Thursday, October 13, 2022

UPANISHADH


 ஓம் சாந்தி சாந்தி சாந்தி: #நங்கநல்லூர்_J_K_SIVAN


வேதங்களின் முடிவு, அந்தம், தான் வேதாந்தம், உபநிஷதங்கள் என்று அறியப்படுபவை. பல உபநிஷதங்கள் நம்மிடம் உள்ளன. எல்லாம் வெவ்வேறு ரிஷிகள் பல காலம் தவம் இருந்து சிந்தித்து, உணர்ந்து நமக்கு அறிவித்த உயர்ந்த விஷயங்கள். மந்திரங்க ளாக ஸ்தோத்ரங்களாக வாக்கியங்களாக உள்ள அவற்றை நாம் தெரிந்து பயன் பெற வேண்டும்.

ஆயிரமாயிரம் வருஷங்களுக்கு முன்பு அச்சு இயந்திரம் உருவாகாத காலத்தில் உபதேசங்கள் அக்காலத்தில் வாயுறையாக ஒருவரிடமிருந்து மற்றவர் பெற்றது. குரு சொல்வதை திருப்பித் திருப்பி சிஷ்யர்கள் காதால் கேட்டு தாங்களும் சொல்லி மனத்தில் பாடமாக பதிந்து, பரம்பரை பரம்பரையாக சிதையாமல் காப்பாற்றப்பட்டது. இதை தான் கர்ண பரம்பரை என்கிறோம்.

எந்த உபதேசம் ஆரம்பிக்கும் முன்பும் குருவும் சிஷ்யனும் சேர்ந்து பகவானை வேண்டிக் கொள்ளும் ஒரு அற்புத மந்திர ஸ்லோகம் கிருஷ்ண யஜுர்வேத தைத்ரிய உபநிஷதத்தில் (2.2.2) இருக்கிறது:

ॐ सह नाववतु । सह नौ भुनक्तु । सह वीर्यं करवावहै । तेजस्वि नावधीतमस्तु मा विद्विषावहै । ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥

Om Saha Naav[au]-Avatu | Saha Viiryam Karavaavahai | Tejasvi Naav[au]-Adhiitam-Astu Maa Vidvissaavahai |
Om Shaantih Shaantih Shaantih ||

ஓம் ! ஸஹநாவவது । ஸஹ நௌ புநக்து । ஸஹ வீர்யம் கரவாவஹை தேஜஸ்விநாவதீதமஸ்து
மா வித்விஷாவஹை ॥ ஓம் ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி:

''டேய், சிஷ்யா, கல்வியிலும், அறிவு வளர்ச்சியிலும், நாம் ரெண்டுபேரும் சேர்ந்தே வளர்வோம். கற்றது கைம்மண்ணளவு தானே. உனக்கு குருவாக இருந்தாலும் நானும் இன்னும் ஒரு சிஷ்யன் தான், ஆகவே தான் இருவரும் அறிந்ததைப் புரிந்து கொண்டு ஆனந்திப்போம். சேர்ந்து கற்போம். நம் கடமைகளை சேர்ந்தே செய்வோம். சேர்ந்தே புத்துணர்ச்சி பெறுவோம். சேர்ந்தே சிந்திப்போம், புது உலகில் பிரவேசிப்போம். விரோதம், பொறாமை, வெறுப்பு எதுவுமே நம்மை அணுக, நெருங்க, இடம் கொடுக்கா மல் இருப்போம். அறிவு ஞானம் அது ஒன்றே தீபமாக பிரகாசிக்கட்டும். சாந்தி சாந்தி சாந்தி, பேரமைதி ப்ரம்ம ஞானம் மனதை முழுதாக நிரப்பட்டும்.

இவ்வளவு சின்ன மந்திரம், கைவல்யோபநிஷத் கிருஷ்ண யஜுர் வேதத்தை சார்ந்தது. இதில் என்ன புரிகிறது. குருவும் சிஷ்யனும் ஒன்றாகவே தம்மை கருதினார்கள். ப்ரம்மஞானத்தை அடை வதில் எல்லோரும் ஒன்றே. நான் பெரியவன் நீ சின்னவன் என்ற அகம்பாவம் காணோம். கல்விகற்கவோ கற்பிக்கவோ காசு குறுக்கிடவில்லை. கல்வியை காசுக்காக கற்றோ , காசுக்காக விற்றோ, காசுக்கு எடைபோடவோ கல்வி அப்போது இல்லை. நமது துரதிர்ஷ்டம் இப்போது வாத்யார் ரகமே தலைகீழாக மாறி விட்டது. கலிகாலத்தின் அலங்கோலம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...