Wednesday, October 23, 2019

MOTHER AND BABY



                                             
தாயும்  சேயும்    J K  SIVAN 

' அம்மா,  அம்மா.......''.
...........................................
  உன்னைத்தான் அம்மா....''
''.................................................''
''என்னம்மா  பேசமாட்டேங்கறே 

''உன்னோடு பெரிய ரகளையா  போச்சுடி  குட்டி. எப்போவும் ஏதாவது கேட்டுக்கிட்டே இருக்கே. பேசாம நீ மனுஷங்களா பொறந்திருக்கலாம். எதுக்கு  அம்மா.. சும்மா ன்னு  நொய்  நொய் ன்னு  பிடுங்கினே  சொல்லு'' தாய் கிளி கேட்டது.

'' ஏன்மா  இந்த மனுசங்க  ஏதாவது  பெரிய  புறந்த நாள் விழா,  பண்டிகை, தீபாவளி,  எலெக்க்ஷன் பொதுக்கூட்டம் ,   அப்படின்னு  என்று  எல்லாரும்  பேசிக்கிறாங்களே  அப்படின்னா  என்ன?

 '' தெரியாது.  நானும்  எல்லா  இடத்திலேயும் மூணு  நாலு நாளா சுத்தி  பார்த்தேன்.   நிறைய  காசை செலவு பண்ணி  படார்  படார் னு பட்டாசு , வாணம்  வெடின்னு சத்தம் போட்டு   கதி கலங்க வைக்கிறாங்க.

'' அம்மா  சில  இடத்திலே நிறைய  பளிச் பளிச்சுன்னு  வெளிச்சம் எல்லாம்  கூட  இருக்கே''.

''ஆமாம்  ஆமாம்.  அதெல்லாம்  மத்தாப்பு வகை போல இருக்கு.  வாணம்  என்கிறாங்க. நிறைய  கலர் கலரா சுறு சுறுன்னு  எரியறது.  மேலே  பறந்து போய்  படார்னு  வெடிக்கிறது.  கலர் கலர்  துண்டுகளாக  சிதறுது.
எங்கும்  போக முடியலே.  புகை  நெஞ்சை  கமருது. இருமல் வருது.

''அம்மா  எனக்கு  பறக்கவே  பயமா  இருக்கே.  

மரத்திலேயே  இருப்போம்னு  பார்த்தா மரமே  இல்லையே.

மறைந்து உக்காரதுக்காக வாவது  இந்த  குச்சிககாடு கிடைச்சதேன்னு  சந்தோஷப்படு.

'' ஏன் மா  இப்படி  நமக்கு  மரமே  இல்லை?.

''நம்ம வீட்டை எல்லாம்  அழிச்சிட்டு  அவங்க  வீடு கட்டிகிட்டா ங்க கண்ணு ''.

மழையிலேயும்  வெயிலில்லே யும் நாம்  அலைஞ்சு  பாதுகாப்பா  ஒரு  இடம்  கண்டுபிடிக்கறது ரொம்ப  கஷ்டம்  இப்போ இல்லையா?.

கொஞ்சம்  அசந்தா  நம்மை  எல்லாம்  பிடிச்சு   வித்துடறாங்க  இல்லேன்னா கொன்னு  தின்னுடுவாங்க.

இன்னும்  கொஞ்ச நாள்  தான்  நாம  இருக்கப்போறோம்.  இப்பவே  நம்ம  கூட்டம்  குறைஞ்சிண்டே வரதே.

ஆனா  அவங்க குழந்தைகளுக்கெல்லாம்  நம்மை  பிடிக்கிறதே.

ஆமாம்.  அந்த  குழந்தைங்க எல்லாம்   பெரியவங்க ளாகரத்துக் குள்ளே  அவங்க மனசெல்லாம்  மாத்திடுவாங்க.  யாராவது  ஒத்தர்  ரெண்டு  பேர்  தான்  நம்மை  பத்தி  கவலைப்படறாங்க.'

'இது  அக்ரமம்  இல்லையா.?

'இல்லை கண்ணு,   இது பேரு  நாகரிக  வளர்ச்சின்னு  சொல்றாங்க '.

'இயற்கையை  அழிச்சு  அவங்க உண்டாக்கற  சட்ட பூர்வ  அநியாயம்  னு  யாரோ ஒரு தாத்தா கூட சொன்னாரே.. நாமளும்  அப்படி  சொல்லலாமா?

'' நாம சொல்லி என்ன பிரயோசனம் சொல்லு குட்டிம்மா. என்னிக்காவது யாராவது நம்மை எல்லாம் பத்தி நினைக்கறவங்க அதிகாரத்தில் இருந்தா  நமக்கு விடிவு காலம் பொறக்காலம்.  நாம  அப்போ இருக்க மாட்டோம் கண்ணு.  ''

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...