Tuesday, October 11, 2022

ADVICE

 


அறிவுரை -   நங்கநல்லூர்  J K  SIVAN 


என் பழைய காலஞ்சென்ற நண்பன்  அட்வைஸ் அனந்தராமன் சொன்னதை என் பழைய டயரியில் எழுதி வைத்திருந்ததை இன்று பார்க்க நேர்ந்தது.  அரை நூற்றாண்டு ஓடிவிட்டாலும், அவன் சொன்னது இன்னும் உண்மையாகவே  இருக்கிறது.  சில உண்மைகள்  காலம் கடந்தவை. கிருஷ்ணன் கீதை போல.

''நல்ல விஷயங்களைச்  சொல்வதில் ஒரு சிரமம் இருக்கிறது.  அது  படிப்பவர்களை  கேட்பவர்களை  சிந்திக்க செய்யும். அதற்கு அநேகர்  தயாராக இல்லை, புரிந்து கொள்ள முயலவில்லை.  அப்படியே காற்று வாக்கில் மேம்போக்காக  படிப்பதற்கும், பார்ப்பதற்கும், கேட்பதற்கும்  டிவி வம்பு, வாட்ஸாப்ப்  கந்தல், யூட்யூப்  அக்கப்போர்  தான் பிடிக்கிறது. அது மனிதர் தப்பு இல்லை.  காலத்தின் கோளாறு.

உண்மையான சாத்தியமான வார்த்தைகள்  பேசப்படாதவை, சொல்லப்படாதவை. தானாகவே மனதில் புரிந்து அனுபவிக்க வேண்டியவை. தனிமையிலயோசித்தல் புரிபடுபவை. 

சில பேருடன் பழகாமல் இருந்தாலே  வாழ்க்கை அமைதியாக செல்லும் என்பதை சமீப  அனுபவம் உணர்த்தியது.   விஷயம் புரியாதவர்களை சகித்துக்  கொள்ளும்போது நமது  சகிப்புத் தன்மை 
பெருகுகிறது என்றும்  உணர்ந்தேன்.  

சொல்வதை, சொன்னதை,  செய்யாதவர்கள், தவறு செய்பவர்கள் மேல்  பொறுமையின்மை வருவது சகஜம்.  எதையும்  சரியாக செய்யவேண்டும்,  திட்டமிட்டபடி எல்லாம்  தக்க நேரத்தில் நடக்கவேண்டும் என்று எண்ணுபவர்களைப்  பொறுத்தவரை  இது ரொம்ப ஞாயம்.  அவர்களைப்  பார்த்து மற்றவர்களும் பின்பற்றி பயன் பெறுகிறார்கள்.

நன்றாக யோசித்து பெரியோர்களை கலந்தாலோசித்து செய்யும் காரியங்களில் தவறு குறை கண்டு பிடித்து சில அரை வேக்காடுகள்   தானாகவே  அறிவுரை கூறும்போது பொறுமை காத்து  ''நன்றி ஐயா உங்கள் கருத்துக்கு''  என்று சொல்வது தான் அறிவுடைமை.  வளராதவர்கள், வளர முடியாதவர்கள், இரவும் பகலும் உழைத்து, பாடுபட்டு,  வளர்ந்தவர்களுக்கு  ''வளர''  அறிவுரை கூறுவதும் வேடிக்கையாக இருக்கும்.  பிறர் வாழ்க்கையில் வழிமுறைகளில் அவர்கள் அனுமதியோ வேண்டுதலோ இன்றி குறுக்கிடுதல் தவறு.   தமக்கு உரிமை கிடையாது என்பதையே அறியாதவர்கள் செயல் இது.  வழி தெரியாதவன் வழிகாட்டுவது போல இது.

சிலருடன் செலவழிக்கும் நேரம் பொன்னானது. நாம் பயன் பெறுகிறோம். சிலருடன் செலவழிந்த நேரம் வாழ்க்கையில் திரும்பக் கிடைக்காத,  பொன்னான நேரத்தை மண்ணாக்கிவிடுகிறது.  இதுவும்  அனுபவம். 

அனுபவசாலிகளுடன்  அறிவுள்ளவர்களிடம்  பழகும்போது அறிவு வளர்கிறது,  நல்லவை சேர்கிறது. ஆங்கிலத்தில் ஒரு வாசகம் ஞாபகம் வருகிறது.  ''If you run with wolves, you will only learn how to howl''  ஒநாயுடன் போடுபவன் ஓலமிடத்தான் கற்றுக்கொள்வான்.  கழுகு  கருடனுடன் பழகுபவன் உயரத்தில் சலனமின்றி பறக்க கற்றுக்கொள்வான்.  நமது முகத்தை கண்ணாடி அப்படியே காட்டுவது போல் நம்மை  நாம் பழகுபவர்களிடமிருந்து நாம்  எப்படியாகி விட்டோம்  என்று அறிந்துகொள்ளலாம். இதுவும் அனுபவம்.  

வளமாக, செழுமையாக, மேன்மையாக இருக்கும்போது நண்பர்கள்  என்று பள்  யாரு என்று லர் நம்மை அறிவார்கள்.  நாம் துயருறும்போது,  மனம் உடைந்தபோது உண்மையான நண்பர்களை நாம் அறிய முடிகிறது.'' 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...