Sunday, June 17, 2018

LAST RITES




                                              போனவனுக்கு......J.K. SIVAN .

ரொம்ப பேருக்கு மரணம் என்ற வார்த்தையே பிடிக்காது. பயமா? தப்ப முடியுமா?  சில விஷயங்கள் அது சம்பந்தமாக தெரிந்துகொள்வதில் என்ன அருவருப்பு?  ஏதாவது கொஞ்சம்  உபயோகமாகவும் இருக்குமே 


அந்த காலத்தில்  இறந்தவர்களை  தோளில்  மட்டுமே சுமந்து கொண்டு செல்வது வழக்கமாக  இருந்ததற்கு காரணம் உண்டு. 
1.  எரிக்கும் இடங்கள் , சுடுகாடுகள், ஆங்காங்கே ஆற்றங்கரையில் அதிக தூரத்தில் இல்லை.   2.,
2.  எடுத்துச் செல்ல  இந்த காலத்தைப் போல்  வாகனங்கள் கிடையாது. 
3.  எல்லா மனிதர்களுமே திடகாத்திரமாக இருந்தார்கள்.   
4.  தூக்கிச்செல்ல  கௌரவம் பார்க்கவில்லை. ஊரில்  ஒற்றுமையாக யாருக்குவேண்டுமானாலும் உதவினார்கள்.
இறந்தவுடன் நேரம் ஆக ஆக உடலின் எடை  அதிகரித்துவிடும். இது இயற்கை விதி. கால நேர வித்தயாசத்தால் இந்த காலத்தில் வண்டிகள் வசதி இருக்கும்போது பழக்கமும் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிட்டது. சுடுகாடுகள் இருந்த இடங்கள் வீடுகள், அடுக்கு மாளிகையாகி விட்டன. நங்கநல்லூரில் பார்க்கிறேனே . ஆக்வவெ சுடுகாடுகள், எரிக்கும் மண்டபம் தூர எங்கோ உயர புகைபோக்கிகளோடு ஒதுக்கு புறத்திற்கு சென்று விட்டது. சுற்றிலும் பல தரப்பட்ட மக்கள் வாழும் இடத்தில் இறந்தவனுக்கு எங்கே இடம். 

மயானத்தில்  விறகுகளை உபயோகித்தார்கள்.  சிதை மேடை சாம்பலில்  குளித்த படி இருக்கும். நிறைய வேலை தொடர்ந்து அதற்கு அல்லவா.  சிலர் ஒரு முறை, சிலர் மூன்று முறை  அப்ரதக்ஷிணமாக,  இடமிருந்து வலமாக அந்த சிதையை சுற்றிவந்து இறந்தவன் உடலை கட்டுகளில் இருந்து அவிழ்த்து,   தலை தெற்கில் இருக்கும்படியாக  சிதைமேடையில்  வைப்பார்கள். அதாவது தலை மயானத்தை பார்த்திருக்கும்படியாக.  உடலை போர்த்தி இருக்கும் வெள்ளை துணியை தவிர உடலில் ஒரு  ஆபரணம் கூட,  அரைஞாண் கயிறு கூட,  அகற்றப்படும்.  நிர்வாண வெற்றுடம்பு மட்டுமே  செல்கிறது உலகை விட்டு! சொத்து சுதந்தரம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு.

