Wednesday, June 20, 2018

SURI NAGAMMA 2


BAGAVAN  RAMANA MAHARSHI

''ஒரு தெலுங்கு பக்தை சொல்கிறாள்''- 2 J.K. SIVAN இன்றும் நிறைய பேர் பகவானை தரிசிக்க வந்தார்கள். வெயில் சுள்ளென்று உரைத்தது. மரங்கள் நிறைய சூழ்ந்திருந்ததால் வெப்பம் அவ்வளவாக தெரியவில்லை. காற்று கலைத்தது. மற்ற பக்தர்கள் அருகே விஸ்வநாதனும் அமர்ந்து இருந்தார். பகவான் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தவருக்கு ஒரு கிழ விதவை ஞாபகம் வந்தது போல் இருக்கிறது. ''.............. கீழூர் அக்ரஹாரத்திலே (முத்து கிருஷ்ண பாகவதர் தங்கை) .. .... அந்த வயசானவள் எனக்கு திருப்தியா அன்போடு சாதம் போட்டாள் . பகவானுக்கு நைவேத்தியம் பண்ணின பக்ஷணங்கள் கட்டி கொடுத்தாள் .''இந்தாடா குழந்தே, வச்சுக்கோ, ஜாக்கிரதை. வழியிலே தின்னுண்டே போ ''. அப்புறம் நான் விருபாக்ஷ குகையிலே இருந்தப்போ ரெண்டு தடவை வந்து பார்த்தாள் '' என்னடா பயலே, தங்க விக்ரஹமாட்டம் இருக்கியே. உடம்பிலே சுத்த கூட துணி இல்லையே'' அப்படின்னா''. . பகவான் இதை சொல்லும் போது அந்த மூதாட்டியின் தாய்ப்பாசம் அவரிடமும் தொனித்தது. குரல் தழுதழுத்தது. ஞானிகளின் மனம் வெண்ணை போல். உருகக்கூடியது. பக்தியிலிருந்து தான் ஞானம் பிறக்கிறது. பகவான் அருணாச்சல புராணம் சொல்லும்போது அம்பாளை பற்றி கவுதமர் போற்றும் இடம் வந்தது. பகவான் கண்களில் ஆறாக கண்ணீர் பெருகியது. நா குழறியது. புராணத்தை கீழே வைத்துவிட்டார். மௌனம். பிரேமை, அன்பு, பக்தி நிறைந்த விஷயங்களை பற்றி பேசும்போது பகவான் உணர்ச்சி வசமாகிவிடுவார். ப்ரேமையும் பக்தியும் தான் ஞானம். ஒரு வாரத்திற்கு முன்பு ஹிந்து சுந்தரி என்கிற பத்திரிகையில் ஒரு கதை. தாயக்கட்டை என்று. ஸ்கந்த புராணத்தில் ஒரு சம்பவம் பற்றி. கலக மூட்டும் நாரதரிடம் சிவனும் பார்வதியும் கூட மாட்டிக்கொள்வது பற்றி. அமைதியாக இருந்த சிவன் உமையிடம் நாரதர் ''என்ன நீங்கள் இருவரும் சும்மா இருக்கிறீர்கள். அங்கே வைகுண்டத்தில் நாராயணனும் லக்ஷ்மியும் எவ்வளவு ஆனந்தமாக தாயகட்டம் ஆடுகிறார்கள். நீங்களும் விளையாடலாமே?'' ஆஹா நல்ல யோசனை நாரதா என்று சிவன் சிரிக்கிறார். சிவனும் உமையும் ஆடுகிறார்கள். சிவன் தோற்றுவிட பார்வதி பெருமிதம் அடைகிறாள். சிவன் மனம் புண்பட பேசுகிறாள் . ''இது புராணத்தில் இருக்கிறதாமே. இந்த கதை படித்திருக்கிறாயா, உனக்கு தெரியுமா ? என்று பக்திகலந்த குரலில் என்னை கேட்டார். ''இங்கே தை மாசம் சங்கராந்தி உத்சவம் நடக்குமீ. அதுவே உமைக்கும் மஹேஸ்வரனுக்கும் நிகழும் சண்டை சம்பந்தமானது தான். '' ''நீ இந்த கதை படிச்சிருக்கியா'' என்று என்னை கேட்டார் பகவான். ''ஆமாம் சுவாமி '' ' சங்கராந்தி அப்பா அம்மா கல்யாண