Sunday, June 3, 2018

KALABAIRAVASHTAKAM



கால பைரவாஷ்டகம் - J.K. SIVAN

மகா விஷ்ணு அலங்காரப்ரியர். பரமேஸ்வரன் அபிஷேகப்பிரியர். விபூதி , சந்தனம், பன்னீர், பழங்கள், தேன் இவற்றால் பஞ்சாமிர்தம், இளநீர், பால்;, தயிர் என்று சதா ஜலதாரையுடன் இருக்கும் சிவனுக்கு அபிஷேகம் செய்தால் , அவர் மூர்த்தி குளிர்ந்து மனம் நமக்கு குளிரும். வாரிக்கொடுக்கும் வள்ளல். வரம் தருவதில் அவருக்கு இணை எவரும் இல்லை. சிவனின் அம்சமான பைரவருக்கு சந்தன அபிஷேகம் மிகவும் உகந்தது. புனுகு, அரகஜா, ஜவ்வாது, கஸ்தூரி, கோரோசனை, குங்குமப்பூ. பச்சை கற்பூரம் ஆகியவையும் அபிசேகத்தில் சேர்த்துக்கொள்வார்கள்.

எல்லா அஷ்டமிகளிலும் பைரவருக்காக விரதம் இருப்பார்கள். செவ்வாய்க்கிழமை அன்று வரும் அஷ்டமி விசேஷம்.

காசியில் காலபைரவருக்கு எட்டு இடங்களில் கோயில்கள் .காசிக்கு பைரவ க்ஷேத்ரம் என்று பெயர்.

குத்தாலம் – மயிலாடுதுறை வழியில் க்ஷேத்திரபாலக புரம் என்ற கிராமத்தில் காலபைரவுக்கு பிரத்யேகமாக ஒரு ஆலயம் இந்தியாவிலிலே ஒரே தனிக் கோவில். நாகப்பட்டினம் ஜில்லாவில் சீர்காழியில் சட்டநாதருடன் எட்டு பைரவர்கள் உண்டு. திருச்சி உறையூர் பாதையில் ஜெயகாளிகாம்பாள் கோயிலில் அஷ்ட பைரவர்கள் பைரவிகள் வாகனங்களோடு. மற்றும் வாகனங்களுடன் காட்சியளிக்கின்றனர்.

கோயம்புத்தூர் நஞசுண்டாபுரத்தில் காயாந்தஸ்தானம் மயானம் அருகே எட்டடி உயர காலபைரவர் வீற்றிருக்கிறாராம். சென்று தரிசிக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை..

காஞ்சிபுரம் திருமாகறல் எனும் கிராமத்தில் அர்த்தநாரி பைரவர் இருக்கிறார். .

சசமீபத்தில் நண்பர் ஒருவரோடு விழுப்புரம் ,சின்னசேலம் அருகில் ஆறகளுர் என்ற பழைய கிராமத்தில் ஒரு அருமையான சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த ஆயிர வருஷ கோவில் ஒன்றில் பெரியநாயகி சமேத காமநாதீசுவரர் தரிசனம் செய்யும்போது அங்கே அற்புதமான அஷ்ட பைரவர்கள் அருள்பாலித்தனர் .

காலம் யாருக்காகவும் காத்து நிற்பதல்ல. ஓடிக்கொண்டே இருப்பதே காலம். அதன் ஒட்டத்தில் நாமும் கடத்திச் செல்லப்படுகிறோம். ஒவ்வொரு நிமிஷத்தையும் நாம் அதனால்நமது உலக வாழ்வை பயனுள்ளதாக மாற்றிக்கொள்ள காலபைரவரை வணங்குகிறோம். கால பைரவர் என்று நாம் சொல்லும்போதே அவர் காலத்தை கடக்க நமக்கு வழி காட்டுபவர் என்ற அர்த்தம் கிடைக்கிறது. காலத்தை வெல்லும சக்தி கொண்டவர் கால பைரவர்.. அவர் சிவ பெருமானே. காலனுக்கே காலனானவர் அல்லவா.

காலபைரவரை க்ஷேத்திர பாலகன் என்று சொல்வதுண்டு. கோவில்களை மூடுவதற்கு முன்பு சாவிகளை அவர் ந்நிதியில் வைத்து விட்டு தான் கதவு சாத்துவது வழக்கம். அதேபோல் காலை அவர் சந்நிதியில் வைத்து சாவி வாங்கிக்கொண்டு தான் கதவுகளை திறப்பார்கள்.

நமது முன்னோர்கள் எங்கு பயணம் போகும் போதும் இரவுப் பிரயாணம் செல்லும்போதும் நிறைய முந்திரிபருப்புகளை மாலையாக்கி காலை பைரவருக்கு அணிவித்து வணங்குவார்கள். ஜோதி விளக்குகள் ஏற்றுவார்கள். காலபைரவா எங்கள் பயணம் நிர்பயமாக நிறைவேற உன் அருள் வேண்டும் என்று வேண்டிக்கொள்வார்கள்.



தொடரும்

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...