Monday, November 6, 2017

உண்மைகள் கசக்கும்.

  உண்மைகள் கசக்கும். ​ j.k. sivan


உண்மைகள்  இனிப்பதில்லை.  கசப்பானவையும்  இல்லை.  உண்மைகளை கசப்பாக்கப் படும்போது தான் அவை  இனிப்பதில்லை

​. ​இது நமக்கு  எ
ல்லோருக்குமே புரியும்.  ஆனால்  மறந்து விடுகிறோம்.

நான் இங்கே குறிப்பிடு

​ம் சம்பவம் 
 அநேக குடும்பங்களில் நிகழ்வது. உண்மைக்குப் புறம்பல்ல .  வெட்கமும் வேதனையும் நிரம்பியது. .

கணபதி இறந்துவிட்டார். அவர் மகன்  எங்கோ  வெளியூரில் இருக்கிறான். மனைவி  மட்டுமே இருக்கிறாள். பெண்கள் மணமாகி அருகிலோ தூரத்திலோ இருக்கிறார்கள்.  இருக்கும்போது  பாதிக்கு மேல் அவர் சேர்த்து வைத்தது  வைத்தியத்துக்கு  கரைந்து விட்டது.  இனி அவரது ''காரியங்கள்'' நடக்க ஆன செலவு  வைத்தியத்திற்கு செலவழித்ததை விட  மிகவும் அதிகமானது.  

​  வெள்ளை கோட்டு , கருப்பு ​
கோட்டு  போட்டவர்கள்  வாங்கியதை விட சட்டையில்லாதவர்கள் வாங்கியது அதிகம் தான்.  அவர்களுக்கு  ''திருப்தியாக''  கொடுக்கவேண்டியது தான்.  அங்கு தான்  சூட்சுமம்.  திருப்தி என்பது கொடுப்பவரின் திருப்தியா  கேட்டுப் பெறுபவரின் திருப்தியா?  இரண்டாம் வகையில்  தான் மேற் சொன்னது நிகழ்ந்தது.

பதிமூன்று நாளில் 

​8
 லக்ஷம் ரூபாய் செலவிற்காக    நகையை விற்று  அந்த திக்கற்ற மனைவி ''திருப்தி'' படுத்தினாள் .  அவளைக்  கட்டிப் போட்ட  ஒரு சொல் ''பெரியவரை  ஜாக்ரதையாக  திருப்தியாக  பித்ரு லோகம் சேர்க்கவேண்டாமா.  அவர்  உங்களையெல்லாம்  ஆசிர்வதிக்க வேண்டாமா?''

இதற்கு மேல் ஒன்றும்  சொல்ல விரும்பவில்லை.  முடிந்தால் ஒரு யோசனை. 


 பிராமண  சங்கங்கள் நிறைய இருக்கின்றன.  வேலையிலிருந்து  ரிடையர் ஆனவர்கள், வேலையிலேயே  இருப்பவர்கள்  யாரா இருந்தாலும்  மனதிருந்தால்  அந்திம  கார்யங்களுக்கான  சாஸ்திர விதிகளை குறைவற கற்று  திக்கற்ற குடும்பங்களுக்கு  மிக  ஸ்ரத்தையாக  காரியங்கள் நடைபெற உதவலா
​மே

இப்போது  எத்தனை பேர்  வேதங்களையும்,  
​ஸமஸ்க்ரித 
ஸ்லோகங்களையும்  கற்றுக்கொள்ள விழைகிறார்கள்.  லௌகிக  காரியங்களுக்கும சென்று  மந்திரம் ஓதி  பெருமைப் படுத்தப் பட்டு, கொடுத்த தக்ஷிணை, சம்பாவனை கூட  வேண்டாம்  என்று   நிராகரித்து  ஒரு  ரூபாயை மட்டும்   எடுத்துக்கொண்டு 
​நானே  எத்தனையோ இடங்களுக்கு   SMART   அமைப்பு மூலம்  ருத்ர சமகம்  குறைந்தது பதினோரு அணுவாக சொல்லி யிருக்கிறேன்.     இதனால்  ​
இருபக்கமும் திருப்தி அடைகிறது.

மற்றவர்  வழியில், பிழைப்பில்  கு
​று
க்கிடுவதாகவோ, 
​ அ​
வர்கள் பிழைப்பில் மண்ணை போடுவதற்கோ இது யோசனை அல்ல.    இதனால்  இப்போது பிழைத்துவரும்
​ அனைத்து ​
 பிராமணர்க
​ளுமே 
 தவறானவர்கள்  தேவைக்கு மேல்  தேடுபவர்கள்
​, பண ஆசை பிடித்தவர்கள் ​
 என்றும்  அர்த்த
​மு​
ம் இல்லை.  
​ எல்லா துறையிலும் ''சிலர்''   ''சில்லறைகளாக''  இருப்பதால் வரும் கேடு. 

