Sunday, October 20, 2019

DAMODHARA MONTH




இது தாமோதர மாதம் J.K SIVAN
இது தாமோதரமாதம். கார்த்திக் மாதம் என்றும் பெயருண்டு.இப்படி ஒரு மாதம் இருப்பதே தெரியாதே? என்பவர்களே கேட்டுக் கொள்ளுங்கள் இது பன்னிரண்டு தெரிந்த மாதங்களுக்குள் ஒளிந்து கொண்டிருப்பது. மாயக்கரிஷ்ணன் சம்பந்தப் பட்டது மறைந்து தானே இருக்கும். 14.10. 2019 முதல் 12.11.19 வரை இந்த வருஷம் தாமோதர் மாதம் கிருஷ்ண க்தர்களுக்கு தெரிந்த மாதம்.
வெகு காலமாக கார்த்திகை மாதம் வடக்கே கொண்டாடப்பட்டு வருகிறதே தெரியுமா? இதற்கு தாமோதர மாசம் என்று பெயர். நான் சொல்லாமலேயே, பெயரிலிருந்தே இது யார் சம்பந்தப் பட்டது என்று தெரியாதா? நம்ம கிருஷ்ணன் தான். உரல்லே ஒரு நுனி, இடுப்பிலே ஒரு நுனி கயிறு கட்டப்பட்ட, கட்டுண்ட மாயன் தான் '' தாம உதரன்'' (வயிற்றிலே கயிறு கட்டுண்டவன்). கண்ணினுட் சிறுதாம்பு - மதுரகவி ஆழ்வார் எழுதிய பாசுரம்நினைவுக்கு வரவேண்டுமே!.
எங்கெங்கோ இருந்தெல்லாம் கிருஷ்ண பக்தர்கள் யசோதைக்கும் அவள் இடுப்பில் கிருஷ்ணனுக்கும் நெய் தீபங்கள் ஏற்றும் வைபவம் நிறைந்த மாதம் அது. அவ்வளவு புண்யம் நெய்தீபம் இந்த மாதம் கிருஷ்ணனுக்கு ஏற்றி வழிபட்டால் என்று ரூப கோஸ்வாமி ''மதுர மகாத்மிய''த்தில் குறிப்பிடுகிறார். இவரைப் பற்றி நான் மீரா கதையில்சொல்லியிருக்கிறேனே. இந்த மாதம் கிருஷ்ணன் அருள் சுலபமாக கிடைக்கும் என்று வேதங்கள் பாடுகிறது. விரதம், அனுஷ்டானம், நிறைய நேரம் பஜனை, கீர்த்தனங்களில் நேரம் செலவு செய்யும் மாதம். துளசிக்கும் பசுக்களுக்கும் வழிபாடு செய்வது அதிகம் இந்த மாதத்தில் தான் . இரண்டுமே கிருஷ்ணன் சம்பந்தப்பட்டது இல்லையா. தாமோதராஷ்டகம் தினமும் சாயந்திரம் சொல்லலாம்:
பத்ம புராணத்தில் கிருஷ்ணனே '' எனக்கு துளசி பிடித்த இலை, கார்த்திகை விருப்பமான மாதம், துவாரகா பிடித்த இடம், ஏகாதசி ரொம்ப பிடித்த நாள்' என்கிறார்? ( பத்ம புராணம் உத்தர காண்டம் 112.3)
“சத்ய யுகம் சிறந்த யுகம், வேதங்கள் சிறந்த நூல், கங்கை சிறந்த நீர், கார்த்திகை என்கிற தாமோதர மாதம் சிறந்த மாதம் - கிருஷ்ணனுக்கு உகந்தது ' (ஸ்கந்த புராணம்)
''ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே, ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே'' இது கிருஷ்ணனின் மூல மந்திரம் -- இதை முடிந்தவரை ஜபிக்கலாம்.
