Saturday, November 11, 2017

சுபாஷிதம் - 5



ராஜா பர்த்ருஹரியின் நீதி சதகம்:
சுபாஷிதம் - 5

हर्तुर्याति न गोचरं किम् अपि शं पुष्णाति यत्सर्वदा‌உप्य्
अर्थिभ्यः प्रतिपाद्यमानम् अनिशं प्राप्नोति वृद्धिं पराम् ।
कल्पान्तेष्वपि न प्रयाति निधनं विद्याख्यम् अन्तर्धनं
येषां तान्प्रति मानम् उज्झत नृपाः कस्तैः सह स्पर्धते ॥ 1.16 ॥

Harturyaati na gocharam kimapi sham pushnaati yatsarvadaa
Hyarthibhyah pratipaadyamaanamanisham praapnoti vriddhim paraam
Kalpaanteshwapi na prayaati nidhanam vidyaakhyamantardhanam
Yeshaam taan prati maanamujjhatha nripaah kastaissaha spardhate 1.16

ஹர்துர்யாதி ன கோசரம் கிம் அபி ஶம் புஷ்ணாதி யத்ஸர்வதா‌உப்ய்
அர்திப்யஃ ப்ரதிபாத்யமானம் அனிஶம் ப்ராப்னோதி வ்றுத்திம் பராம் |
கல்பான்தேஷ்வபி ன ப்ரயாதி னிதனம் வித்யாக்யம் அன்தர்தனம்
யேஷாம் தான்ப்ரதி மானம் உஜ்ஜத ன்றுபாஃ கஸ்தைஃ ஸஹ ஸ்பர்ததே || 1.16 ||

' ஹே ராஜாக்களே, என்னய்யா உங்கள் சொத்து, பணம், செல்வம் எல்லாம்? இதோ இந்த நிறைகுடம் போல் தளும்பாமல் உட்கார்ந்திருக்கும் இவர்கள் பார்ப்பதற்கு தான் கந்தல் ஆடை உடுத்திய ஏழைகள். அவர்களுக்குள் நிறைந்திருக்கும் கல்விச்செல்வம், ஞானம் அடடா, விலை மதிக்கமுடியாதது. மற்றவர்களுக்கு அவர்கள் வாரி வழங்கினாலும் துளியும் குறையாமல் மேலேமேலே சேர்ந்துகொண்டே போவது. உலகமே அழிந்தாலும் குறைந்தாலும் அவர்கள் ஞானம் குறையாதய்யா. உங்கள் செல்வம்?? வளருமா? மற்றவருக்கு கொடுத்தால் தானே பெருகுமா? திருடர்கள் கணநேரத்தில் உங்கள் செல்வத்தை கவர்ந்து கொண்டு செல்வார்கள், அவர்கள் செல்வத்தை தொடமுடியுமா? அதுசரி உங்கள் செல்வம் உங்களுக்கே தான் கடைசியில் உதவுமா? யோசியுங்கள். உடனே விட்டுத்தள்ளுங்கள் உங்கள் தற்பெருமையை, கர்வத்தை.

अधिगतपरमार्थान्पण्डितान्मावमंस्थास्
तृणम् इव लघु लक्ष्मीर्नैव तान्संरुणद्धि ।
अभिनवमदलेखाश्यामगण्डस्थलानां
न भवति बिसतन्तुर्वारणं वारणानाम् ॥ 1.17 ॥

adhigataparamārthānpaṇḍitānmāvamaṃsthās
tṛṇam iva laghu lakṣmīrnaiva tānsaṃruṇaddhi |
abhinavamadalekhāśyāmagaṇḍasthalānāṃ
na bhavati bisatanturvāraṇaṃ vāraṇānām || 1.17 ||

அதிகதபரமார்தான்பண்டிதான்மாவமம்ஸ்தாஸ் த்றுணம் இவ லகு லக்ஷ்மீர்னைவ தான்ஸம்ருணத்தி |
அபினவமதலேகாஶ்யாமகண்டஸ்தலானாம்
ன பவதி பிஸதன்துர்வாரணம் வாரணானாம் || 1.17 ||

இதோ பாருங்கள் உலகத்தீரே. கற்றோரை மதியுங்கள். வெறுக்காதீர்கள், அலட்சியப்படுத்தாதீர்கள். அவர்கள் சத்தியத்தை உணர்ந்தவர்கள். மாயையான இந்த உலகத்தில் செல்வமாக தோன்றுபவை எதனாலும் கொஞ்சமும் பாதிக்கபடாதவர்கள். ஏன் தெரியுமா? அவர்கள் உலக பற்றுகளை, செல்வங்களை, சுகங்களை, திரணமாக (ஒரு புல்லாக) மதிப்பவர்கள். மதங்கொண்ட சக்திவாய்ந்த ஒரு யானையை குலத்திலுள்ள அல்லிக்கொடியால் கட்டி அடக்க முடியுமா? கற்றவர்களை இந்த உலக மாயைகள் அவ்வாறு நெருங்கமுடியாது.

