Monday, June 18, 2018

GITANJALI



ரபீந்திரநாத் தாகூர்   --     ஜே.கே சிவன் 
        
                              கீதாஞ்சலி                                                 
                                                                          
This is my prayer to thee, my lord---strike, strike at the root of penury in my heart.
Give me the strength lightly to bear my joys and sorrows.
Give me the strength to make my love fruitful in service.
Give me the strength never to disown the poor or bend my knees before insolent might.
Give me the strength to raise my mind high above daily trifles.
And give me the strength to surrender my strength to thy will with love.

பகவானே  கிருஷ்ணா,  நான்  உன்னை என்ன கேட்பேன்?  எனக்கென்ன வேண்டும் என்று தானே?   எனக்கு உன்னிடம் இருந்து என்ன வேண்டும் தெரியுமா, நீ எதை எனக்கு தரவேண்டும் அறிவாயா? என் மனதில் என்
இதயத்தில் வெற்றிடமாக இருக்கிறதே, எதற்கும் உபயோகமில்லாத ஞானப் பஞ்சமாக,  ஞான சூன்யமாக  இருக்கிறதே அங்கு சக்தியை பலமாக கொடு.  எதற்கு என்று கேட்கிறாயா வரிசையாக சொல்கிறேன் எண்ணிக்கொள்.

1.  என்னதான் சுகம் என்னை தேடி வரட்டுமே,  எவ்வளவு பேரிடியாக  துன்பம் என்னை சூழட்டுமே, அவைகளால்  பாதிப்பு இல்லாமல் இன்பத்தையும்  துன்பத்தையும்  ரெண்டையும்  சமமாக  எடுத்துக்கொள்ளும் மனப்பாங்கு வரவேண்டும். நீ தான் அதைக் கொடுக்கக்கூடியவன்.  சக்தியைத் தா. 

2.என் மனத்தில் அன்பு ஊறவேண்டும். ஊறிக்கொண்டே இருக்க வேண்டும்.  உன்னிடம் மட்டும் அல்ல. நீ படைத்த அனைத்து உயிர்களிடத்தும் கூட. அந்த அன்போடு நான் சேவை செய்யவேண்டும். அது அனைவருக்கும், அனைத்துக்கும் பயன்பட வேண்டும். அந்த சந்தோஷம் எனக்கு வேண்டும்.  சக்தியைத் தா.

3. பொழுது விடிந்தால் ஆரம்பித்து,  இரவு மண்டையை படுக்கையில் சாய்த்து தூங்கும் வரை அப்பப்பா எத்தனை இன்னல்கள், தடங்கல்கள், எதிர்பார்ப்பு,  ஏமாற்றம், கோபம்  தாபம்.  என் மனம்  இதையெல்லாம் தாண்டி ஒரே சீராக  அமைதியாக  ஆனந்தமாக இருக்க தேவையான சக்தி உன்னிடம் தான் இருக்கிறது.அந்த சக்தியை தா.
4.  அவனருளால் அவன் தாளை வணங்க  என்று ஒரு அற்புதமாக சொல் எங்கள் தமிழில் உண்டு. அந்த அர்த்தத்தில் சொல்கிறேன்.  உன் திருவடிகளில் சரணடைய எனக்கு சக்தி வேண்டுமல்லவா, அந்த சக்தியை உனக்கு மனமார்ந்த அன்போடு செலுத்த ஒரு சக்தி வேண்டாமா, அந்த சக்தியை நீயே  எனக்கு கொடு கிருஷ்ணா, நான் பம்பரம்,  என்னை சுற்றி ஆடவிடுவது நீ அல்லவா.  ஆட்டுவித்தால்  ஆடுகிறேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...