Saturday, June 23, 2018

SWAMI DESIKAN



சுவாமி தேசிகன்   J.K. SIVAN 

அடைக்கலப்பத்து
                                                       

சுவாமி தேசிகனின்  அடைக்கலப்பத்து எனும்  பத்து பாசுரங்களை தொட்டு அவற்றை உங்களுக்கு பரிமாறி அது இந்த கட்டுரையோடு நிறைவு பெறுகிறது என்று வேண்டுமானால் சொல்லலாமே  தவிர சுவாமி தேசிகனைப் பற்றி இவ்வளவு தான் விஷயம் என்று ஒருவராலும் ஒரு வாழ்நாளில் கூற முடியாது.  அந்த மஹான் ஒரு  யுக புருஷர். அவரைப் பற்றி முடிந்தபோதெல்லாம் உங்களோடு  பகிர்வேன் என்று உறுதி யாக சொல்கிறேன். இது ஒரு அரசியல்வாதியின்  தேர்தல் வாக்குறுதி இல்லை சார்.

ஒரு ஆமை  தன்னை  ஆசனமாக  தேசிகனை ஏற்றுக்கொள்ள சொல்லி அவர்  மறுத்து, பிறகு வரதராஜன் நீ ஏற்றுக்கொள் என்று வற்புறுத்தி அந்த ஆமையை தேடும்போது அது ஒரு கற்சிலையாக மாறியிருந்தது. அந்த கூர்மாசனத்தின் மீது அமர்ந்து தேசிகன் த்யானம் செய்தார், பெருமாளை வழிபட்டார் என்று அறிந்தான். அந்த  கூர்மாசன கல்லை 1929ல் சத்யகலம் ஆலயத்தில் ஸ்தாபிக்க ஸ்ரீ அபினவ ரங்கநாத சுவாமி  எனும்  பரகால மட ஜீயர் பொறுப்பேற்றார்.   சத்யகலம் ஆலயம் ஒன்றில் தான் தேசிகன் நின்று கொண்டிருக்கிற விக்ரஹம்.  மற்றெங்கும் அமர்ந்துகொண்டிருப்பவர். இடது கையில் சூரி எழுதிய  ச்ருதப்ரகாசிகா ஸ்ரீ பாஷ்ய உரை. மைசூரிலிருந்து  70 கி.மீ.  சத்தியகலம். 

இனி அடைக்கலப்பத்து  பத்தாவது நிறைவு பாசுரம்; 

''திருமகளும், திருவடிவும், திருவருளும், தெள் அறிவும்,
அறுமை இலாமையும் உறவும், அளப்பரிய அடி அரசும்,
கருமம் அழிப்பளிப்மைப்பும், கலக்கம் இலா வகை நின்ற,
அருள் வரதர் நிலை இலக்கில், அம்பென நான் அமிழ்ந்தேனே ||10|''

Thirumagalum, thiruvadivum, thiruvarulum, thellarivum,
Marumai ilamayum uravum, alappariya vadivarasum,
Karumam azhippu alippu amaippum, kalakkam ilaa vagai nindra,
Arul varadar nilai ilakkil, ambena naan amizhndene.  ||10||

சர்வ அழகும் சௌந்தர்யமும்  சௌலப்யமும் போதாது என்று  சங்கநிதி பதுமநிதி போன்ற அளவற்ற செல்வங்களுக்கு  அதிபதியாக விளங்கும்   திரு மகள்  ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஹரிபக்தர்களுக்கு  எளிதில் அருள்பவள்.  ஸ்ருஷ்டி ஸ்திதி சம்ஹார  கார்யங்களோடு   இணைந்தவள்.  அப்படிப்பட்ட  ஸ்ரீ லக்ஷ்மியை மார்பில் தரித்த  ஸ்ரீ  வரதராஜன் என் மீது கருணை கொண்டு  அருள்பவன். அவனை அடைந்து  அவனோடு ஒன்றிட  வில்லிலிருந்து  புறப்பட்ட அம்பு போல் என் மனம்  விரைகிறது. அவனைச் சரணடைய அவன் தாள்களில்  விழுந்து வணங்குகிறேன்.''

''ஆறு பயன் வேறில்லா, அடியவர்கள் அனைவர்க்கும்,
ஆறும் அதன் பயனும் இவை, ஒரு காலும் பலகாலும்,
ஆறு பயன் எனவே கண்டு, அருள் ஆளர் அடியினை மேல்,
கூறிய நற்குண உரைகள், இவை பத்தும் கோதிலவே ||11||

Aaru payan verilla, adiyavarkal anaivarukkum,
Arum athan payanum ivai, oru kaalum pala kaalum,
Aaru payan yenave kandu, arul aalar adiyinai mel,
Kooriya narkunai uraigal, ivai Patthum kothilave.  ||11||

எல்லா ஸ்தோத்ரங்களுக்கும் கடைசியில் ஒரு பலச்ருதி உண்டு.  இந்த ஸ்தோத்திரம், மந்திரம், பாசுரம்  நீ மனமுவந்து நீ ஜெபித்தால்  உனக்கு கைமேல் பலன் கிடைக்கும் என்று சொல்வதோடு  என்னென்ன பலன் கிடைக்கும் என்றும் சொல்வது தான் பலச்ருதி.
இந்த அடைக்கல பத்து  போதுமே. வேறென்னவேண்டும்  பரமனை அடைய.   இதோ நான் இந்த பத்து ஸ்லோகங்களை சொல்லி வரதன் முன் நின்றேன். அவன் திருவடிகளை  அடைந்தேனே . சுருக்கமாக சொல்ல வேண்டுமானால்  பெருமாள் விஷ்ணுவே தான்  ''உபாயம்'' அதாவது  அவனை அடைய வழி,  கடைசியில் அந்த வழியில் நாம் அடைவதும் அவனையே (உபேயம்)

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...