Thursday, October 6, 2022

ASIRVADHAM



 ஆசீர்வாதம் -#நங்கநல்லூர்_J_K_SIVAN


யாராவது நம்மை வாழ்த்தும்போதோ, அல்லது நாம் யாரையாவது வாழ்த்தி, ஆசிர்வதிக்கும்போதோ, ''நூறாண்டு வாழ்க'' என்கிறோம். நூறு என்பது ரொம்ப நீண்ட ஆயுட்காலமாக கலியுகத்தில் நினைக் கிறோம். இதற்கு முந்திய யுகங்களில் செஞ்சரி CENTURY போட்டவர்கள் ரொம்ப பேர் இருந்திருக்கிறார்கள். யுகங்கள் மாறும்போது மனிதர்களின் ஆயுட்காலமும் குறைந்து கொண்டே வருகிறது. கலியுகத்தின் கடைசியில் 20 வயசு என்பதே மனிதனுக்கு தீர்க்காயுசாக இருக்கும் என்று சுக ப்ரஹ்ம ரிஷி பரிக்ஷித்துக்கு சொன்னது நினைவுக்கு வருகிறது.

எங்கள் காலத்தில் லெட்டர் எழுதும்போது கூட சிவி. சிவன் என்று தான் பெயரை குறிப்பிடுவார்கள். எல்லோரையும் சிரஞ்சீவி என்று சொல்வது வழக்கமாக இருந்தது. சிரஞ்சீவி என்றால் அமரன் , மரண
ற்றவன் என்று அர்த்தம். கல்யாண பத்திரிகைகளில், ஆயுஷ் ஹோம, உபநயன பத்திரிகைகளில் கூட சிவி . என்ற அடைமொழி இருக்கும். பெண்களை சௌபாக்யவதி என்று தான் குறிப்பிடுவார்கள். பெரியவர்களை நமஸ்காரம் பண்ணும்போது ''சிரஞ்சீவியா இரு'' என்பார்கள். இப்போது இதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகவோ, மொத்தமாகவோ காணோம்.

ஒரு ஸ்லோகம் நமக்கெல்லாம் பரிச்சயமானது. ஆசீர்வாத மந்திரம். எல்லா விசேஷங்களிலும், வாத்யார் சொல்லி அக்ஷதை போட்டு ஆசிர்வதிப்பது. நிறைய பேர் அதை லக்ஷியம் பண்ணுவதில்லை. ஆகவே அர்த்தம் முழுமையாகவோ, கொஞ்சமோ, தெரியாது.

மந்திர ஸ்லோகம் ரெண்டு வரி தான்.

रोचनो रोचमानः शोभनो शोभमानः कल्याणः |
शतमानम भवति शतायुः पुरुषः शतेन्द्रिय आयुष्येवेन्द्रियेः प्रतितिष्ठति ||

rOchanO rOchamAnaH, sObhanaH sObhamAnaH kaLyANaH |
shathamAnam bhavathi shathAyuH purushaH shatEndriya AyushyEvEndriyE prathitishtathi ||

ரோசனோ ரோசமானஹ, சோபனா சோபமானஹ, கல்யாணஹ
சதமானம் பவதி சதாயுஹ் புருஷஹ் ஸதேந்திரிய ஆயுஷ் ஏவேந்தரிய ப்ரதிதிஷ்டதி

என்ன அர்த்தம்?
தேக ஆரோக்கியத்தோடு நூறு வருஷம்உன் கடமைகளை விடாது செய்து கொண்டு மனம் வாக்கு காயம் எல்லாம் நன்றாக செயற்பட , அழகுடன், ஒளிவீசியபடி, தர்மங்கள் செய்தபடி நீடூழி வாழ்க.

இந்த உடல் எடுத்ததே, இறைவன் அதை கொடுத்ததே, பிறர்க்கு உதவ, உபயோகமாக இருக்க. பிறர் என்று சொல்லும்போது சகல ஜீவராசிகளையும் சேர்த்து. இதம் சரீரம் பரோப காரம் இது தான்.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...