Saturday, June 9, 2018

FATHER



'' அப்பாவை பற்றிய ஒரு சிந்தனை ''

J.K. SIVAN

நீண்ட வழி, ரெண்டு பக்கமும் மரங்கள். ரொம்ப அகலமான சாலை இல்லை, மண் பாதை. வடக்கு முனையில் தான் அரசாங்க பள்ளி. அருமையான டீச்சர்கள். அதிகம் பெண்கள் தான். பையன்களுக்கு படிப்பில் அக்கறை இல்லை. சரசா பிரேமா இருவரும் பேசிக்கொண்டே வீடு நோக்கி நடக்கிறார்கள், எதிர்த்த வீடுகள்.

''சரசா, காமாட்சி டீச்சர் சொன்னாளே , நிஜமாகவே பேய் பிசாசு எல்லாம் இருக்குமா?''
''இருக்காது''
''நல்லது தான் இருக்கும், கிறிஸ்மஸ் சமயத்தில் பரிசு எல்லாம் கொடுக்க வருமே சாண்டா க்ளாஸ், அது மாதிரி, உங்கப்பா மாதிரி''

"ஆமாண்டி பிரேமா, எங்கப்பாவை மாதிரி ஒருத்தரை பார்க்க முடியாது. எனக்கு கடவுள் அவர்தான். கடவுள் கொடுத்த பரிசு தான் எங்கப்பா ''

''எங்கப்பா தான் எனக்கும் தெய்வம், சரசா, ஊறுகா பாட்டிலே திறக்கமுடியாம ஒவ்வொருத்தரா என்னன்னவோ பண்ணி முடியாமல் அவருகிட்ட தான் போகும். எப்படியோ சண்டை போட்டு பாட்டில் மூடி திறந்து தருவார். இருட்டா இருக்கிற அந்தரகிரௌண்ட் அறைக்கு போகவே பயப்படுவோம். பல்லி தேள் இருக்கும், பாம்பு கூட இருக்கலாம்னு. ஆனால் ராத்தரி கூட அவர் தனியாவே போய் கண்டா முண்டான் சாமான் எல்லாம் போடறது எடுக்கறதுக்கு போவார். ஏதோ ஞாபகத்தில் க்ஷவரம் பண்ணிக்கொள்ளும்போது அவரது கையை அசைப்பேன் வெட்டுக்காயம் ரத்தம் வரும் ஒண்ணுமே சொல்லமாட்டார். கோபமே வராது. என்னை அணைச்சு அடிக்கடி முத்தம் நிறைய கொடுத்திருக்கார். நான் தான் பிடிச்சு தள்ளி இருக்கேன். முகத்திலே மீசை தாடி குத்துது அப்பா ன்னு. கோவம் எனக்கு தான் வரும். சிரிப்பார். ஒரு நாள் கூட நான் அவருக்கு முத்தமே கொடுத்ததில்லேடி. வெளியே போகணும்னு அவசரப்படுத்துவோம். கொட்டற மழையிலே ஓடிப்போய் தெருவிலே நிறுத்தி இருக்கிற காரை திறந்து கிளப்பி எங்கள் வீட்டு வாசல் கிட்டே வந்து நிறுத்தி நாங்க மழையிலே நனையாம வண்டியிலே ஏத்திக்குவாரு. நடுராத்திரி ஆனாலும் கூட எங்களுக்கு யாருக்காவது உடம்பு சரியில்லே னா முகத்திலே கவலை ஏறிடும். கதவை தட்டி டாக்டர் டிஸ்பென்சரி, மருந்துக்கடை எங்கேயோ போய் மருந்து மாத்திரை வாங்கி மூணுவேளை மறக்காம சோம்பலில்லாம எங்களுக்கு கொடுப்பாரு.

எங்கப்பா கூட அப்படிப்பட்டவர் தான் பிரேமா. வீட்டிலே நிறைய ஆல்பம் ஆல்பமாக எங்க போட்டோ ஆனா ஒண்ணுலே கூட அவரைக்காணோம். அவர் தானே எடுத்தது. அவர் எப்படி இருப்பாரு. அவரு உலகமே நாங்க தான்.

