Wednesday, October 5, 2022

BANANA LEAVES

 கல்பதரு -   நங்கநல்லூர்  J K  SIVAN 


வாழை என்ற  ஒரு வார்த்தை எவ்வளவு அர்த்தங்கள் பிரிவுகள் கொண்டது என்று யோசிக்கும்போது ஆச்சர்யமாக இருக்கிறது.  பகவான் நமக்கு அளித்த வரப்பிரசாதம்  வாழை. என்னென்ன வேண்டுமோ அத்தனையும் இந்த   ஒன்றினாலேயே நாம் பெற்று மகிழ்கிறோம்.  கேட்டதெல்லாம் கொடுப்பதை தான் கல்பதரு என்பார்கள்.  வாழைக்கு கல்பதரு என்று பெயர் ரொம்பவே பொருத்தம்.

வாழை-  நம்மை வாழவைக்கிறது எப்படி? ''வாழையடி வாழையென வந்த திருக்கூட்டம்'' என்று தெரியாமலா வள்ளலார் பாடினார். ஒரு வாழை கன்றை நட்டால், அது மரமாகி அடுத்து அதன்கீழேயே  இன்னொரு வாழைக்கன்று தலை தூக்கும்.  அழிவற்ற தாவரம் அது. நம் முன்னோர்க்கு நாம் சந்ததிகள், நமக்கு அப்புறம் வேறு சந்ததி போல்.

பச்சைப் பசேல் என்றால் வாழை தோட்டம் தான் கண் முன் தோன்றும். வாழையில் எத்தனையோ வகை. அவற்றுள் போனால் ஒரு வருஷம் ஆகிடும் நான் எழுதி முடிக்க.  

வாழை மரம் சுப காரியங்களுக்கு இன்றியமையாதது.  வாழைமரம் வாசலில் கட்டி தான் கல்யாணம் மற்றும் சுப காரியங்கள் ஆலயங்களில் நல்ல விசேஷங்கள் நடைபெறும்.  வாழையின் தண்டு. அவ்வளவு நல்லது உடம்புக்கு. சிறுநீரக கோளாறு, கல் எல்லாவற்றையும் வாழைத்தண்டு ஜூஸ்  போக்கும். வாழைத்தண்டு சிறந்த உணவு பதார்த்தம். கூட்டு காய் என்று என்னென்னவோ எங்கள் வீட்டில் வாழைத்தண்டை ருசிகரமாக சமைப்பார்கள்.  அதை வாழை இலையில் போட்டு சாப்பிடுவது இன்னொரு உபயோகம்.    தலைவாழை இட்டு பரிமாறுவது கௌரவம். விருந்தாளிகளுக்கு, மாப்பிள்ளைக்கு என்று அக்காலத்தில் சிறப்பான  வரவேற்பு. வாழை இலையின் உபயோகங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல.

வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.
யாருக்காவது தீப்புண் பட்டால் உடனே  வாழை இலைமேல் படுக்க வைப்பது வழக்கம்.  தீப்புண் சூட்டின் தாக்கம் குறையும்.
வாழைஇலையில் பொட்டலம் கட்டிக்கொடுத்த சாதம் கெடாமல், சுவையாக ஜம்மென்று மணமாக  இருக்கும். 
வாழை இலையில் சாப்பிடுவது சுகாதாரமும் கூட.  வாழை இலை மேல்  சின்ன குழந்தைகளை நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் தடவி வெயிலில் படுக்க விடுவார்கள். இலையின் குளுமை, சூரிய ஒளியின்  வைட்டமின் D  ரெண்டும் சேர்ந்து கிடைக்கும். சரும நோய் கிட்டவே வராது.
முன்பெல்லாம் யாருக்காவது காயம் ஏற்பட்டாலோ, புண் இருந்தாலோ, தேங்காய் எண்ணெயை துணியில் நனைத்து புண்மேல் தடவு வாழை இலையை  அதன் மேல் காட்டுவார்கள். சில நாட்களில் புண் குணமாகும்.
சின்ன அம்மை, படுக்கைப் புண்ணுக்கு  BEDSORE  வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும்.
 சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையை மருந்து போல தடவி கட்டி வைக்க வேண்டும். இதனால் ரணங்கள் சீக்கிரம் ஆறும். கிருமிகளின் தாக்கமும் இருக்காது.
வாழை மரத்தில் குருத்தை கொஞ்சம் கிளறி விட்டு (வாழை நீர் தேங்குமளவுக்கு) சீரகம் கொஞ்சம் போட்டு சின்ன வாழை இலையால் கிளறிய பகுதியை மூடி வைத்து அதில் ஊறும் நீரைப் பருகினால் பேதி, வயிற்று வலி போன்றவை நீங்கும்
இன்றைக்கு வாழை இலையை பற்றி சொல்வதற்கே இவ்வளவு இருக்கிறதே. இன்னும் கூட  வாழை உபயோகம் இருக்கிறது. அப்புறம் தான் நாம் வாழை பழம், காய், பூ பற்றி எல்லாம் அறியப்போகிறோம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...