நான் சொல்ல வருவது.  கிரமமாக  செய்ய வசதியில்லை என்பதால்  காரியங்கள் நின்று விடக்கூடாது.  பணம் பாரம்பரிய சடங்குகளில் தலை நுழைக்க கூடாது.  


இன்னின்ன  காரியத்துக்கு  இது தான் 
​குறைந்த பக்ஷம் என்று  நிர்ணயித்தல் அவசியம். 
  எங்கெங்கு  பொன் என்ற இடத்தில் பூவை  வைக்க வேண்டுமோ  அதை செய்வதால்  
​வைதிகர்கள் 
வருமானம்  குறையாமல் இருக்கவேண்டும். 
​அதே நேரம்  க்ரஹஸ்தனுக்கு  செலவினம்  
வரம்பு  மீறாமல் இருந்தால்  
​இரு தரப்பட்ட ​
குடும்பங்கள் பிழைக்கும்.  கட்டுப்படுத்தவேண்டியது  தானம், தர்மம், சடங்குகளுக்கான  செலவு.  கும்பாபிஷேகத்தை கோடியிலும்  செய்யலாம்.  வசதிக்கேற்ப  சில  ரூபாயில்  தர்ப்பைக் கயிற்றிலும் செய்யலாம் என்பது  அனுபவத்தில் எல்லாரும்  தெரிந்தது. சடங்கு ஒன்றுதான்
​.   ​
 செலவினம் வீக்கம் அடையும்போது தான்  சிரமம் தெரிகிறது.  பலர்  சேர்ந்து செய்யும்போது சிரமம் குறைவாக தோன்றுவதால் அது நியாயமாகாது.  
​ஒரு தனி குடும்பஸ்தன் எல்லை மீறி அவஸ்தை பட வைக்க கூடாது.



அந்திம  காரியங்கள் செய்வது புண்ணியம்.  பிரேத சம்ஸ்காரம் பெரியவா ஆதரித்தது. எல்லோரும்  இதில் உதவலாம்.
​    பலர் ​
உதவுகிறார்கள்.   பிராமணர்களுக்கு  அன்ன தானம், அவர்கள் குடும்பம்  பிழைக்க  தேவையான  உதவி  செய்யவேண்டியது முக்கியம் தான்.  அவர்களை ஒழுங்கு படுத்தி ''கிரமமாக'' செய்ய வேண்டியதை செய்விக்க  சங்கங்களும், மடமும்  உதவ வேண்டும். அப்போது  எதுவும்   ''அக்'' கிரமமாக  நடக்காது என்று  சிலர்  சொல்வதில் ஞாயம் இருக்கிறது
​.

வேத அத்யயனம் செய்த  பிராமணர்களுக்கு  தக்க  உதவி  செய்து அவர்கள் வாழ வழி செய்யவேண்டும். அதே நேரம்  அவர்களுக்கு  இன்னின்ன  காரியத்துக்கு  இவ்வளவு  என்று ஒரு அளவு தெரிந்தால் கொடுப்பவர்க்கும் அதை ஏற்பாடு செய்ய  வழி பிறக்கும். 
​ பணத்துக்கு பயந்துகொண்டே  பல குடும்பங்கள்  சாஸ்த்ர  விரோதமான காரியங்களில் ஈடுபடுவதும், பித்ரு காரிய சடங்குகள் செய்யப்படாமல் இருப்பதும்  தவிர்க்கப் படவேணும். 


தேவைப்பட்டவர்கள் அணுகினால் உடனே  அதை நடத்திக்கொடுக்க  அனுபவஸ்தர்களை அளிக்க இந்த  சங்கங்கள்
​, ​
 நிறுவனங்கள் முன் வரவேண்டும்.

ஒரு குடும்பத்தில்  வெள்ளிப் பசு வும் கன்றும் கண்டிப்பாக  தானம் கேட்கப் பட்டது. என்னிடமே  பணம் கொடுத்தால், நானே  வாங்கி வருவேன். என்று  ஒரு வெள்ளிப்பசு கன்றுடன்  காட்டியபோது  உள்ளங்கையில் அது கனத்தது.  300-400 கிராம்  குறையாது.  உற்றுப் பார்த்த  கிரகஸ்தர்  பசுவின் வயிற்றில் மஞ்சள் நிற  வெண்கலத்தை பார்த்துவிட்டார்.   அது வெள்ளி முலாம் பூசிய பசு.  கேட்கப் பட்ட பணமோ  முழு வெள்ளிப் பசுவிற்கு.  மற்றதை யோசித்துக்கொள்ளுங்கள்.  
​''​
நானே  வாங்கி வந்து 
​விடுகிறேன்.​
  பிறகு  பணம்  கொடுங்கள் என்று ''உதவி'' செய்பவர்க
​ளை  தான் சற்று கவனிக்க வேண்டும். 


