Tuesday, June 19, 2018

VAINAVA AACHARYARGAL



வைணவ  ஆச்சார்யர்கள்   J.K. SIVAN 
       
                       
 யாமுனாச்சார்யார்  -  1

கி.பி. 918ல் மதுரையில் பிறந்த 'ஆளவந்தார்'' (நம்மை வெற்றி கொண்டவர்)  என்ற யாமுனாசார்யார்.   ஒரு சிறந்த விஷ்ணு பக்தர் .    அவரை  ஸ்ரீ ராமானுஜர் தனது பக்திக்கும் மதிப்புக்குமுறிய  மானசீக  குருவாக ஏற்று , ஆச்சார்யனாக  பாவித்தார். இருவரும் சந்தித்ததே  இல்லை. அந்த மஹான்  ஸ்தோத்ர ரத்னா இயற்றியவர். ஆளவந்தாரின்  தாத்தா  ஸ்ரீ நாதமுனிகள்  சிறந்த     அஷ்டாங்க யோக சித்த புருஷர். நம்மாழ்வாரின் பாசுரங்களை இசைபட வெளி கொணர்ந்தவர். ஸ்ரீ நாதமுனிகளின் மகன் ஸ்ரீ ஈஸ்வர முனி தந்தையைப் போல கல்வி கேள்விகளிலும்  வைஷ்ணவ சம்பிரதாய கோட்பாடுகளிலும் வல்லவர்.  வடக்கே கிருஷ்ண க்ஷேத்திர யாத்ரை சென்ற  ஈஸ்வரமுனி தம்பதிகளுக்கு ஒரு குழந்த பிறந்ததும்  நாதமுனிகள் அந்த குழந்தைக்கு  கிருஷ்ணன் நினைவாக யாமுனா  என்று பெயரிட்டார்.  தனது மகன் ஈஸ்வரமுனி இளம் வயதிலேயே  அகால மரணமடைந்ததில் மனமுடைந்து நாதமுனிகள் சன்யாசம் மேற்கொண்டதோடு  ஸ்ரீ விஷ்ணு பரமாக வாழ்ந்தார்.  எனவே யாமுனாச்சர்யர்  ஏழைத் தாய், பாட்டி வசம் வளர்ந்தார்.

யாமுனாச்சாரியார்  ஐந்து வயதில்  பாஷ்யாச்சார்யார் என்ற குருவின்  பாடசாலையில் சேர்ந்தார். பனிரெண்டு வயதுவரையில்  தனது நற்குணத்தால்,சிறந்த மாணவனாக  குருவின் நன்மதிப்பைப் பெற்றார். அப்போதெல்லாம்  பண்டிதர்கள் அரசர்கள் சபையில் வாதம் செய்து யார் சிறந்தவர்  என்று பெயரும்  பட்டமும், பதவியும்  பெறுவார்கள்.  பாண்டியன் அரசவையில்  கோலாஹலன் என்று ஒரு பண்டிதன்.அவனை எவரும் வென்றதில்லை. அவனிடம் தோற்றவர்கள் அவனுக்கு வருஷா வருஷம் கப்பம் கட்ட அரசன் அனுமதித்தான். கட்டாத  தோற்றவன் மரண தண்டனை பெற்றான்.  யாமுனாச்சர்யாரின் குரு பாஷ்யாச்சாரியாரும் அவ்வாறு கோலாஹலனிடம்  தோற்று கப்பம் கட்டிவந்தார். ஏழ்மையால் ரெண்டு வருஷங்கள் கப்பம் கட்ட முடியவில்லை.

ஒருநாள்  யாருமில்லை. தனியே  யாமுனாச்சாரியார் மட்டும்  பாடசாலையில் இருந்த பொது கோலாஹலன்  ஆட்கள்  கப்பம் வசூலிக்க வந்தனர்.

''எங்கே உன் குரு  பாஷ்யாச்சரியார்?''

''நீங்கள் யார், எதற்கு வந்திருக்கிறீர்கள், யார் அனுப்பியது?''

''என்னடா, சிறுவா,  நாங்கள் யார் என்று தெரியவில்லையா?  பாண்டிய நாட்டு  அரசவை பண்டிதர்   புகழ்  பெற்ற கோலாஹலன் பெயர் கூட தெரியாத முட்டாளே,  அவர்  சிஷ்யர்கள் நாங்கள். உன் குருவுக்கு சித்தம் கலங்கி விட்டதா?  கப்பம் பாக்கி வைத்திருக்கிறாரே, உயிரை இழக்க எண்ணமா ?  அல்லது மீண்டும் ஒருமுறை எங்கள் ஆசானோடு மோத திட்டமா?  விளக்கில் விழுந்து மாயும் விட்டில் பூச்சியாகி விடுவார் பாஷ்யச்சார்யார்,  ஜாக்ரதை''

யாமுனாசார்யர்  மென்மையானவர். எல்லோரையும் மதிப்பவர். 