கிருஷ்ணன் படத்துக்கு, நெய் தீபம், தூபம், ஏற்றலாம். புஷ்பம், நைவேத்யம், அளிக்கலாம்
''ஒ நாரதா, இந்த தாமோதர மாதத்தில் தினமும் பகவத் கீதை படிப்பவன் ஜனனம் மரணம் இல்லாதவன்''
“இந்த மாதம் விளக்கு தீபம் தானம் செய்வது சிறந்த தானம். இணையற்றது''
பத்ம புராணத்தில் வேத வியாசர் எழுதி, நாரதரிடமும், சௌனக ரிஷியிடமும் சத்யவ்ரத முனி சம்பாஷிப்பதாக வரும் தாமோதர அஷ்டகம் கீழே தந்துள்ளேன். .
namamishvaram sac-cid-ananda-rupam
lasat-kundalam gokule bhrajamanam
Yashoda-bhiyolukhalad dhavamanam
paramrishtam atyantato drutya gopya
'' கோகுல பாலகா, உன் காதில் மகர குண்டலம் பளிச் பளிச் என்று இப்படியும் அப்படியும் ஆடுகிறதே, நீயே சத் சித் ஆனந்த மயமானவன், கோபியர் அசந்த வேளையில் வெண்ணை சட்டியை உடைத்து, வெண்ணெய் திருடியவா, அம்மா யசோதை பார்த்துவிட்டாளே என்று உரல் பின்னால் ஓடி அவளிடம் பிடிபட்டவனே, தாமோதரா, பரமபிரபு, உனக்கு எண்ணற்ற நமஸ்காரங்கள்.
rudantam muhur netra-yugmam mrjantam
karambhoja-yugmena satanka-netram
muhu shvasa-kampa-trirekhanka-kantha-
sthita-graivam damodaram bhakti-baddham
''ஐயோ, அம்மா யசோதையின் கை பிரம்பு ஒங்குகிறதே , அடி சரியாக விழுமே என்று கண்களில் வெள்ளமாக நீர் கசிய, கலங்கி அழுது, கண்ணைக் கசக்கிக் கொண்டு, அவை சிவந்து, சிறிய இரு தாமரைக் கரங்களும் சிவக்க, கண்களில் பயமும் கண்ணீரும் நிரம்பி, பயத்தினால் மார்பு பட பட வென்று துடிக்க, அதனால் கழுத்தில் தொங்கிய மணியாரங்கள், மேலும் கீழும் குலுங்க காட்சி தந்த தெய்வமே, தாமோதரா, உன் இடையில் தாம்புக் கயிற்றோடு நின்றவனே, நீ கட்டுண்டது உன் அன்புத் தாயின் மீது நீ கொண்ட கருணையாலும் பாசத்தாலும் அளவற்ற அன்பினாலும் அல்லவா? எங்கள் மனம் நிறைந்த நமஸ்காரங்களை ஏற்றுக்கொள்..
itidrk sva-lilabhir ananda-kunde
sva-ghoisham nimajjantam akhyapayantam
tadiyeishita-gyeishu bhaktair jitatvam
puna prematas tam shatavrtti vande
கிருஷ்ணா, தாமோதரா, உன் பால்ய சேஷ்டிதங்களால் கோகுலத்தையை ஆனந்த வெள்ளத்தில் மூழ்கடித்தவனே, உன்னைக் கட்டமுடிந்தது உன் பக்தர்களின் அன்பே என்றுகாட்டியவனே, பரமாத்மா, அதிசய உருவே, ஆனந்த ரூபமே, பக்தியின் உச்சமே, நூறு நூறு முறை உன்னை விழுந்து வணங்குகிறோம் தாமோதரா. ரட்சிப்பாய்..
varam deva mokisham na mokishavadhim va
na canyam Vrine ’ham vareishad apiha
idam te vapur natha gopala-balam
sada me manasy avirastam kim anyai
''தாமோதரா, மண்ணரசும் விண்ணரசும் யான் வேண்டேன், எந்த வரமும் நான் கேட்கவில்லை, மோக்ஷமே கூட வேண்டாம், எனக்கு வேண்டியதெல்லாம் உன்னுடைய இந்த சிறியபால கோபாலனாக பிருந்தாவனத்தில் நந்தகுமாரனாக நீ அளித்த இந்த தரிசனம் ஒன்றே என்றும் அழியாமல் என் நெஞ்சில் , இதயத்தில் பதிந்து பளிச்சிட வேண்டும் என்ற ஒன்றே தான். இதைத் தவிர வேறே எந்த சிறந்த வரம் இருக்கிறது?
