Saturday, November 25, 2017

HUMAN BODY

உன் உடம்பு.. தெரியுமா உனக்கு...?
J.K. SIVAN

ஏன் தலையில் கையை வைத்துக்கொண்டு விசனமாக உட்கார்ந்து கொண்டிருக்கிறாய் என்று கிருஷ்ணன் என்னெதிரே வந்து நின்று கேட்டால் என்ன சொல்வேன்.

'ஏன் என்னை இந்த உலகத்திலே பிறக்க வைத்தாய். படுகின்ற அவஸ்தை தாங்கமுடியவில்லையே.

கிருஷ்ணன் சிரித்தான்.

''நான் கஷ்டப்படுவதைப் பார்த்து இவ்வளவு சிரிப்பா உனக்கு?''

''அடே முட்டாளே, உலகத்திலேயே பிறவிகளில் மேன்மையானது மனித பிறவி. அதை உனக்கு கொடுத்ததற்கு திட்டுகிறாயே?''

''ரொம்ப லக்ஷணமாக இருக்கிறது இந்த பிறவி. கொஞ்சம் கூட நிம்மதி இல்லை, நாய் படாத பாடு. செத்துடலாம் போல இருக்கு இந்த உடம்பை வச்சுண்டு படற அவஸ்தைக்கு .''

''நீ வரவழைத்துக்கொண்டதற்கு நீ தான் அனுபவிக்கவேண்டும். என்னை ஏன் குறை கூறுகிறாய்?''

''ரொம்ப பெருமை பட்டுக்கொள்ளாதே அப்படி எந்த விதத்தில் என் உடம்பு மற்ற பிறவிகளின் உடம்பை விட சிறந்தது என்று மார் தட்டிக்கொள்கிறாய் கிருஷ்ணா?''

மனிதா உன் உடம்பை அற்புதமாக பிரமன் படைத்ததை மறந்து பேசாதே. நான் சொல்ல வேண்டாம் இந்தா. உங்களில் ஒருவன் ஒரு விஞ்ஞானி எழுதியதையாவது படி. நான் சொல்வது அப்புறம் தான் உன் மண்டையில் ஏறும்.'இதெல்லாம் புரிந்தால் தான் நான் சொல்வது உனக்கு புரியும். அவசரப்படாதே.'

கிருஷ்ணன் நீட்டிய ஒரு அச்சடித்த காகிதத்தில் என்ன படித்தேன்.

யாரோ எழுதியது மனித உடலைப் பற்றி. ஆச்சரிய தகவல்கள். உண்மையிலேயே அது சுவாரஸ்யமாக இருக்கிறது.

நுரையீரலில் 300,000 மில்லியன் ரத்த நாளங்கள். இதை எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்தால் 2400 கி.மீ (1500 மைல்) நீளம்....

ஆணின் உடலில் ஒவ்வொரு நாளும் 10 மில்லியன் புதிய விந்து செல்கள் உண்டாகி... அந்த ஆள் ஒரு முழு கிரகத்தின் மக்கள் தொகையை 6 மாதங்களில் நிரப்ப முடியும்.

தூங்கும்போது மனிதனின் உயரம் 8mm அதிகரிக்கும். தூங்கி எழுந்த பிறகு மீண்டும் பழைய உயரமே இருப்பார். காரணம்: உட்காரும்போது,/ நிற்கும் போது, பூமியின் புவி ஈர்ப்பு விசையினால் எலும்புகளின் மீது ஏற்படும் அழுத்தம்.

ஒவ்வொரு சிறுநீரகமும் கிட்னி ஒரு மில்லியன் வடிகட்டிகளை (FILTERS) கொண்டுள்ளது. அவைகள் ஒரு நிமிடத்திற்கு 1.3 லிட்டர் ரத்தத்தை வடிகட்டுகிறது. மேலும் ஒரு நாளில் 1.4 லிட்டர் சிறுநீரை வெளியேற்றுகிறது.

மனிதன்பகாசுரன். ஒவ்வொருவனும் வாழ்நாளில் குறைந்தது 50 டன் உணவை உண்டு 50,000 லிட்டர் நீர் குடிக்கிறான்.

கண்களின் தசை ஒரு நாளில் 100,000 முறை அசைகிறது. அதற்கேற்ப சமமாக கால்களுக்கு வேலை தரவேண்டும் என்றால் அப்பாடா, தினமும் 80 கிலோமீட்டர் ...... ந.. .. ட.....க்........ க...... வேண்டும்.

நம் உடம்பு சுமார் 30 நிமிஷத்தில் அரை கேலன் தண்ணீரை கொதிப்பதற்கு வேண்டிய சூட்டை தருகிறது..

பெண்ணின் கருப்பையில் கிட்டத்தட்ட அரை மில்லியன் கரு முட்டை செல்கள் இருந்தாலும் 400 அல்லது கொஞ்சம் கூட செல்களுக்கு மட்டுமே புதிய உயிரை உருவாக்கும் வாய்ப்பு உண்டு. .

நமது ஒரு தனி ரத்த அணு, நமது முழு உடம்பையும் சுற்றிவர ஒரு நிமிஷம் தான் ஆகும்.

மனித உடம்பில் பெரிய செல் பெண்ணின் உடம்பில் உருவாகும் கரு முட்டை தான். ரொம்ப சின்னது ஆணின் விந்து, செல்.

