Tuesday, June 5, 2018

GITANJALI



ரபீந்திரநாத் தாகூர் -- J.K. SIVAN கீதாஞ்சலி By all means they try to hold me secure who love me in this world. But it is otherwise with thy love which is greater than theirs, and thou keepest me free. Lest I forget them they never venture to leave me alone. But day passes by after day and thou art not seen. If I call not thee in my prayers, if I keep not thee in my heart, thy love for me still waits for my love. இதை நினைத்து பார்க்கும்போது நான் எவ்வளவு உனக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என்று தெரிகிறது. எல்லாவிதத்திலும் என்னை சேர்ந்தவர்கள், என் மீது பந்தம் பாசம் நேசம் எல்லாம் கொண்டவர்கள், என்னென்ன காரணத்துக்காகவோ என்னை விரும்பியவர்கள் என்னை தங்கள் பக்கம் கெட்டியாக இழுத்துக்கொண்டு விட்டார்கள். பிடித்து வைத்துக் கொண்டார்கள். ஆனால் நான் செய்த புண்யம் எனக்கு என் மீது அன்பு, இருந்ததால் நான் பிழைத்தேன். நீ என்னை எல்லா பந்தங்களிலிருந்தும் அகற்றி விட்டாய். என்னை சுதந்திரமாக உலவவிட்டாய். நீ என்னிடம் வைத்துள்ள பாசம், நேசம் மற்றவர்கள் என் மேல் வைத்ததைவிட எத்தனையோ மடங்கு பெரியது. அதிகம். நான் சொன்ன அத்தனை பந்தங்களும் என்னை தனியாக விடுவதாகவே இல்லை. அவர்களை என்னால் மறக்க முடியவில்லையா அவர்களால் என்னை மறக்கமுடியவில்லையா? . காலம் நகர நகர உன்னை என்னால் காண முடியாவிட்டாலும் நான் உன்னை பிரார்த்திக்காவிட்டாலும், உன்னை என் மனதில் நிலையாக நிறுத்திக் கொள்ளாவிட்டாலும் நீ எவ்வளவு பொறுமையாக ஒருநாள் நான் உன் மேல் பக்தியும் அன்பும் கொள்வேன் என்று காத்திருக்கிறாய்!!! ++ When it was day they came into my house and said, `We shall only take the smallest room here.' They said, `We shall help you in the worship of your God and humbly accept only our own share in his grace'; and then they took their seat in a corner and they sat quiet and meek. But in the darkness of night I find they break into my sacred shrine, strong and turbulent, and snatch with unholy greed the offerings from God's altar. அது ஒரு பகல் பொழுது. திபுதிபு என்று யாரோ சில என் வீட்டுக்குள் நுழைந்தார்கள். சுற்றி முற்றி பார்த்துவிட்டு ''அதோ இருக்கிறதே அந்த சிறிய அறையை மட்டும் நாங்கள் எடுத்துக் கொள்கிறோம்'' என்கிறார்கள் என்னிடம். '' நாங்கள் உங்களுக்கு நீங்கள் எந்த தெய்வத்தை விரும்புகிறீர்களோ அதனைத் தொழ, வழிபட உதவுகிறோம். ஏதோ அவன் அருளால், இதை எங்கள் பங்காக செயகிறோம். . அவன் அருளால் இதை ஏற்றுக்கொள்ளுங்கள்'' இப்படிச் சொல்லிவிட்டு அவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?. அமைதியாக ஒரு மூலையில் சுவற்றில் சாய்ந்துகொண்டு சப்தமில்லாமல் சாதுவாக அமர்ந்து கொண்டார்கள். சரி என்று விட்டுவிட்டேன். ஆனால் என்ன நடந்தது தெரியுமா அப்புறம்? ராத்திரி இருட்டு. அவர்கள் என் ஆலயத்தை நோக்கி நடந்து பலத்தோடு, புயல் வேகத்தில் உள்ளே நுழைந்து, அந்த பக்தியற்ற நீசர்கள், என் பகவானுக்கு பக்தர்கள் அளித்த எல்லா காணிக்கைகளையும் அபகரித்துச் சென்றுவிட்டார்கள்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...