Sunday, June 10, 2018

geetanjali




ரபீந்திரநாத் தாகூர்   --     ஜே.கே சிவன் 
                                                     
                                    கீதாஞ்சலி 

Let only that little be left of me whereby I may name thee my all.
Let only that little be left of my will whereby I may feel thee on every side, and come to thee in everything, and offer to thee my love every moment.
Let only that little be left of me whereby I may never hide thee.


சிலர் எதையுமே சுருங்கச்  சொல்லி புரிய வைப்பார்கள்.  பெரிய பெரிய விஷயங்களை கூட  சுருக்கமாக  தெளிவாக புரியும்படியாக சொல்வார்கள்.  சிலர்   சாதாரணமாக  ராமன் தென்னை மரத்தில் ஏறினான் என்பதை கூட கொஞ்சமும் புரியாமல் சொல்ல கூடிய வித்தகர்கள்.  நான் ரெண்டாவது ரகமாக இருப்பின்  கிருஷ்ணன் என்னை மன்னிக்கட்டும்.  நான் எடுத்துக்கொண்ட  விஷயம் அப்படி.    ரபீந்திரநாத் தாகூரின்  கீதாஞ்சலி கொஞ்சம் மண்டையை கசக்கிக் கொண்டால் மட்டுமே புரியக்கூடியது. புரிய வைக்க  என் சாமர்த்தியம் பயனளிக்கிறதா என்று படிப்பவர்கள் நீங்கள் தான் சொல்லவேண்டும். 

 கிருஷ்ணா, என்னை முழுதுமாக  கரைத்து விடு  துளியூண்டு  விட்டு வை.   அந்த துளியூண்டு நீயாக இரு.   அப்புறம் பார்  நான்  விஸ்வரூபம் எடுத்து  நான் முழுமையிலும்  நீயே என்று மார் தட்டி சொல்கிறேன். 

''என் எண்ணங்கள் , தீர்மானங்கள், முடிவுகள் எல்லாவற்றையுமே  குறைத்துவிட்டு  துளியூண்டு மட்டுமே  வை. அது உன் பற்றிய சிந்தனையாகவே இருக்கட்டும்.  அப்புறம்  பார்  நான் உன்னையே  எங்கும் எதிலும் காண்பவனாகிவிடுவேன். என் செயல் எல்லாவற்றிலும் நீயாகவே இருப்பேன்;   உன்னையே  எதிலும்   நாடுபவனாகிவிடுவேன். ஒவ்வொரு கணமும் என் அன்பை உன்மேல் கொட்டுபவனாவேன்;  என்னை துளியூண்டு மட்டுமாக்கி  எல்லாவற்றையும்  எடுத்து விடு.  அப்போது தான் .  உன்னை நான்  என்னில்  மறைக்க முடியாது. என்னிடம் எது மிஞ்சி இருக்கிறதோ அது நீ மட்டுமே எனத் தெரியவரும்.


Let only that little of my fetters be left whereby I am bound with thy will, and thy purpose is carried out in my life---and that is the fetter of thy love.

என்னைப்பார்த்தாயா,   எத்தனை சங்கிலிகள் என்னை பிணைத்திருக்கின்றன. நான்  ஓடாமல் இருக்க ஒரே ஒரு  சங்கிலி போதுமே. மற்றவைகளை விலக்கிவிடு.  அதன் மூலம் நான் உன் கட்டுப்பாட்டில் கொஞ்சம் உலவ  முடியும்.  என் வாழ்வின்  காரணம் வெளிப்படும். அந்த ஒரு   துளி,  ஒரு சங்கிலி  நீ  என் மேல் வைத்துள்ள  பேரன்பு  என்பது  எனக்கும் உலகத்துக்கும் தெரியவரும்.

____________

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...