நான் எல்லாரையும் பாக்கும்போது எங்கப்பா போல் ஒருத்தரும் இல்லைன்னு தான் தோணும். வேறே யாரையும் நான் அப்படி, அவ்வளவு பாசமா, நேசிச்சது இல்லை பிரேமா.

''நான் அவரோடு நிறைய நடந்திருக்கேன். வழியெல்லாம் எனக்கு நல்ல நண்பனா,எனக்கு எது தேவை எது தெரியணும்னு எடுத்து சொல்லி, எனக்கு எல்லாம் வாங்கி கொடுத்து, எனக்கு படிப்பு சொல்லிக்கொடுத்ததே எங்கப்பா தான் பிரேமா, வாழ்க்கையிலே அவர் தான் எனக்கு கண்ணை திறந்து விட்டவர்னு நிச்சயமா சொல்வேன். அப்படி ஒரு அப்பா எனக்கு ''

ம்ம். ஆமாம் சரசா, வாழ்க்கையை ஒரு பாடமா எனக்கு சொல்லிக்கொடுத்தவர் எங்கப்பா.நீதான் செல்லம் எனக்கு இந்த உலகத்திலே அழகானவள், எனக்கு கிடைச்ச அபூர்வ புதையல் என்பார் வாய்க்கு வாய்''

"இவளவு வயசிலும் என்னிக்கும் நான் அவருக்கு குட்டிம்மா தான், நான் கோவிச்சுக்குவேன். அப்படி எல்லாம் கூப்பிட்டு என்னை அவமானப்படுத்தாதீங்கன்னு சரின்னு வாறு. ஆனா மறுபடியும் குட்டிமா தான்.

''அப்பான்னு ஒரு ஜீவன் எவ்வளவோ உசத்தியானது என்று தெரியுது பார்த்தியா. நூறு வாத்யார் கிட்டே படிக்கிறது ஒரு அப்பா கிட்டே தெரிஞ்சுக்கலாம் என்கிறது ரொம்ப சரி பிரேமா'

அப்பாக்கும் அம்மாக்கும் வித்யாசம் இருக்கு. அம்மா மாதிரி பிறக்கவில்லை அப்பாக்கள். வளர்ந்த ஆண்கள் அப்பாக்கள் ஆகிறார்கள். எண்ணற்ற தியாகம், பொறுமை, கடமை, உண்மையான பாசம், உணர்ச்சிகளை வெளிக்காட்டாத தன்மை, குறைந்த பேச்சு. அப்பாவுடைய சாமுத்திரிகா லக்ஷணம் என்று காமாக்ஷி டீச்சர் ஒருநாள் சொன்னாங்களே அது ரொம்ப கரெக்ட்.

" நாம்ப இந்த மாதிரி அப்பாவுக்கு பெண்ணோ பிள்ளையோ, பெருமைப்பட்டா மட்டும் போதாது. அவரைப்போல் நடந்துக்கணும். நாம்ப அப்பதான் நாம அப்பாவுக்கு குடுக்கிற அந்த பட்டத்தை நம்முடைய குழந்தைகள், வாரிசுகளிடமிருந்து பெற முடியும். என்ன சொல்றே சரசா?

''எங்கேயோ படிச்சேன் பிரேமா, ஒவ்வொரு பெண்ணும் முதலில் பார்க்கிற பழகிய ஆண் அப்பா தான். அவரை தான் ஆம்பளைங்க என்றால் என்ன, அவங்க எப்படி இருப்பாங்க என்று பெண்கள் புரிந்து கொள்ளும்.''

அப்பாவை முகத்துக்கு நேரே நாம் புகழறது இல்லே. அம்மா அளவுக்கு அப்பாவிடம் நெருக்கம் இல்லை. பயமா, மதிப்பா? தெரியவில்லை. ஆனால் நாம் வளர்றதுக்கு, வளர்ந்ததுக்கு குழந்தைப்பருவத்தில் முக்கிய காரணம் அப்பாக்கள் தான். அப்பாக்களுக்கு அவர்கள் சேவை தரும் ப்ரோமோஷன் தான் தாத்தா உத்யோகம்''

"என் அப்பா, என் நண்பா, என்னை வழிநடத்திய என் ஆசானே, குருவே, உன் ஆசிகள் எப்போதும் எனக்கு தேவை''



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...