தந்தையின் ஆத்மா  சாந்தியடைய, திருப்தி அடைய  ஒரு மகன் அவனது ஊரில்  விலை அதிகமான ஒரு  வேஷ்டியை வாங்கி வந்திருந்தான். பெறுபவருக்கு இது பிடிக்கவில்லை.  இன்னும்  அதிகமாக  ஜரிகை இருக்கும்படியாக  வாங்கி இருக்கக்கூடாதா
​?''. 
 அதிருப்தி வெளிப்பட்டது. என்னிடமே  பொறுப்பை விட்டு  நானே  எல்லாம்  பார்த்து வாங்கி வருவேனே. பணம் எவ்வளவு என்று சொல்கிறோனோ அதை கொடுத்
​தால் ​
 போதும்
​'' ​
என்றும்  உதவிகள் வருகிறது.

அவசியம் இங்கு  சொல்லவேண்டிய ஒரு  சிறந்த  சிறப்பான  உண்மை. இன்னும்  சில  ஊர்களில், சிலர்  மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரியவர்களாக  நியாயமாக 
​கிரஹஸ்தர்களுக்கு 
 சேவை செய்து வருகிறார்கள்.  யார் உந்துதல். யார்  கண்காணிப்பும்  இன்றி அவர்கள்  இறைவனருளால்  உதவி வருகிறார்கள்.  போலிஸ் காரன் இல்லாவிட்டாலும்  ஹெல்மெட்  அணிபவர்கள் அவர்கள்.  ஒற்றை வழிப்பாதையில்  எதிர்பக்கம்  போகாதவர்கள்.

இன்னும்  நிறைய கேள்விப் படுகிறோம். சொல்லவோ, எழுதவோ  நாவும் கையும் கூசுகிறது.  நேர்மை  மனச்சாட்சி, நியாயம், தர்மம்  எல்லாருக்கும் வேண்டும். ஒருவருடைய  இழப்பை வாய்ப்பாக  பயன் படுத்துவது  நிறைய இடங்களில்  அனேக சந்தர்ப்பங்களில் வழக்கமாகி விடும்போது ஏனோ கிருஷ்ணா  மனம் துடிக்கிறதே.  கலியுகத்தில்  நீ  திருத்தவேண்டியதில் இதுவும்  ஒன்றாக ஆகிவிடக்கூடாது  என்று  அஞ்சுகிறோம்.

வியாபாரம் ஒன்றில் தான்  மேலே மேலே பணம் சம்பாதித்து  வசதி பெற  வாய்ப்பு உண்டு.  உத்தியோகஸ்தர்கள்,  கையில் கரையை  கழுவிக்கொள்ள  தேவையில்லாதவர்கள்  மெது மெதுவாக  கடன் உடன் வாங்கி  தான்  தமது வருமானத்தி
​ற்கே
ற்ப  செலவினங்களை  அமைத்து  எதிர்காலத்து தேவைகளைப் பூர்த்தி செய்பவர்கள்.  முக்கால் வாசி  இந்த ரகம் தான்.  அவர்கள்  திருப்தியாக தான் வாழ்கிறார்கள்.  இது எல்லோருக்கும்  பொருந்த வேண்டியது தானே.  இதையே  நடுத்தர வர்க்கம்  என்கிறோம்.   சமய சந்தர்ப்பங்களை  நெஞ்சில் ஈரமின்றி சாதகமாக்கிக் கொள்வது  அநீதி வியாபாரம்.

இது பற்றி நிறையவே  அவசியம் சிந்தித்து  நிவாரண பணியில்  ஈடுபடுவது அத்யாவசியமாகிவிடுகிறது.  ஒரு குடும்பத்தில் ஒரு  வயதான மாது  இந்த ''காரியங்களை'' நடத்த  இயலாது என்ற  நிலைக்கு தள்ளப்பட்டு  பசுவிற்கு உணவும்,  அனாதை  இல்லங்களில்  அன்ன தானமும்,  பள்ளிச் சிறுவர்களுக்கு சீருடையும், உணவும் அளித்தாள் .  முடிந்ததை செய்தேன். நான் செய்தது என் ''அவருக்கு''  திருப்தியை அளித்திருக்கும்  என்று  சொன்னதை சமீபத்தில்  யார்  மூலமாகவோ கேட்டேன். பரம்பரை பரம்பரையாக  பித்ரு காரியம் செய்து வந்த குடும்பங்கள்  அவற்றை தொடரமுடியாத நிலையை  யார்  ஏற்படுத்துகிறார்கள்?  இதற்கு யார்  பொறுப்பு ? சமூகம் யார்?  நாம்  தானே?  நமது  கடமையை  நாம்  செய்ய வேண்டாமா?  பலனை எதிர்பார்க்காது செய்ய வேண்டும்
​''.
 கிருஷ்ணன் ஞாபக படுத்துகிறான்
.
​  நாம் புரிந்துகொள்கிறோமா?​
 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...