idam te mukhambhojam atyanta-nilair
vrtam kuntalai snigdha-raktaish ca gopya
muhush cumbitam bimba-raktadharam me
manasy avirastam alam lakisha-labhai
''தாமோதரா, எனக்கு பிடித்த ஒரு காட்சி சொல்லட்டுமா? உன்னுடைய அழகிய தாமரை மலர முகத்தை, சுற்றிலும் சுருள் சுருளாக, அழகிய, கரிய குழல்கள் சூழ்ந்து, இடையே உன்செவ்விய திருமுகத்தை அங்கும் இங்குமாக கொஞ்சம் மறைத்து காட்டி, உன்னை அணைத்து உன் தாய் யசோதை முத்தமாரி பொழிந்து அதனால் வேறு சிவந்த உன் கன்னங்கள், சிவந்த தேன் சிந்தும் இதழ்கள், --ஆஹா மேலே சொல்ல முடியவில்லை, என்ன திவ்ய தரிசனம் இது என் இதயத்தில் பதிந்துவிட்டதே. லக்ஷக்கணக்கான ரூபாய் எந்த லாபமும் இதற்கு சமமாகுமா. எனக்கு தேவையே இல்லை.
namo deva damodarananta viishno
prasida prabho dukha-jalabdhi-m
agnam
krpa-drishti-vrishtyati-dinam batanu
grhaneisha mam agyam edhy akishi-drshy

ஓ தாமோதரா, கோடி நமஸ்காரங்கள் உனக்கு. ஆனந்தா, விஷ்ணு, தேவாதி தேவா, பிரபோ, எனக்கு உன் தயை அருள். கடைக்கண் பார்வை ஒன்றே அது போதுமே. இந்த பாபியை, அஞ்ஞானத்தில் இருந்து, உலக சம்சார துக்க சாகரத்திலிருந்து மீட்டு என் கண் முன்னே தோன்றிடுவாய்..
kuveratmajau baddha-murtyaiva yadvat
tvaya mocitau bhakti-bhajau krtau ca
tatha prema-bhaktim svakam me prayaccha
na mokishe graho me ‘sti damodareha
நீ ஒன்றும் காரணமில்லாமல் கட்டுண்ட மாயன் அல்ல. குபேரனின் புத்ரர்கள் மணிக்ரீவன் , நள கூபரன் ஆகியோருக்கு சாப விமோசனம் தருவதற்காக, கட்டுண்டவன். மறஉரலில் கயிற்றால் கட்டுண்ட சிறுவன். என்னையும் பாபங்களிலிருந்து விடுவித்து உன் பிரேமா பக்தியால் கட்டிப்போடேன். வேறொன்றும் வேண்டேன் மாமாயனே.
namas te ’stu damne sphurad-dipti-dhamne
tvadiyodarayatha vishvasya dhamne
namo radhikayai tvadiya-priyayai
namo ’nanta-lilaya devaya tubhyam
ஒ தாமோதரா, என் முதல் வணக்கம் உனக்கல்ல. உன் அழகிய சிறு வயிற்றை இறுகக் கட்டிய அந்த கயிற்றுக்கு. அது சிறு வயிறா?? சர்வ பிரபஞ்சமே தன்னுள்அடக்கியதல்லவா. அதை கட்டிய கயிறு என்னே பாக்கியம் செய்தது? எனவே தான் அதற்கு முதல் நமஸ்காரம். அடுத்தது அந்த ராதா ராணிக்கு. அவள் உன்னைக் கட்டிப்போட்டவள் அல்லவா. அதற்காக. பிறகு பிறகு, உனக்கு. நீ என்னைக் கட்டிப் போட்டவன் அல்லவா?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...