உத்சவம் தான்'' மகாத்மாக்கள் வாழ்வில் எண்ணற்ற அபூர்வ நிகழ்ச்சிகள் நிறைந்திருக்கும். அவர்கள் முகம் அந்தந்த சந்தர்பத்திற்கேற்ப உணர்ச்சிகளை பிரதிபலிக்கும். பகவானின் முகத்தில் சகல ரசங்களையும் ஒன்று சேர்க்கும் விஞ்ஞான ரஸ உணர்வைப்பற்றி என்ன சொல்வேன்? எப்படி எழுதுவேன்? அவ்வப்போது புது திருமண தம்பதிகளை ஆசிர்வாதம் பெற அழைத்து வருவார்கள். முகமலர்ச்சியோடு அவர்களை ஆசீர்வதிப்பார். கல்யாண விஷயங்கள் கேட்பார். ஆனந்தமய குழந்தை சிரிப்பு முகத்தில் மலரும். நாம் குழந்தைகள் விளையாடும் பொம்மை கல்யாணம் பார்த்தல் சிரிப்போம் அந்தமாதிரி ஒரு சிரிப்பு ஞாபகத்துக்கு வரும். சமீபத்தில் ப்ரபாவதிக்கு கல்யாணம் ஆச்சு. ஒரு வருஷத்துக்கு முந்தி. அதுக்கு முன்னால் ரெண்டு வருஷம் இங்கே தான் இருந்தாள் .மஹாராஷ்ட்ரா தேசம். அடக்க ஒடுக்கமான அழகான பெண். மீராபாய் மாதிரி ஆகவேண்டும் என்று சொல்வாள். கல்யாணம் எல்லாம் கிடையாது என்றவள். நான் காவி உடை தரிப்பேன் என்று பகவானிடம் சொன்னவள். துடுக்கு பெண். கல்யாணம் ஆகி கணவன் மனைவி உறவினரோடு, பிரசாதம் எடுத்துக்கொண்டு பகவானை பார்க்க வந்தார்கள். ரெண்டு மூன்று நாள் ஆஸ்ரமத்தில் தங்கி அடுத்தநாள் காலை எட்டுமணி இருக்கும். கணவனோடு பகவானை அணுகி ஆசிர்வாதம் பெற வந்தாள் . எதிரே போட்டிருந்த ஓலைத் தட்டி வழியே சூரியன் ஒளி உள்ளே விழுந்தது. வழக்கமாக பகவான் உட்காரும் சோபாவில் சில அணில்கள் ஏறி இறங்கி குதித்து விளையாடின. ஆசிரமத்தில் அதிகம் பேர் இல்லை. அங்கும் இங்குமாக மயில்கள் உலாவிக்கொண்டிருந்தன. மாப்பிள்ளை பய பக்தியோடு பகவானை வணங்கினான். சற்று தள்ளி வாயில் அருகே நின்றான். ஆஸ்ரமத்தில் செல்லப்பெண்ணான பிரபா வெட்கத்தோடு, தலை குனிந்தவாறு, நாணத்தோடும் பக்தியோடும் பகவான் முன்னே அவர் அனுமதி பெற்று செல்ல தயாராக நின்றாள். சகுந்தலா துஷ்யந்தனிடம் செல்ல கண்வரிடம் அனுமதி ஆசி பெறுவதை ஞாபகப்படுத்தியது . பகவான் அவளை நோக்கி தலை ஆட்டினார். அனுமதி. அவள் மீண்டும் நமஸ்கரித்தாள். வாசலைக்கூட தாண்டவில்லை. இப்போதான் நேத்திக்கு நடந்த மாதிரி இருக்கு. சுந்தரேச அய்யர் கிட்ட இருந்து க்ரிஷ்ணாவதாரம் அத்தியாயத்தை பாகவதத்திலிருந்து காப்பி பண்ணிண்டு வந்தா. அடுத்த தடவை வரும்போது கையில் குழந்தையோடு வருவா '' பிரபா போகுமுன் அந்த கூடத்தை ப்ரதக்ஷிணம் செய்தாள். கணீரென்று குயில் போல் பாடினாள் . ''முகுந்த மாலை பாடுகிறாளே கேட்டீர்களா ?'' என்று ரிஷி கணவர்போலவே முக மலர்ச்சியோடு விடை கொடுத்தார் பகவான் ரமணர். . அவள் மீண்டும் மீண்டும் பகவானை வணங்கினாள் . சென்றாள் . என் கண்கள் பனித்தன. ஆஸ்ரமம் வாசல் வரை சென்று அவளை வழிஅனுப்பினேன். சூரி நாகம்மா எப்படி?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...