நடக்கிறோமே . ஒரு அடி எடுத்து வைக்க, 200 தசைகள் வேலை செய்கிறது. நமது ரெண்டுகால்களின் பாதங்களில் மட்டுமே 250,000 வியர்வை சுரப்பிகள் உள்ளது.

திகு திகுவென எரியும் ஆசிட் நமது வயிற்றில் இருக்கிறதே அந்த ஜீரணம் செய்யும் ஆசிட், zink (துத்தநாகம்)அப்படியே கரைத்துவிடும் சக்தி உள்ளது.

நமக்கு மூளை இல்லை என்று எவன் சொன்னான். நமது மூளையில் britaanica encyclopaedia போல 5 மடங்கு கூடவே விஷயம் சேர்த்து வைத்துக்கொள்ள முடியும் சார்.

பல்லு மேலே வெள்ளையா எனாமல் இருக்குதே, அது தான் நம்ம உடம்பிலேயே hard கடினமானது.

ஒரு ரகசியம் சொல்லட்டுமா. உங்க கட்டைவிரல் நீளமும் உங்க மூக்கு நீளமும் ஒண்ணுதான் சார்.

பாக்டீரியா கிட்ட வரக்கூடாது என சொல்லாதேங்கோ .உங்க காலில் ஒரு ட்ரில்லியன் trillion பாக்டீரியா !!

பிறக்கும்போது உடம்பிலே 300 எலும்புகள். வளர்ந்து பெரியவனானதும் 206 எலும்புகள் தான். நமது மொத்த எடையில் 14% இந்த எலும்புகள் தான். ரொம்ப ஸ்ட்ராங் தொடை எலும்பு, கான்கீரிட்டை விட ஸ்ட்ராங்..

நமது எடையில் 7% இரத்தம். ஆஹா! அனுதினமும் 450 கேலன் ரத்தத்தை kidney சிறுநீரகம் க்ளீன் செய்யுது..

பெண்களுக்கு சராசரியாக 4.5 லிட்டர் இரத்தம், ஆண்களுக்கு சராசரியாக 5.6 லிட்டர் இரத்தம் . உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்கள் 120 நாள் தான் இருக்கும். அப்பறம் மாறும். ஒரு ;நொடியில் சுமார் இரண்டு மில்லியன் இரத்த சிவப்பணுக்கள் நமது உடலில் இறக்கின்றன. பிறக்கின்றன.

உடம்பிலே இரத்த குழாய்களின் நீளம் சுமார் 600,000 மைல்கள். அதாவது இந்த தொலைவில் நாம் இரண்டு முறை உலகத்தை சுற்றி வந்துவிடலாம்.

நமது கண்களின் எடை சராசரியாக 28 கிராம். நமது கண்களுக்கு 500 விதமான ஒளிகளை பிரித்தெரியும் சக்தியுண்டு. நமது கண்களில் உள்ள கருவிழி மட்டும் தான் இரத்த நாளம் இல்லாத உயிருள்ள திசு.
முதல் 8 வாரம் வரை குழந்தைகளின் கண்களில் கண்ணீர் வராது.

நமது இதயம் ஒரு வருஷத்துக்கு 35 மில்லியன் முறை லப் டப் னு துடிக்கிறது.ஒரு சராசரி வாழ்வில் இதயமானது 2.5 பில்லியன் முறை துடித்து 1 மில்லியன் barrel பேரல் இரத்தத்தை இரத்த குழாயில் செலுத்துகிறது. இதயத்தில் உள்ள இரத்த அழுத்தமானது, இரத்தத்தை 30 அடிவரை பீய்ச்சி அடிக்கும் சக்தி கொண்டது.

மனித மூளையில் சுமார் 100,000,000,000 (100 பில்லியன்) நரம்பு செல்கள் உள்ளன.
ஒரு மனிதன் 35 வயது அடைந்தது முதல் மூளையில் தினமும் 7000 நரம்பு செல்கள் இறக்கின்றன.

நாம் சுவாசிக்கும் மொத்த ஆக்ஸிஜனில் 20% மூளைக்கு செல்கிறது.
நமது மூளை 80% நீரால் ஆனது.
நமது மூளையின் செயல்திறன் பகலைவிட இரவில் அதிகமாக இருக்கும்.

நமது உடலில் வேகமாக வளரக்கூடிய திசு முடிதான். மனித தலையில் சராசரியாக 100,000 தலைமுடிகள் இருக்கும்.

மனித உடலில் உள்ள கல்லீரானது 500 விதமான வேலைகளை செய்கிறது.

மனிதன் உயிரிழந்த பின்பு உறுப்புகள் செயல் இழக்கும் நேரம்:
கண்கள் 31 நிமிடங்கள் | மூளை 10 நிமிடங்கள் | கால்கள் 4 மணி நேரம் | தசைகள் 5 நாட்கள் | இதயம் சில நிமிடங்கள்.

இதெல்லாம் தெரிந்துகொண்டால் இப்படி அற்புதமாக பிரமன் படைத்த உடம்பை ஒன்பது வாசல் கோவில் என்று போற்ற தோண்றவேண்டாமா. அதனுள் பரமனை அனுபவித்து நன்றி சொல்லவேண்டாமா. இது புரிந்தபின் கீதை படிப்போம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...