆஹா என்ன வண்ண பொருத்தம். செந்தாமரை காடு. கருநிற யமுனா பிரவாகம். வெண்மையான அன்ன கூட்டங்கள். கருநீல கண்ணன். வண்ண வண்ண உடை உடுத்தி கோபியர்கள். வண்ண வண்ண மயில்கள் மான்கள். அடடா. கண்ணை மூடினால் நம் கண்ணுக்குள்ளும் இந்த வண்ண காட்சி தெரியுமே.

तरुणारुणकरुणामयविपुलायतनयनं
कमलाकुचकलशीभरपुलकीकृतहृदयम् ।
मुरलीरवतरलीकृतमुनिमानसनलिनं
मम खेलति मदचेतसि मधुराधरममृतम् ॥ १.१८॥

Tharunaruna karuna maya vipulayatha nayanam,
Kamala kucha kalasee bhara pulakee krutha hrudhayam,
Muralee rava tharali krutha muni manasa nalinam,
Mama khelathi mama chethasi madhuradhara mamrutham. 1-18

தருணாருணகருணாமயவிபுலாயதநயநம்
கமலாகுசகலஶீப⁴ரபுலகீக்ருʼதஹ்ருʼத³யம் ।
முரலீரவதரலீக்ருʼதமுநிமாநஸநலிநம்
மம கே²லதி மத³சேதஸி மது⁴ராத⁴ரமம்ருʼதம் ॥ 1.18॥

கண்ணன் அருகே எல்லோரையும், எல்லாவற்றையும் ஒரு முறை கண்களை சுழற்றி பார்க்கிறான். கண்ணின் ஓரங்களில் இளம்சிவப்பு படர்ந்து மனதை கவர்கிறது. இப்படி ஒரு அழகா? நீண்ட விழிகள். அகன்ற விழிகள். அதில் தான் எத்தனை கருணை பொங்கி வழிகிறது.

புல்லாங்குழல் வாசிக்கும் கண்ணன் மார்புகள் புளகாங்கிதத்தில் பரந்து விரிகின்றன. அப்படி அவன் மார்பு சுருங்கி விரியும்போது மணிமாலைகள் ஆனந்த நடனம் ஆடுகிறதே. லட்சுமி தேவி அவனை இருகத்தழுவி மகிழ்கிறாளோ! இசைக்கேற்ப அவன் முக அசைவில் அவன் காது குண்டலங்கள் எவ்வளவு தாள பாவத்தோடு ஆடுகின்றன. இதழ்கள் மூடி திறந்து இசைக்கு பக்குவமாக அவனது சுவாசத்தை காற்றாக அளிக்கின்றது. கை விரல்கள் புல்லாங்குழலின் துளைகள் மீது நர்த்தனமாடுகிறதே. இதல்லவோ வேணுகானம். ஆத்ம நாதம். தேவ கானம். எங்கும் எதிரொலித்து. முனிவர்களின் இதயத்தில் நிரம்பி, மனமாகிய மானஸரோவரில் உச்சி முகட்டில் நின்று விண்ணைத்தொடுகிறதே. கமலமலர்களாக மாறி எங்கும் இசைப் பூமழையல்லவா பொழிகிறது. அலைபாயுதே கண்ணா என் மனம் மிக அலைபாயுதே! உன் ஆனந்த மோகன வேணுகானமதில்....





No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...