''ஐயா, உங்கள் குருவுக்கு ஞானம் போதாதோ என்று அஞ்சுகிறேன். எனவே தான் அவர்  உங்களைப் போன்ற மமதை, கர்வம், அஹங்காரம் கொண்டவர்களை சிஷ்யர்களாக வளர்த்திருக்கிறார்?  ஒரு நல்ல குரு இத்தகைய குணங்களை சிஷ்யர்கள் மனத்திலிருந்து நீக்கியிருக்க வேண்டுமே?  எதற்காக என் அருமை குருநாதர் பாஷ்யாச்சார்யார்   தன்னுடைய பொன்னான நேரத்தை உங்கள் குரு கோலாஹலனைப்  போன்ற அறிவிலிகளோடு வாதம் செய்து வீணடிக்கவேண்டும். உடனே சென்று உங்கள் குருவிடம்,  ஸ்ரீ பாஷ்யாசாரியாரின் கடை நிலை சீடன் ஒருவனோடு முதலில் அவரை வாதம் செய்ய தயாரா என்று கேளுங்கள்? தைரியம் இருந்தால் என்னிடம் வாருங்கள் '' என்றார் யாமுனாச்சார்யர்.

வெகுண்டு கோபத்தோடு திரும்பின சிஷ்யர்களிடம் விஷயமறிந்தான் கோலாஹலன்.

''அப்படியா சேதி.   என்ன,  ஒரு  பனிரெண்டு வயது பையனா...என்னோடு   போட்டியிலா?   ஹா ஹா ' என்று  வாய்விட்டு சிரித்தான்  கோலாஹலன்.  ஒருவேளை பாவம் பைத்தியமோ''   என்று இன்னொரு சிஷ்யனை அனுப்பினான்.  யாமுனாச்சாரியாரை கையோடு அழைத்து வரச் சொன்னான்.

''ஒஹோல்,  பாண்டிய மன்னரே அனுப்பினாரா உங்களை.   இது கூடவா  அவருக்கு தெரியவில்லை ?  உங்கள் குருவிற்கு சரி சமானமாக வாதம் செய்பவன் என்பதால் என்னைத்தக்க  வாஹனம், பரிவாரங்கள், மரியாதைகளோடு அல்லவா  அழைத்துச் செல்ல வேண்டும்   அதுகூட  மறந்து போய்விட்டதோ?   போய் உங்கள் குருவுக்கு ஞாபகப் படுத்துங்கள்''

பிறகு என்ன.    பல்லக்கும், நூறு  ஆட்களும் புடைசூழ யாமுனாச்சார்யாரை  மதுரை  கூட்டிச்செல்ல வந்துவிட்டார்கள்.  விஷயம்  காட்டுத் தீ போல் எல்லா இடமும் பரவியது.   வெளியூர் சென்றிருந்த  பாஷ்யாசார்யார் செவியிலும் விழுந்து, ''ஐயகோ, என் அருமைச் சீடன் யாமுனாசார்யனுக்கா இந்த  ஆபத்து. இனி அவன் உயிர் தப்புவது இந்த ஜென்மத்தில் இல்லையே '' என்று தவித்தார். ஆஸ்ரமம் திரும்பினார்.

ஆஸ்ரமம் திரும்பிய  குருவின் பாத கமலங்களில் விழுந்து ஆசி பெற்றார் யாமுனாச்சார்யார். ''குருநாதா  சற்றும் கவலை வேண்டாம். உங்கள் நல்லாசியோடு  கோலாஹலனை முறியடித்து வெற்றியோடு திரும்புவேன்'' என்று புறப்பட்டார். 

''பெருமாள்  சித்தம் அப்படியாயின் நல்லதே நடக்கும்''

சிங்கத்தோடு சிறு முயல் குட்டி வாதம் செய்வதைக்கான எண்ணற்றோர்  திரண்டனர்.   ஏற்கனவே தோற்றவர்கள் மனம் வாடினர்.  "பகவானே, இந்த சிறு பிள்ளைக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது. அதே சமயம் எங்களைப் போலவர்களை மீட்க  இவன் சக்திவாய்ந்தவனாக அமையவேண்டும் உன் கிருபையால்'' என்று வேண்டினார்கள். யாமுனாசார்யாரை வாழ்த்தினார்கள்.  


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...