अम्भोजिनीवनविहारविलासम् एव
हंसस्य हन्ति नितरां कुपितो विधाता ।
न त्वस्य दुग्धजलभेदविधौ प्रसिद्धां
वैदग्धीकीर्तिम् अपहर्तुम् असौ समर्थः ॥ 1.18 ॥

ambhojinīvanavihāravilāsam eva
haṃsasya hanti nitarāṃ kupito vidhātā |
na tvasya dugdhajalabhedavidhau prasiddhāṃ
vaidagdhīkīrtim apahartum asau samarthaḥ || 1.18 ||

அம்போஜினீவனவிஹாரவிலாஸம் ஏவ
ஹம்ஸஸ்ய ஹன்தி னிதராம் குபிதோ விதாதா
ன த்வஸ்ய துக்தஜலபேதவிதௌ ப்ரஸித்தாம்
வைதக்தீகீர்திம் அபஹர்தும் அஸௌ ஸமர்தஃ || 1.18 ||

கோபத்தில் படைத்தவன் கூட ஒரு ஹம்சத்தை (அன்னத்தை,) ''போ இங்கிருந்து'' என்று தாமரைக்கொடி கூட்டத்திலிருந்து விரட்டலாம். பிரிக்கலாம். ஆனால் அவனால் கூட பாலில் கலந்த நீரை பிரிக்க முடியாதே. கற்றுணர்ந்த ஞானியிடமிருந்து ஞானத்தை நினைவினால் கூட விலக்க முடியாது.

केयूराणि न भूषयन्ति पुरुषं हारा न चन्द्रोज्ज्वला
न स्नानं न विलेपनं न कुसुमं नालङ्कृता मूर्धजाः ।
वाण्येका समलङ्करोति पुरुषं या संस्कृता धार्यते
क्षीयन्ते खलु भूषणानि सततं वाग्भूषणं भूषणम् ॥ 1.19 ॥

keyūrāṇi na bhūṣayanti puruṣaṃ hārā na candrojjvalā
na snānaṃ na vilepanaṃ na kusumaṃ nālaṅkṛtā mūrdhajāḥ |
vāṇyekā samalaṅkaroti puruṣaṃ yā saṃskṛtā dhāryate
kṣīyante khalu bhūṣaṇāni satataṃ vāgbhūṣaṇaṃ bhūṣaṇam || 1.19 ||

கேயூராணி ன பூஷயன்தி புருஷம் ஹாரா ன சன்த்ரோஜ்ஜ்வலா
ன ஸ்னானம் ன விலேபனம் ன குஸுமம் னாலங்க்றுதா மூர்தஜாஃ |
வாண்யேகா ஸமலங்கரோதி புருஷம் யா ஸம்ஸ்க்றுதா தார்யதே
க்ஷீயன்தே கலு பூஷணானி ஸததம் வாக்பூஷணம் பூஷணம் || 1.19 ||



எதய்யா நகை, பூஷணம்? கையில் அணியும் கேயூரமா? கழுத்தில் அணியும் அட்டிகை, மாலை, சங்கிலியா, வெள்ளை வெளேரென்று முழு நிலவுபோல் ஜொலிக்கும் முத்து வடமா? அழகு என்றால் வாசனை திரவியத்தில் குளித்து வாசனாதி தைலங்கள் தரிப்பதா, மலர்கள் நிறைய சூட்டிக் கொள்வதா, சீவி சிங்கரித்துக் கொள்வதா, வெறும் முட்டாள் தனம் இதெல்லாம். வாக் சாதுர்யத்தால் எவன் மக்களை தனது அறிவின் சக்தியால், ஞானத்தினால், ஈர்க்கிறானோ அவன் தான் சர்வ அழகுக்கும் சொந்தக்காரன். மற்றதெல்லாம் அழியக்கூடியவை. அவனது அறிவின் ஒளியோ, ஒலியோ அவனுக்குப் பின்னும் நிலைத்து நிற்பது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...