Thursday, June 7, 2018

adaikalapaththu



சுவாமி தேசிகன்    J.K. SIVAN 
              அடைக்கலப்பத்து      பாசுரம்  6 


சுவாமி தேசிகனின் அடைக்கல  பத்து எனும் சரணாகதி பற்றிய பாசுரங்கள் அவரது  இரு மொழி பாண்டித்யத்தை வெளிப்படுத்தும் உதாரணம் என்று கொள்ளலாம்.  வடமொழியிலும், தேன் மொழி யான,  தென்மொழி தமிழ் இரண்டிலுமே  அற்புதமாக தனது  எண்ணங்களை, கருத்துகளை கூறக்கூடிய  திறமை சுவாமி தேசிகனுக்கு இருந்தது.  
இதில் ஆறுவிதமான சரணாகதி முறைகள் சொல்லப்பட்டிருக்கிறதை கவனிக்க வேண்டும்.

அனுகூல்ய சங்கல்பத்தை தான்  உய்க்கும் அவை உகந்து என்கிறார்.
பிரதிகூல்ய வர்ஜனம்   -  இதை  ''உகவா அனைத்தும் ஒழிந்து''  என்கிறார் 
மஹா விஸ்வாசம் -  ''உறவு குண மிக, துணிவு பெற உணர்ந்து''  இதை தான் குறிக்கிறது 
கோப்த்ரேவ வரனம் --  இதை  வியன் காவலன் என வரித்து என்கிறார்.
கார்ப்பண்யம் -  ஜகத்தில் ஒரு புகல் இல்லா  தவம் அறியேன்.   கிருபை இல்லையே  என ஏங்குகிறார்.
ஆத்மநிக்ஷேபம்  – கச்சி நகர் கருணை நாதனை நான் அடைக்கலமாய்  அடைந்தேனே ''  என்கிறார். 

பகவானுக்குள்ள  ஆறு  (ஷத்) குணங்கள்  ஞானம், சக்தி, வீர்யம், பலம், ஐஸ்வர்யம், தேஜஸ் என்பன. இவற்றையே   அவர் வெளிப்படுத்தும்  குணங்களாக நாம் அறிகிறோம்.  அவை தான்  காருண்யம் (கருணை), வாத்சல்யம் (அன்பு, நேசம் ),  சௌசீல்யம் (உயர்ந்த சீலம் ) சௌலப்யம்  (சுலபமாக எளிதில் அடைய முடிவது). காருண்யம் எனும் கருணை இல்லாவிட்டால் மற்றவை பெரிதாக பயன் தராதே.  அதனால் தான் பகவான் கருணை மிக்கவனாக  தயாபரனாக அருள்கிறான்.  எதிரிகளுக்கும் கருணை காட்டி  அருளியவன். ஞாபகம் இருக்கிறதா,  இப்படித்தானே அவன்   ராவணன், காகாசுரன், சிசுபாலன்  ஆகியோரிடம்  தயாளனாக இருந்து நிறைய சந்தர்ப்பங்கள் கொடுத்து பிறகு கடைசியில் தண்டிக்க  நேரிட்டது.

Pasuram 6

அளவுடையார் அடைந்தார்க்கும், அதன் உரையே கொண்டவர்க்கும்,
வளவுரை தந்தவன் அருளே, மன்னிய மாதவத்தோர்க்கும்,
களவொழிவார் எமர் என்ன, இசைந்தவர்க்கும் காவலராம்,
துளவ முடி அருள் வரதர், துவக்கில் எனை வைத்தேனே ||6||

Alavudayar adaintharkkum, athan uraye kondavarkkum,
Valavurai thandhavan arule, manniya mathavathorkkum,
Kalavozhivaar amar yena, isainthavarkkum kavalaraam,
Thulava mudi arul varadar, thuvakkil yenai vaithene.  ||6||
மிக முக்கியமாக கவனியுங்கள்.  இந்த பாசுரத்தில்  சுவாமி தேசிகன்  நான்கு சரணாகதி அடையும் (ப்ரபத்தி)  உபாயங்களை கூறுகிறார். 

சிறந்த ஞானம் கொண்டவர்கள்  தானாகவே ப்ரபத்தி செயது பயனடைவார்கள்  இதையே  ஸ்வ நிஷ்டை என்பார்கள். ஆழ்வார்கள், போற்றுதற்குரிய  ஆசார்யர்கள் இதற்கு உதாரணம்.  

சிலர்  ஆசார்யன், என்னும் குரு மார்க்கமாக ப்ரபத்தி பெறுவார்கள். வேத சாஸ்திர  நூல்கள் சொல்லும் வகையில், சரணாகதி மஹிமையை அறிந்து அதை பின்பற்றுபவர்கள். இத்தகைய சரணாகதி  உக்தி நிஷ்டை எனப்படும்.   இவர்களை முமுக்ஷு என்பார்கள். 

சிலருக்காக  குருவே  ப்ரபத்தி செய்வார்.  அதுவே  ஆசார்ய நிஷ்டை. மோக்ஷத்தை நாடும் முமுக்ஷுக்களுக்கு ஆசார்யன் பெற்று தரும் ப்ரபத்தி.

மற்றும் சிலர் என்ன செயகிறார்கள் தெரியுமா?  மகா  பக்தர்கள் எவ்வாறு  பரமனை சரணாகதி செயது, பிரபத்தி புண்யம் பெற்றார்கள் என்று அறிந்து  அவர்களை போற்றி பணிபவர்கள்.  ஆத்மா எனும் தான், பகவானின் அடிமை, அவனது உடைமை, என்று உணர்ந்தவர்கள். இப்படிப்பட்ட பக்தர்களை பரமனும் பெரிதும் நேசிக்கிறான். இப்படிப்பட்ட மஹா பக்தர்களின் சத்சங்கத்தில் இருப்பவர்கள் அதனால் அடையும் பலனைத்தான்   பாகவத நிஷ்டை என்று கூறுகிறார்  சுவாமி தேசிகன். உதாரணமாக  கூறத்தாழவனோடு சத்சங்கத்தில் இருந்தவர்கள், விபீஷணனோடு கூடி இருந்தவர்கள் தாமும் முக்தி பெற்றது போல. 

ஆகவே தான் இந்த பாசுர முடிவில் துளசி மாலை அணிந்த அந்த காஞ்சி அத்திகிரி வரதன் தன்னை  இந்த நாலு வழியிலும் சரணடைந்தோர்க் கெல்லாம் முக்தி தருபவன். நானும் அதனால் அவனை சரணடைந்தேன் என்கிறார்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...