Saturday, October 5, 2019

AINDHAM VEDHAM



ஐந்தாம் வேதம்  J K  SIVAN 
மஹாபாரதம் 
                                                   பூமி பாரமும்  மரணதேவனும் 
                                                                       

குருக்ஷேத்திர யுத்த பூமியில் பிணங்கள்  எரிக்கப்பட்டு, ரத்த ஆறு ஒருவாறு  மறைந்து, அமைதி நிலவிக்கொண்டு இருக்கிறது. பிணம்தின்னி பறவைகளோ, விலங்குகளோ இறை தேடி வேறு எங்கோ சென்றுவிட்டன. ஒரு இடத்தில் பீஷ்மர் மட்டும் அம்பு படுக்கையில் இன்னும்  சில நாட்களுக்கு காத்திருக்கிறார். அவர் மனதில் இப்போது மறைந்த கௌரவர்களோ, தனது ராஜ்ய மேற்பார்வை பொறுப்போ எதுவுமில்லை.  மரணத்திற்காகவே மட்டும் காத்திருப்பவர்.   அவருக்கு  எதிரே  யுதிஷ்டிரன் ஒரு சீடனாக, மாணவனாக அவர் அறிவுரைகளை கேட்டு பின் பற்ற தயாராக நிற்கிறான். எவ்வளவோ சொல்லி ஆயிற்று இன்னும் சிலது தான் சொல்லவேண்டியிருக்கிறது. இதற்கிடையே யுதிஷ்டிரன் மனம் இறந்து போன குடும்பத்தார், உறவினர், நண்பர்கள் மீதே லயித்திருக்கிறது. தானே அவர்கள் மறைவிற்கு காரணம் என்ற எண்ணம் இன்னும் முழுதுமாக  அகலவில்லை என்று புரிந்துகொண்டு ஒரு கதை சொல்கிறார்.

யுதிஷ்டிரா இப்போது நான் சொல்லப்போவது உன்னை தெளிவு படுத்த. உன் நிலையில் ஒரு அரசன் இருந்ததை பற்றி: கேள்;

''க்ரித யுகத்தில் அனுகம்பகன் என்று ஒரு ராஜா. பெரிய தேர், யானை குதிரை சேனை இருந்தும் எதிரிகளால் தோற்கடிக்கப் பட்டு அடிமையாகிறான். அவன் மகன் ஹரி பெயருக்கேற்றபடி நாராயணன் போல் சக்தி கொண்டவன் என்று புகழப்பட்டாலும் போரில் மரணம் அடைகிறான். அனுகம்பகன் துயரத்தோடு வாழ்க்கை வெறுத்து காட்டில் அலையும்போது நாரதரை சந்திக்கிறான். தனது வீழ்ச்சியை, புத்ர சோகத்தை அவரிடம் சொல்கிறான்.

''அனுகம்பகா, துயரம் வேண்டாம், விதியை மாற்றமுடியாது. நான் கேள்விப்பட்ட ஒரு விஷயம் உனக்கு சொல்கிறேன் கேள் என்று நாரதரும் ஒரு நிகழ்ச்சியை சொல்கிறார்.

பிரபஞ்சத்தில் தான் படைத்த ஜீவன்கள் பெருகிவிட்டன. எப்படி சமாளிப்பது என்று பிரமனுக்கு ஒரு சோதனை. மேன் மேலும் ஜீவராசிகள் தானாகவே பெருகி  வருகிறதே எப்படி அவற்றை குறைப்பது? பிரமனுக்கு உயிர்களை அழிக்க எந்த கோபமோ, விருப்பமோ இல்லை. ஆனால் பூமியின் பாரம் தாங்க முடியவில்லையே? ஸம்ஹார மூர்த்தி சிவனை அணுகி வேண்டினான்.

உன்னிலிருந்து ஒரு ஒளி உருவாகி இதற்கு விடை கிடைக்கும் என்று உபதேசம் பெற்று பிரமன் த்யானித்தான். அவன் உடலிலிருந்து ஒரு ஒளி வீசும் பெண் உருவானாள் .  அவள் தான்  மரண தேவதை. கால தேவி. கண்களில் நீரோடு அவள் பிரமனை வணங்கினாள் . ''உயிர்களுக்கு நல்லது செய்ய நினைக்கும் எனக்கு இப்படி ஒரு தண்டனை ஏன்?'' என்றாள் .

இது காலத்தின் கட்டாயம். என் கட்டளையை நிறைவேற்று. உனக்கு எந்த பாபமும் இதனால் சேராது. உயிர்களின் தொடர்ச்சியை ஒரு கட்டத்தில் நிறுத்துவது உன் வேலை'' என்றான் பிரமன். உலகில் மக்கள் நோயுற்று, உடல் உபாதையால் மடிந்தாலும் உன் மேல் தான் பழி விழும். உன் கண்ணீர் துளிகள் அத்தனையும் வித வித நோய்களாக, வியாதிகளாக பூமியில் பரவும். அவற்றால் மக்கள் முடிவு நேரும். இன்னும் உனக்கு இரு சக்திகளை தருகிறேன்.       ''ஆசை''      'கோபம்'' . இந்த இரண்டையும் மக்கள் மேல் வீசு. அவையே அவர்கள் வாழ்வை முடித்து விடும். உனக்கு உதவும். உன்னை தர்ம தேவதை என்று புகழ்வார்களே தவிர கொடியவன், கொடியவள் என்று ஏச மாட்டார்கள்'' என்றான் பிரமன்.

ஆகவே பிறப்பும் இறப்பும் ஏதோ ஒரு அளவில் தொடர்ந்தால் பூமியின் பாரம் ஒரு நிலையில் இருக்கும்'' என்றான் பிரமன்.'' என்று சொல்கிறார்  பீஷ்மர்.

''வைசம்பாயனரே, இந்த  மஹா பாரதம் மிக அழகாக தொடர்கிறது. எனக்கு பீஷ்மர் அடுத்து யுதிஷ்டிரனிடம் சொன்ன விஷயங்களையும் கூறுங்கள்'' என்று ஜனமேஜயன் சொன்னதால்,

''ஜனமேஜயா , மஹாபாரதம் ஒருவர் இருவர் பற்றிய சரித்திரம் இல்லை, சகல புவன சங்கதிகளையும் உள்ளடக்கிக் கொண்டிருப்பது. பீஷ்மர் யுதிஷ்டிரனிடம் சொல்வது அவர் மற்ற ரிஷிகள் சொன்னதை கேட்டு, அறிந்ததாகும். அவற்றை அற்புதமாக அவனுக்கு உபதேசிக்கிறார். அவற்றை சுருக்கமாக சொல்கிறேன். கேள் '' என்கிறார் வைசம்பாயனர்.

மேலே பீஷ்மரை தொடர்ந்து கேட்கப்போ கிறோம் .

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...