Wednesday, June 27, 2018

KUDHAMBAI SITHTHAR



           காயமே இது பொய்யடா... J.K. SIVAN

குதம்பை சித்தர்  ஒரு அற்புத சித்தர்.  மிக எளிமையாகவே  ஆழமான தத்துவங்களை சொல்வது ரொம்ப பிடிக்கிறது. எனக்கு மட்டுமா?  இன்று சில குதம்பை சித்தர் பாடல்களை பார்ப்போம். அநேகமாக  அவை எல்லாமே அநித்யமான  அழியும் இந்த தேகத்தை பற்றி தான் வருகிறது. என்ன செய்வது. நேற்று தான் ஒருவர  துபாயிலிருந்து ''இந்தாங்கோ சார் உங்களுக்கு  விலையுயர்ந்த சென்ட்  என்று ஒரு சின்ன பாட்டிலை கையில் அழுத்தினார் ?  ஒரு கையில் சென்ட் பாட்டில். இன்னொரு கையில் குதம்பை சித்தர் பாடல்கள்.  எப்படி இருக்கும்?  ''டிங்கிரி டிங்காலே,      சக்கனி ராஜமார்க்கமு ''  ரெண்டையும்  ஒரே சமயம் கேட்பது போல் இருக்காதா?

பேசரு நாற்றம் பெருகும் உடலுக்கு
     வாசனை ஏதுக்கடி குதம்பாய்
     வாசனை ஏதுக்கடி.62

அடியே பெண்ணே,  யோசித்து பாரேன்.  இதோ இன்னிக்கோ, என்னிக்கோ என்று இருக்கும் இந்த உடலுக்கு  எதற்காக  சென்ட் பாட்டில்?

துற்கந்த மாய்மலம் சோரும் உடலுக்கு
     நற்கந்த மேதுக்கடி குதம்பாய்
     நற்கந்த மேதுக்கடி.63

ஏற்கனவே தான் நிறைய அப்பி இருக்கிறதே,.  துர்கந்த வாசனை.  எவ்வளவோ வாசனையாக சந்தனம், புனுகு, சவாது, சென்ட் போட்டாலும்   ஒரு  ரெண்டு நாள் தாங்குமா இந்த உடல்.  இதற்கு எதற்கடி  சென்ட் வாசனை எல்லாம். எட்டூருக்கு நாறுகிறதே.

நீச்சுக் கவுச்சது நீங்கா மெய்க்கு மஞ்சள்
     பூச்சுத்தான் ஏதுக்கடி குதம்பாய்
     பூச்சுத்தான் ஏதுக்கடி.

மஞ்சள் ஒரு மூலிகை. அதை பூசிக்குளிக்க வேண்டும் பெண்கள் என்று ஒரு பழக்கம் இருந்தது. இப்போ  யார் வீட்டில் மஞ்சள் அரைத்து குளிக்கிறார்கள்.  குளக்கரைகளில் படித்துறைகள் மஞ்சள் அரைத்த கரை நீங்கி விட்டதே.  வேண்டாம் தேவையில்லை இந்த உடலுக்கு எதுவும்  என்ற சித்தர் சொல்லும் ஞானமோ?

சேலை மினுக்கதும் செம்பொன் மினுக்கதும்
     மேலை மினுக்காமடி குதம்பாய்
     மேலை மினுக்காமடி.65

பளபள ஆட்டு ஜரிகை சேலை மினுக்கிறது. பட்டை பட்டையாக தங்க ஆபரணம் கழுத்தில் மூக்கில், காதில் கண்ணை கூசுது. வெளியே இதனால் என்ன பயன். உள்ளே ஆத்ம ஒளி அல்லவோ மின்னவேண்டும். இதெல்லாம் என்ன பயன்?

பீ வாச முள்ளவள் பீறலு உடம்புக்குப்
     பூவாச மேதுக்கடி குதம்பாய்
     பூவாச மேதுக்கடி.66

அர்த்தம் வேண்டாம்.  அருவருப்பான உடல் பற்றி சொல்கிறாரே. இதற்கு மேலுமா ஒருவர் அழுத்தி சொல்லமுடியும். அப்படியம்  உரைக்க விலையென்றால்.........!!

போராட்டஞ் செய்து புழுத்த வுடம்பிற்கு
     நீராட்டம் ஏதுக்கடி குதம்பாய்
     நீராட்டம் ஏதுக்கடி.67

இப்போதெல்லாம்  போராட்டத்தில் கலந்து கொள்வது காசுக்கு தான்.  எவ்வளவு நேரம் என்ன கத்தவேண்டும். அதற்கு எவ்வளவு ?  அப்புறம் போய் குளித்தால் மட்டும் இந்த அசிங்கம் போய்விடுமா?

காகம் கழுகு களித்துண்ணும் மேனிக்கு
     வாகனம் ஏதுக்கடி குதம்பாய்
     வாகனம் ஏதுக்கடி.69
 
கோபாலசாமி  40 லக்ஷம் ரூபாய் கார் வாங்கி  பெருமையாக சவாரி செய்வான் தெரியுமா?  இப்போது என்னாச்சு?  பச்சை மூங்கிலுக்கு அவ்வளவு விலையா?

கோவணத் தோடே கொளுத்தும் உடலுக்குப்
     பூவணை ஏதுக்கடி குதம்பாய்
     பூவணை ஏதுக்கடி.70

அற்புதம் . கோவண ஸ்லோகங்கள் ஆதிசங்கரர் ஐந்து எழுதி அதை ரசித்து ருசித்து எழுதினேன் படித்தீர்களா. கௌபீன பஞ்சகம்???  இன்னொரு தடவை அதை எழுதினால் படிக்கிறீர்களா?


 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...