Monday, November 6, 2017

யாத்ரா விபரம்








யாத்ரா விபரம் J.K. SIVAN

திருப்பாலீஸ்வரர் லோகாம்பிகா ஆலயம்

காட்டூரிலிருந்து பழவேற்காட்டில் ஒரு பெரிய பாதையை அடைந்தோம். ஒரு பக்கம் போனால் சிந்தாமணீஸ்வரரை பார்க்கலாம். இன்னொரு பக்கம் எதிர் திசையில் திருப்பாலைவனம். ஒரு பழைய ஊர்.
சிவன் அங்கே பாலீஸ்வரர். அம்ருத ஈஸ்வரர் என்றும் பெயர். வெள்ளை நிற ஸ்வயம்பு லிங்கம் தலையில் வெட்டு காயம். அம்பாள் லோகாம்பிகா. திருப்பாற்கடலை கடைந்து தேவர்கள் அம்ருதத்தை இங்கே உண்டார்களாம். சில அசுரர்களும் அம்ருதம் உண்ணும் ஆசையோடு தவளைகளாக உரு மாறி வந்தார்கள். அவர்களை சிவன் ''நீங்கள் தவளைகளாகவே இருங்கள்'' என்று சபித்தார். ஒரு அழகிய பெரிய குளம் இங்கே இருக்கிறது. ஆச்சர்யமாக அதில் ஒரு தவளை கூட வசிப்பதில்லை. நிஜங்களை வைத்து பின்னப்பட்ட புராணங்களா. புராணங்களின் நிஜமாக நிகழ்வுகளா?

திருப்பாலைவனம் பழவேற்காட்டிலிருந்து 10 கி.மீ. தூரம். காட்டூரிலிருந்து 15 கி.மீ.
கிழக்கு பார்த்த கோவில். ஐந்து நிலை ராஜகோபுரம். ராஜராஜன் காலத்திய கோவில். நிறைய கல்வெட்டுகளில் எழுதித்தள்ளி இருக்கிறான் சோழன்.

ராஜராஜன் கால கோயில் சிதிலமாகி பின்னர் கிருஷ்ணதேவராயர் காலத்தில் புனர்ப்பிக்கப்பட்ட ஆலயம்.
அமைதியான ஒரு பெரிய கோவில். சமீபத்தில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த கோவில் உருவான ஒரு கதை. எலுமிச்சை மரத்தின் இலைகளைப்போல் இருக்கும் ஒரு உயர்ந்த வளைந்த மரம். பாலை மரம். இந்த மரங்கள் நிறைந்த காடு கடலை ஒட்டி இருந்தது. சோழ ராஜாவின் படைகள் அந்த மர நிழலில் தங்கின. ராஜாவின் பட்டத்து யானையை அருகில் இருந்த பாலை மரத்தில் கட்டினதும் அது பொக்கென்று மண்டையைப் போட்டுவிட்டது. என்ன இது. கடுங்கோபம் கொண்டான் ராஜா. ஏதோ மந்திரம் மாயம் இருக்கிறது இந்த மரத்தில் உடனே வெட்டுங்கள் இதை. என் பட்டத்து யானையே போய்விட்டதே இதனால்.'' . என்று அந்த மரத்தை வெட்ட சொன்னான் ராஜா.

மரத்தை ஒரு வெட்டு வெட்டினான் கோடாலியால் ஒருவன். அடுத்த கணம் ரத்தம் பீறிட்டு வந்தது.

பயம் ராஜாவை பிடித்துக்கொண்டு விட்டது. அந்த இடத்தை நன்றாக தேடினார்கள். காட்டில் அங்கே தலையில் அடிபட்ட நிலையில் ஒரு சிவலிங்கம்.

சோழன் தனது செயலுக்கு பிராயச்சித்தமாக ஒரு பெரிய கோவில் கட்டினான் குளம் வெட்டினான்.

அழகிய நடராஜருக்கு தனி சந்நிதி. சிதம்பரத்தில் ஆட வல்லான் முன் நிற்பது போல் ஒரு பிரமை தோன்றியது.

கோவில் நேரம் 07.00 Hrs to 12.00 Hrs and 16.30 Hrs to 20.00 Hrs. landline 044-27978667 and mobiles 93802 12536 and 94451 76390

PHOTOS BY SRI VELUDHARAN



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...