குடும்ப வாத்தியாரோ  அல்லது ஏற்பாடு  செய்யப்பட்ட ப்ரோகிதரோ மந்திரங்கள் ஓதுவார். சடங்குகள் முடியும். அங்கும்  பங்காளிகள் , விட்டுப்போனவர்கள், இறந்தவனுக்கு வாய்க்கரிசி போடுவது வழக்கம். யாருக்கு அதிகாரம் இருக்கிறதோ , அதாவது மூத்த பிள்ளை, அல்லது பேரன், இல்லையென்றால் அடுத்தவர் எவரோ,தனது இடது தோளில்   சுட்ட களிமண் காலி சட்டியை ஏந்திக் கொண்டு இடம் வலமாக சிதையை  சுற்றி வந்து இறந்தவன் தலைப்பு பக்கத்தில் அதை கீழே வைத்து அதில் கொண்டுவந்த கும்பநீரை அதில் நிரப்பி அதில் அரிசி, சின்ன தங்கக்காசு, அல்லது வேறு ஏதாவது நாணயம் போட்டு, அந்த அரிசியை கொஞ்சம் இறந்தவன் வாயில் போடுவான். 

ஈமக்கி க்ரிரியை செய்பவன்,  மறுபடியும்  அந்த மண் சட்டியை எடுத்து இடது தோளில்  வைத்து ஒரு சந்தன  கட்டை துண்டை பின் புறமாகஏந்திக்கொண்டு முன் போல்  மீண்டும் இடம் வலமாக மூன்று முறை  உடலை  சுற்றி வருவான். ஒவ்வொரு முறை சுற்றி வரும்போதும் பின்னல் வருபவன் ஒருவன் ஒரு கல்லினால் அந்த சட்டியை உடைத்து ஒரு சிறு  துளை செய்வான். அதன் வழியாக தண்ணீர் கீழே விழுந்து இறந்தவன்  உடல் மேல் படும். மூன்று முறை அவ்வாறு அந்த சட்டியை உடைப்பார்கள். நீர் எல்லாம் முக்கால்வாசி இதற்குள் கீழே இறங்கி இருக்கும்.  இது கடைசி அபிஷேகம்.

என்ன காரணம் என்றால்,  

1.  இறந்த ஜீவன் அக்னியில்  கருகி எரிந்து போனாலும்  கூட,  பிறப்பு இறப்பு இல்லாத  அவன் ஆத்மா தாகம்  பசி  இல்லாமல் இருக்கவேண்டுமே.  ''இந்தா ஆத்மா,   இந்த குடத்தில் அரிசியை போட்டு சமைத்து பசியை போக்கிக்கொள் (பிண்டம்). குடிப்பதற்கும் நீர் உள்ளது.  

2. எவர்சில்வர், இண்டாலியம், பாத்திரங்கள் புழங்காத அந்த காலத்தில் மண் சட்டி தான் சோறு வடிக்க, தண்ணீர் பிடித்து வைக்க.   எனவே இந்த சட்டி அளிக்கப்படுகிறது ஆத்மாவிற்கு.
ஜீவனுக்கு இதனால் மகிழ்ச்சி, சந்தோஷம் கொஞ்சம் கிடைக்கட்டும் என்று இருக்கலாம்.

இன்னொரு விசேஷ காரணம் சொல்வதானால்:    சட்டி சுட்டதடா  பாட்டில் வருவது போல், சட்டி நமது உடலை குறிக்கும். அழியக்கூடியது.  நிரந்தரமற்ற உலக வாழ்க்கை.  உடைந்த சட்டி  மீண்டும் களிமண்ணாக மாறும், இன்னொரு சட்டி பிறக்கும். நமக்கும் தொடர்ந்து இன்னொரு உடல் இன்னொரு வாழ்க்கை. உடைந்த ஜட்டியிலிருந்து நீர் பூமியில் விழுந்து மறைகிறது.  இறந்த உடலிலிருந்து ஜீவன் ஆத்மாவோடு இன்னொரு உடலை அடைகிறது.

எனவே தான்  நாம் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன் படுத்திக்கொண்டு நம்மாலான உதவியை பிறர்க்கும் நம்மால் முடியும்போதே தொடர்ந்து செய்து கொண்டு வரவேண்டும். அது ஒன்று தான் கூட வரும் மற்றதெல்லாம், அரைஞாண் கயிறுகூட   bye  சொல்லிவிடும்.

இப்போதைக்கு இது போதும்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...