Tuesday, November 14, 2017

களஞ்சியத்தில் ஒரு கைப்பிடி.- J.K SIVAN




களஞ்சியத்தில் ஒரு கைப்பிடி.- J.K SIVAN

ராமச்சந்திர கவிராயர்

தமிழகத்தில் கவிஞர்களுக்கும் கலைஞர்களுக்கும் பஞ்சமே இல்லை. முன்னொரு காலத்தில் ராமச்சந்திர கவிராயர் ஒரு சிறந்த புலவராக திகழ்ந்தும் வறுமை அவரை கெட்டியாக பிடித்துக் கொண்டிருந்தது.

அந்த வறுமையிலும் அவர் நகைச்சுவையை கைவிடாது இயற்றிய ஒரு பாடல் என் நெஞ்சைத்தொட்டது. வெகுகாலமாக இந்த பாடல் எனக்கு பிடித்த ஒரு சில பாடல்களை தருகிறேன்.

''என் தலையெழுத்தை பாருங்கள். தின்னுவதற்கு ஒன்றுமில்லாமல் பசி வீட்டில் எல்லோரையும் தின்கிறது. சரி எங்கே யாவது சென்று யாரையாவது பிடித்து ஏதாவது தேறுமா என்று பார்ப்போம் என்று போனேனா.

வழியில் ஒரு படிக்காத முட்டாளை பார்த்தேன். இவனிடம் ஏதாவது தானம் வாங்குவோம் என்று
அவனைபோல் சிறந்த கல்விமான் இல்லை என்று பாடினேன்,
காட்டில் கிடைப்பதை விற்று வாழும் அந்த தனவானை நீ மஹாராஜா, பெரிய நாட்டையே ஆள்பவன் என்றேன்.
பொல்லாத அவனை நீ உலகிலேயே ரொம்ப ரொம்ப நல்லவன் அப்பா என்றேன்.
சண்டை, யுத்தம் போர் என்றாலே ஓடிவிடுபவனை, போரில் புலி நீ தானய்யா என்றேன்.
கை கால் எல்லாம் சூம்பிப் போய் தொப்பை ஒன்றே பிரதானமாக தெரிந்தைப் பார்த்தும் கூட நான் கூசாமல் ஒரு பொய் சொன்னேன். ''ஆஹா உன்னைப்போல் புஜ பல பராக்கிரமசாலி என்றேன்.

எச்சில் கையால் காக்காய் ஒட்டாதவனை கர்ணனுக்கு அடுத்து நீ தான். வலது கை கொடுப்பதை அதுவே அறியாமல் கொடுப்பவன், வள்ளல் நீ ஒருவனே என்றேன்.

இப்படியெல்லாம் இல்லாததை எல்லாம் அடுக்கி அடுக்கி சொன்னேனே, அதையெல்லாம் தலையாட்டி ரசித்து கேட்டவன் நான் தானம் கேட்டபோது ''என்னிடம் ஒன்றும் இல்லையே. போய் வாருங்கள்'' என்று கையை விரித்து விட்டான்.

என்ன செய்வது. என் விதியை நொந்து அடுத்தவனை தேடி நடந்தேன்.'' என்கிறார் ராமச்சந்திர கவிராயர்.

''கல்லாத வொருவனை நான் கற்றாய் என்றேன்
காடெறியும் அவனை நாடாள்வாய் என்றேன்
பொல்லாத வொருவனை நான் நல்லாய் என்றேன்
போர் முகத்தை அறியானைப் புலியே என்றேன்
மல்லாரும் புயம் என்றேன் சூப்பற்றோளை
வழங்காத கையனை நான் வள்ளல் என்றேன்
இல்லாது சொன்னே னுக்கில்லை என்றான்
யானும் என்றன் குற்றத்தால் ஏகின்றேனே.''

இன்னொரு பாட்டில் நேராக அந்த ப்ரம்ம தேவனை பார்த்து சரமாரியாக கேள்விகள் கேட்கிறார்.

''யோவ் ப்ரம்மா , இப்படி என்னை பசியால் வாட விட்டுட்டியே. எங்கே பார்த்தாலும் நிறைய கல்லும் மண்ணுமாக இருக்கிறதே . அதையாவது தண்ணீர் விட்டு கரைத்து காய்ச்சி குடிக்க ஏன் சொல்லிக் கொடுக்கவில்லை நீ? இல்லாவிட்டால் நிறைய தங்க நாணயங்கள் பொற்காசுகள் மூட்டை மூட்டையாக தந்திருக்கவேண்டுமா. இரவும் பகலுமாக நான் தவிக்கிறேனே. புல்லு தின்கிற மாடாக இருந்தா நல்லா இருந்திருப்பேனே . எல்லோர் கிட்டேயும் தலையை சொரிந்து கொண்டு பல்லைக்காட்டிக்கொண்டு நாணிக் கோணி நிற்க செய்து விட்டானே அந்த தாமரை மலர் மேல் உட்காந்துகொண்டிருப்பவன்.
''கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா
இல்லைத்தான் பொன்னைத்தான் எனக்குத்தான் கொடுத்துத்தான் இரட்சித்தானா
அல்லைத்தான் சொல்லித்தான் அரைத்தானோ அத்தானையோ வெங்கும்
பல்லைத்தான் றிறக்கத்தான் பதுமத்தான் புவியிற்றான் பண்ணினானே.''

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...