Thursday, October 24, 2019

ADI SANKARA



ஆத்ம ஞானம் இன்றி என்ன பிரயோஜனம் ?1 J K SIVAN

ஆதி சங்கரர் 18 ஸ்லோகங்கள் அனாத்மா விகரண பிரகரணம் என்று மேலே சொன்னதைப் பற்றி எழுதி இருக்கிறார். அதை அருமையாக நமது நண்பர் ஸ்ரீ பி . ஆர். ராமச்சந்திரன் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.

Labdha Vidhya rajamanya , Thatha kim, Praptha sampath prabhavadayam Thatha kim, Buktha Nari sundarangi, Thatha kim, Yena swamathma naiva sakshathkrutho abhooth. 1

What if he has got education which is honored by kings?
What if he has got wealth and great honour?
What if he has enjoyed a woman with pretty form?
If he is not aware of the knowledge of his own self.

பெரிய பெரிய ராஜாவெல்லாம் கை தட்டி வரவேற்கிற ஏட்டுச்சுரைக்காய் படிப்பால் என்ன பிரயோஜனம்? பணம் மூட்டை மூட்டையா இருந்தால் போதுமா, பட்டம் பதவி உதவுமா? உலகத்திலேயே அழகி மனைவியா கிடைச்சா ஒசத்தியா? நீ யார் என்று முதல்லே தெரிந்து கொள்ளாமல் மற்றதினால் என்னடா பிரயோஜனம்?

Keyuradhyair bhooshitho va , Thatha kim,
Kauseyadhyai aavrutho va, Thatha kim,
Thruptho mrushtanna dheena va, Thatha kim,
Yena swamathma naiva sakshathkrutho abhooth. 2

What if he wears ornaments like the golden bangles?
What if he has got dressed himself in silken cloths?
What if he was satisfied by well prepared feast?
If he is not aware of the knowledge of his own self.

தங்கத்திலேயும் வைரத்திலேயும் ஆபரணமும் உடம்பில் மினுக்கினால் போதுமா? பட்டு பீதாம்பரம் உடலை சுற்றிக்கொண்டால் அது தான் பெருமையா? மூக்கு பிடிக்க விருந்து சாப்பாடு தான் லட்சியமா? உன்னை நீ யார் என்று முதலில் தெரிந்து கொள்ளவில்லையே ?

Drushta nana charu desasthatha kim,
Pushtascheshta bandhu vargha sthatha kim,
Nashtam daridryadhi dukhaam sthatha kim,
Yena swamathma naiva sakshathkrutho abhooth. 3

What if he has visited several pretty countries?
What if he has many well nourished relatives?
What if he has lost the sorrow of poverty?
If he is not aware of the knowledge of his own self.

நான் உலகமுழுதும் பறந்திருக்கிறேன், எல்லா பெரிய மனிதர்களும் என் உறவினர்கள், நண்பர்கள் தான் ஸார், எனக்கு கஷ்டம், துன்பம் வறுமை, பசி என்றால் என்னவென்றே தெரியாதே, என்று மார் தட்டிக் கொள்கிறாயே, முதலில் உன்னைப்பற்றிய அறிவு, ஞானம் கொஞ்சமாவது இருக்கிறதா உன்னிடம்?

Snathastheertha jahnu jadhou sthatha kim,
Dhanam datham dravya ashtashta asankhyam sthatha kim,
Japtha manthraa koteeso vaasthatha kim,
Yena swamathma naiva sakshathkrutho abhooth. 4

What if he has taken bath in sacred waters like Ganga?
What if he has given gifts of 16 kinds several times?
What if he has chanted billions of times the sacred chants?
If he is not aware of the knowledge of his own self.

அடிக்கடி எனக்கு கங்கா காவேரி ஸ்னானம். ஷோடஸ தானம் தர்மம் எல்லாம் நிறைய பண்ற குடும்பம், நானும் நிறைய பண்ணி இருக்கிறேன். எல்லா மந்த்ரமும் அத்துப்படி. தினசரி பாராயணம்...இப்படி எல்லாம் சொல்கிறாயே, உண்மையில் நீ யார் என்று யோசித்திருக்கிறாயா? விடை தெரியுமா?

Gothram samyakh bhooshitham va sthatha kim,
Gathram basmaschaditham va strhatha kim,
Rudrakshadhi sadhatho va sthatha kim,
Yena swamathma naiva sakshathkrutho abhooth. 5

What if all his clan members are well ornamented?
What if his body has been fully applied with ash?
What if he wears sacred beads like Rudraksha?
If he is not aware of the knowledge of his own self.

என் சொந்த பந்தம் எல்லாமே தங்கத்தில் வைரத்தில் ஜொலிக்கிறவர்கள். என்னை பார்த்தாயா, விபூதி பட்டை உடம்பு பூரா. கழுத்திலே கையிலே மார்பிலே தலையிலே ருத்ராக்ஷம் சுத்திண்டிருக் கிறேனே பார்க்கலியா நீ?
''சரிப்பா, நீ சொல்றதெல்லாம் கேட்டேன். நான் ஓரே ஒரு கேள்வி கேக்கறேன் பதில் சொல்லு. நீ யார் என்று உனக்கு தெரியுமா?''
(தொடரும் )

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...